இன்று இந்த ராசிக்காரர்கள் சிந்தித்து செலவழிக்கணும்..

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 24 வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் சிந்தித்து செலவழிக்கணும்..

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - இன்று உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். காலையில் சில நற்செய்திகளால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் சில மோசமான சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பக்கத்தை புத்திசாலித்தனமாக எடுத்துரைத்தால், அது உங்களுக்கு நல்லது. கோபப்படுவதைத் தவிர்க்கவும். வணிகர்கள் சட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். திருமண வாழ்க்கையில் இன்று உங்களுக்கு மிகவும் காதல் நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். இன்று வீட்டாரின் வசதிக்காக சிறிது பணத்தை செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 வரை

ரிஷபம் - இன்று பொருளாதார முன்னணியில் விலையுயர்ந்த நாளாக இருக்கும். இன்று பணம் தொடர்பாக ஒருவரிடம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் பல குறைபாடுகளைக் கண்டறியலாம். எனவே, உங்கள் முழு கவனத்தையும் பணியில் செலுத்தினால் நல்லது. வணிகர்கள் இன்று பெரிய மற்றும் முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சனைகளை தீர்க்க இன்று சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கலாம். சிறிய விஷயங்களில் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் பிடிவாதமான தன்மை உங்கள் உறவில் விரிசலை உருவாக்கக்கூடும். உங்கள் உடல்நிலையைப் பற்றி பேசுகையில், இன்று மன கலக்கம் சாத்தியமாகும். அதனால், உடல் ரீதியாக நன்றாக உணர மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மிதுனம் - இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மிகவும் வருத்தப்படுவீர்கள். இன்று சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் முன்னேற்றம் நிறுத்தப்படலாம். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். பல பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு அழுத்தம் இருக்கும். பொருளாதார முன்னணியில் இன்று நன்றாக இருக்கும். இன்று கூடுதல் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனதைப் பகிர்வதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி இன்று பெற்றோருடன் விவாதிக்கப்படலாம். உடல்நலம் பற்றி பேசினால், அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். மேலும், உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

கடகம் - இந்த நாளில் நீங்கள் மிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். எதிரிகளிடம் விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகளின் சில வேலைகள் பணப்பற்றாக்குறையால் நிறுத்தப்படலாம். இருப்பினும், விரைவில் உங்கள் தொல்லைகள் முடிவுக்கு வரும். எந்தவொரு முக்கியமான வணிக முடிவையும் எடுப்பதற்கு முன்பு, உங்கள் நிதி நிலையை மனதில் கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கையில் பதற்றம் சாத்தியமாகும். வாழ்க்கைத் துணை உங்களிடம் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருப்பார். அவரின மனதை அறிய முயற்சித்தால் நல்லது. உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால், உங்களை நீங்களே அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:15 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

சிம்மம் - இன்று பொருளாதார முன்னணியில் நல்ல நாள். நீண்ட காலமாக சிக்கித் தவித்த எந்தவொரு நிதி ஆதாயத்தையும் அடைய முடியும். அலுவலகத்தில் சாதகமான சூழல் இருக்கும். இன்று எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சில நல்ல அனுபவங்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நிம்மதியாக நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாட்டை சமாதானப்படுத்த முயற்சிப்பது நல்லது. காதல் விஷயத்தில், இன்று மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று கலவையான முடிவுகளைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 9:20 மணி வரை

கன்னி - தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் நீங்கள் வரும் நாட்களில் மிகப்பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வணிகர்கள் இன்று பெரிய நிவாரணத்தைப் பெறலாம். முக்கியமான வேலையில் வரும் தடைகள் நீங்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு குறைந்து, கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். உங்கள் நடத்தை சீரானதாக வைத்திருக்க வேண்டும். கோபத்தில் எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 முதல் மாலை 3:40 மணி வரை

துலாம் - நிதி நிலையில் ஏற்றம் காண முடியும். திடீரென்று சில பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையின் நிலைமை பதற்றமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் வீண் விவாதங்கள் ஏற்படலாம். உங்கள் திருமண வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை இன்று புரிந்து கொள்ள முடியும். உங்கள் துணை உங்களுக்காக ஏதாவது இன்ப அதிர்ச்சியை வழங்கலாம். அது உங்களிடையே உணர்ச்சி ரீதியான தொடர்பை அதிகரிக்கும். நாளின் இரண்டாவது பாதியில், திடீரென்று ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம். உங்கள் சந்திப்பு மிகவும் வேடிக்கையாக இருக்கும். வியாபாரிகள், இன்று தங்கள் எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாதிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 மணி முதல் 12:25 மணி வரை

விருச்சிகம் - இன்று உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று வீட்டில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீட்டின் சூழ்நிலை இன்று பதற்றமாக இருக்கும். மனத் தொல்லைகள் உங்களை ஆதிக்கம் செலுத்தும். இதனால் வேலையில் கவனமாக உணர மாட்டீர்கள். இன்று எந்த முக்கியமான முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பொருளாதார முன்னணியில், இன்று நன்றாக இல்லை. உங்கள் நிதி நிலை ஆபத்தானதாக இருக்கும். அன்றாட பணிகளை முடிப்பதில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடலாம். இன்று வேலை முன்னணியில் ஒரு கலவையான நாளாக இருக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிதும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 10:10 மணி வரை

தனுசு - நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை விரும்பினால், உங்கள் வாழ்க்கைத் துணையை மதிக்க வேண்டும். அவர்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் குளிர்ந்த மனதுடன் பணிபுரிந்தால், வரக்கூடிய தொல்லைகளைத் தவிர்க்கலாம். உங்கள் நிதி நிலை பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு தேவையை விட அதிகமாக செலவிட முடியும். மற்றவர்களை கவர அதிக பணத்தை செலவிடுவதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் இருக்கும். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் முதலாளி உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார். மேலும், உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மகரம் - உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு ஒரு பரிசை வழங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். இருப்பினும், உங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் செல்ல வேண்டாம். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் அலுவலகத்தில் வேலையை வேகமாக முடிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் முக்கியமான பணி முழுமையடையாது. வணிகர்கள் இன்று திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பயணம் மிகவும் புனிதமானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். மேலும் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:40 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கும்பம் - நீண்ட காலமாக முடிக்கப்படாத எந்த வேலையையும் முடிப்பதன் மூலம் இன்று உங்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். உங்கள் வழியில் வரும் தடையை இன்று அகற்றலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவர்கள் உங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள். வீட்டின் பெரியவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நிதி பற்றி பேசினால், வருமானத்தை விட அதிகமாக செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. நிதி விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. சிந்திக்காமல் பணத்தை செலவழிப்பது வரும் நாட்களில் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை

மீனம் - உடல்நிலையைப் பற்றி பேசுகையில், அதிகரிக்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். வரவு செலவு சமநிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள், முதலாளியின் உதவியுடன், முக்கியமான சில வேலைகளை முடிக்கலாம். சக ஊழியர்களுடன் உங்களுக்கு நல்லுறவும் இருக்கும். வணிகர்கள் இன்று எந்த புதிய வேலையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இன்று நிதி இழப்பு ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். உங்கள் பெற்றோரின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 மணி முதல் மாலை 4:00 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0