இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லதாம்

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லதாம்

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 30 சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - வெற்றி தேடி ஓடுபவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமிது. உங்கள் விடாமுயற்சியால் விரைவில் வெற்றி பெறுவீர்கள். தேவையில்லாத கவலைகளை ஒதுக்கிட வேண்டும். வணிகர்கள் இன்று பெரிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், முக்கிய முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, பருவநிலை காரணமாக ஆரோக்கியம் குறையக்கூடும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனக்குறைவாக இல்லாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

ரிஷபம் - வேலை முன்னணியில், இன்று நீங்கள் நேரத்தை வீணாக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக அலுவலகத்திற்கு நேரம் தவறி செல்வதை தவிர்த்திடவும். இல்லையெனில், உங்கள் வேலையில் சிக்கல் ஏற்படலாம். வணிகர்கள் இன்று பெரிய லாபம் ஈட்ட வலுவான வாய்ப்புள்ளது. எழுதுபொருள் வணிகம் செய்வோர் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீண்ட கால நிதி சிக்கல்களை இன்று தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். இருப்பினும், பேசும் போது வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு கண் தொடர்பான பிரச்சனை எதாவது இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம் - வேலை முன்னணியில், இன்று சில பெரிய மாற்றங்களுக்கு சாத்தியமாகும். அலுவலகத்தில் இடமாற்றம் குறித்த திடீர் அறிவிப்பைப் பெறலாம். வணிகர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். குறிப்பாக, ஏற்றுமதி-இறக்குமதி தொடர்புடையோர், எதிர்பார்த்த லாபத்தை சுலபமாக ஈட்டிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று குடும்பத்தாருடன் வெளியே செல்ல நல்ல வாய்ப்பு கிட்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக நாள். இன்று புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் பிற்பகல் 2:25 மணி வரை

கடகம் - உத்தியோகஸ்தர்கள், அலுவலக வேலைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சிக்கவும். புதிதாக வேலையில் சேர்ந்தோருக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வர்த்தகர்கள் புதிய பங்குகள் குறித்து திட்டமிட்டால் அதற்கான சாதகமான நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தொடர்பான கவலைகள் நீங்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று மிகவும் சோர்வாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

சிம்மம் - வீட்டின் சூழ்நிலை இன்று நன்றாக இருக்காது. சிறு விஷயங்களால் வீட்டில் ஏற்படும் கருத்து வேறுபாட்டால், நீங்கள் மனதளவில் பாதிக்கப்படுவீர்கள். பிரச்சனைகளை அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாள முயற்சி செய்யவும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். மாற்று வேலை தேடுவோருக்கு, இன்று சாதகமான நாளாக இருக்கும். வணிகர்கள், பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளை தவிர்த்திடவும். இன்று நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று பெரிய செலவு செய்யும் மனநிலையில் இருந்தால், தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான மனஅழுத்தம் காரணமாக இன்று ஆரோக்கியம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 10:10 மணி வரை

கன்னி - இன்று உங்கள் வழக்கத்தில் சிறு மாற்றத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். வேலை முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்போர், தங்களது முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். இன்றைய தினம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான தினம். விடாமுயற்சியுடன் படித்தால், நினைத்ததை சாதிக்க முடியும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். சமீபத்திய முதலீட்டால் இரட்டிப்பு லாபத்தை ஈட்டலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையவதால் கவலை அதிகரிக்கும். இன்று மாலை சில நற்செய்திகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

துலாம் - இன்று உங்கள் பேச்சில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் கடுமையான பேச்சால் உங்களது உத்தியோகம் மோசமடையக்கூடும். வணிகர்களுக்கு, இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வேலை தொடர்பான சில நல்ல செய்திகளை இன்று நீங்கள் பெறலாம். துணி வியாபாரம் செய்வோர் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். இன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

விருச்சிகம் - புதிய தொழில் தொடங்குவதில் இருந்துவந்த சிக்கல்களை இன்று சமாளிக்க முடியும். கூட்டு வியாபாரம் செய்வோர், இன்று நிதி நன்மைகளைப் பெற்றிடலாம். வேலை தேடுவோர் இன்று நல்ல முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் இன்று திறந்திடும். பொருளாதார முன்னணியில் இன்று சற்று விலையுயர்ந்ததாக இருக்கும். பழைய பாக்கிகளை செலுத்திட முடியும். பெரிய நிதி பரிவர்த்தனை செய்ய இதற்கு சரியான நேரமல்ல. இன்று வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு அதிகரிக்கும். அவர்களுக்கு போதுமான நேரம் கொடுக்க முயற்சி செய்வது நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

தனுசு - இன்று தனுசு ராசி மாணவர்களுக்கு மிகவும் புனிதமான நாளாக இருக்கும். சமீபத்தில் போட்டி தேர்வுகள் எழுதியிருந்தால், அதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பிற்கான பலனாகும். இன்று வணிகர்களின் கவலை அதிகரிக்கக்கூடும். அதிக மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் திருமணத்திற்கான நேரம் கைகூடி வரும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மகரம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். தேவையற்ற விஷயங்களை விடுத்து, உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்க விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்திடவும். வணிகர்கள் இன்று பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய தினம் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில், பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினல், வீட்டில் இளம் உறுப்பினர்களுடனான உறவு மோசமடையக்கூடும். உங்கள் முடிவுகளுக்கு அவர்கள் உடன்படாமல் போகலாம். இத்தகைய சூழலில், மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு கவலையான முடிவுகளைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கும்பம் - இன்றைய தினம் வர்த்தகர்கள் நன்றாக பயனடையலாம். நிதி நிறுவனத்தில் பணிபுரிவோர் இன்று நல்ல லாபத்தை பெற்றிடலாம். ஊடகங்கள் மற்றும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்திடவும். இன்று பெரிய கடன் வாங்க நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மீனம் - இன்று உங்கள் முதலாளியின் மனநிலை சரியாக இருக்காது என்பதால், சிறிய பணிகளைக் கூட மிகவும் கவனமாகச் செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள், கடின உழைப்பிற்கான நல்ல பலனைப் பெறலாம். வணிகர்கள் லாபம் ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பையும் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறந்த நேரத்தை அனுபவிக்க முடியும். உங்கள் அன்புக்குரியவருக்கு ஒரு நல்ல பரிசை வழங்க இது ஒரு நல்ல நாள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக வழக்கமான உடல் பரிசோதனையைச் செய்யவில்லை என்றால், இன்று அதற்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0