நெருக்கமான ஒருவரால் இந்த ராசிக்காரர்கள் இன்று ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது!

இன்றைய தினம் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

நெருக்கமான ஒருவரால் இந்த ராசிக்காரர்கள் இன்று ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது!

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 23ம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்றைய தினம் வேலை முன்னணியில், சில கலவையான முடிவுகளைப் பெறலாம். மேலும், உங்களது வேலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் ஏதேனும் பெரிய ஒப்பந்தம் செய்ய போகிறீர்கள் என்றால், பேசும் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக இழப்பை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு இணக்கமாக இருக்கும். பெரிய பண பரிவர்த்தனைகளை இன்று தவிர்த்திடவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, மாறிவரும் வானிலை காரணமாக சில சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட எண்: மாலை 6:45 மணி முதல் 10 மணி வரை

ரிஷபம் - இன்று மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களது பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லையெனில், உங்களது கனவு முழுமடையாது. பண வரவிற்கான வலுவான வாய்ப்புள்ளது. பண இழப்பிற்கும் வாய்ப்பிருப்பதால், கவனமாக இருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவு எடுக்கவும். அரசு வேலையில் பணிபுரிவோர் இன்று அலுவலகத்தில் சில பெரிய செய்திகளைப் பெறலாம். இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உள்ளது. இன்று வணிகர்கள் நன்கு பயனடைவர். வாழ்க்கைத் துணையுடன் சிறு சண்டைகள் உருவாகலாம். கோபத்தை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

மிதுனம் - இன்று வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். சில பெரிய மற்றும் முக்கிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். துணி வியாபாரிகளுக்கு நல்ல பொருளாதார நன்மை பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களது செயல்திறன் நன்றாக இருக்கும். அதனால், உயர் அதிகாரிகள் திருப்தி அடைவர். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்டபடி செலவுகளை மேற்கொள்வது நல்லது. பெற்றோரின் உடல்நலம் நன்றாக இருக்கும். உங்களது ஆரோக்கியத்தை பற்றி பேசினால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்று கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்  - அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலைகளில் காட்டும் அலட்சியத்தால் சிக்கல்களை சந்திக்கக்கூடும். உயர் அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்பு நிகழும். வணிகர்கள், ஆபத்து நிறைந்த முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். பணப் பற்றாக்குறை காரணமாக, சில முக்கிய பணிகள் தடைப்படலாம். குடும்ப வாழ்க்கையில் மனஅழுத்தம் உண்டாகக்கூடும். வீட்டு பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். ஆவேசப் பேச்சுக்களை தவிர்க்கவும். இன்று ஆரோக்கியத்தை பொறுத்தவரை, காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

சிம்மம் - இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மிகுந்த கவனம் தேவை. பிறரை கண்மூடித்தனமாக நம்புவதை முதலில் தவிர்த்தாக வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரால் நீங்கள் இன்று ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பெரிய தொழிலதிபராக இருந்தால், உங்களது ஊழியர்களை நன்றாக நடத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களது அதிகப்படியான கோபம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அலுவலகத்தில் பிறரைப் பற்றி கிசுகிசுப்பதை தவிர்த்திடுங்கள். ஊடகங்கள், அரசியல் அல்லது கல்வியுடன் தொடர்புடைய மக்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்களது வாழ்க்கைத் துணையின் மனநிலையில் இன்று ஏற்ற இறக்கங்களை காணலாம். அன்புக்குரியவருடன் அதிக நேரம் செலவிட முயற்சியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

கன்னி - நேர்மறையான எண்ணம் உள்ளவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் ஆதிக்கம் செலுத்தும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் நடத்தை சரியாக இருக்காது. இதன் காரணமாக இன்று மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். இன்று வணிகர்கள் சில நிதி தடைகளை சந்திக்க நேரிடும். பணப் பற்றாக்குறை காரணமாக சில முக்கிய வேலைகள் முழுமையடையாமல் போகலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் பெற்றோரின் பாசம் மற்றும் ஆதரவு உடனிருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், அதிகரிக்கும் மன கவலை காரணமாக, உங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் 10:20 மணி வரை

துலாம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. உடல்நலம் குறித்த விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தவதன் மூலம், அதிலிருந்து சுலபமாக வெளிவரலாம். வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால் இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்காது. இதுபோன்ற நேரங்களில், முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சொந்த தொழில் தொடங்க விரும்பினால், நிதி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வாய்ப்புள்ளது. குழந்தைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பண வரவு திருப்தியளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

விருச்சிகம் - அலுவலகத்தில், அதிகப்படியான பணிச்சுமை காரணமாக சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உயர் அதிகாரிகள். உங்களது வேலையில் பல குறைபாடகளைக் காணலாம். எனவே, வேலைகளை விடாமுயற்சியுடனும், கவனத்துடனும் முடிக்க முயற்சிக்கவும். வணிகர்கள், தங்களது எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்பெறும். உடல்நிலையைப் பொறுத்தவரை, தொடர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்களது உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

தனுசு - உங்களுக்கு ஏதேனும் சங்கடம் அல்லது சந்தேகம் இருந்தால், இன்று உங்களது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்திடும். மனரீதியாக இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள். வேலையைப் பற்றிப் பேசினால், அலுவலக வேலைகளில் சில தடைகள் இருக்கலாம். தடைகள் இருந்தபோதிலும், இன்று எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். வாழ்க்கைத் துணையுடன் கசப்பு அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவரை அன்பாக நடத்த வேண்டும். பணத்தின் அடிப்படையில் நல்ல முடிவுகளைப் பெறலாம். தடைப்பட்ட பணத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம் - இன்று குழந்தைகளின் கல்வி குறித்த கவலை அதிகரித்து காணப்படும். மேலும், குழந்தைகளின் கல்வி மற்றும் தொழில் தொடர்பான முக்கியமான மற்றும் உறுதியான முடிவுகளையும் எடுக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று வருமானம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது நிலைமை வலுவாக இருக்கும். உங்களது செயல்திறன் குறித்து உயர் அதிகாரிகள் மிகவும் திருப்தி அடைவர். இருப்பினும் உங்களது சகாக்களுடன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவர்கள் உங்களது பெயரை கெடுக்க முயற்சிக்கக்கூடும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், தினமும் லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்  - இன்று நீங்கள் அதிகப்படியான கோபத்தையும் ஆணவத்தையும் தவிர்க்க வேண்டும். தேவையற்ற குழப்பம் காரணமாக உங்கள் மன அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். நீங்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதிக பணிச்சுமை காரணமாக, இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வேலை வழங்கப்பட்டால், அதை தீவிரமாக முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகள், இன்று புதிய வணிக முன்மொழிவைப் பெற்றால், முடிவை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். அவசரமாக எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். பின்னர் வருத்தப்பட வேண்டியிருக்கும். பண நிலைமை வலுவாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று உங்களுக்கு ஒவ்வாமை அல்லது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

மீனம்  - இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிய திட்டங்களைத் தொடர நேரம் சாதகமானது. வலுவான மன உறுதியுடனும் முழு நம்பிக்கையுடனும் வேலையைச் செய்தால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று நன்மை பயக்கும். இன்று கூடுதல் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பைப் பெறலாம். உங்களுக்கு நல்ல மன மற்றும் உடல் ஆரோக்கியம் இருக்கும். அதனால், உங்களது வேலைகளை இரு மடங்கு வேகமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இன்று நல்ல பொழுதை அனுபவிப்பீர்கள். இன்று மாணவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0