இந்த 2 ராசிக்காரங்கஇன்று எதையும் யோசிச்சு செய்யணும்.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க!

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த 2 ராசிக்காரங்கஇன்று எதையும் யோசிச்சு செய்யணும்.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க!

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 22 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம் - அலுவலகத்தில் இன்று பணி சுமை அதிகரித்து காணப்படலாம். வேலையோ அல்லது வணிகமோ, மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். முறையாக திட்டமிடுவதன் மூலம் சரியான நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும். அதனால், அழுத்தமும் குறையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்காக, வணிகர்கள் நிறைய செயல்பட வேண்டும். குடும்பத்தாருடனான உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக, அன்புக்குரியவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். அதேசமயம், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி, ஓய்வெடுக்க சிறிது நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம் - விவாதங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையெனில், உங்களது பொன்னான நேரம் வீணாக செலவாகலாம். இன்றைய தினம், எதை செய்தாலும் மிகவும் யோசித்து செய்யுங்கள். வேலை முன்னணியில் எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாவிட்டாலும், பொறுமையாக உங்களது வேலையை மட்டும் செய்யுங்கள். உங்களது கடின உழைப்பிற்கான பலன் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவிழக்க நேரிட்டால், அதனை சரிசெய்யும் முயற்சியில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்படும். அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வது நல்லது. இன்று பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

மிதுனம் - வேலை முன்னணியில் இன்று சில சிக்கல்கள் இருக்கலாம். அலுவலகத்தில் முக்கியமான சில வேலைகள் குறுக்கிடப்படலாம். இருப்பினும், நீங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இதனால், உங்களது வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைப் பெற முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணையில் மனநிலை சரியாக இருக்காது. எந்தவொரு சர்ச்சைக்குரிய பிரச்சனையிலும் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. இது தவிர, உங்கள் அன்புக்குரியவரின் ஆரோக்கியம் பலவீனமடைய வாய்ப்புள்ளது. சிந்தனையுடன் செலவு செய்தால் எந்த பணப் பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அதிகப்படியான கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 முதல் 10 மணி வரை

கடகம் - வேலை முன்னணியில், இன்று நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்களது பணி பங்குச் சந்தையுடன் தொடர்புடையது என்றால், இன்று நீங்கள் மிகப்பெரிய லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. மறுபுறம், இன்று அலுவலகத்தில் நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே, உங்களது கடினமாக உழைப்பினால், நிதி சார்ந்த பெரிய கவலை நீக்கப்படும். ஒரு சிறிய கடனை செலுத்துவதில் இன்று நீங்கள் வெற்றி காணலாம். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். உடல்நிலையைப் பொருத்தவரை, இன்று நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம் - 21.12.2020 மாலை 04.29 மணி முதல் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. எனவே, இந்த நாளில் கவனம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். மேலும், மிகச்சிறிய பணியைக் கூட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் முடிக்க முயற்சி செய்யுங்கள். இன்று கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், சில தவறான முடிவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அரசு வேலைகளில் பணிபுரிவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபர் என்றால், உங்களது வணிக முடிவுகளை மிகவும் சிந்தனையுடனும் புத்திசாலித்தனமாகவும் எடுக்க வேண்டும். இன்று நீங்கள் அவசரப்பட்டால், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான எந்தவொரு கவலையும் உங்களை அண்டாது. உடல்நலம் பற்றி பேசுகையில், சாப்பிடும் உணவு காரணமாக இன்று சில சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:40 மணி வரை

கன்னி - இன்று எந்தவொரு கவலையும் இல்லாமல், மனதானது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறது. ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த உங்களுக்கு இன்று வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இன்றைய தினம் சாதாரணமாக இருக்கும். உங்களது அனைத்து பணிகளுடம் சீராக முடிவடையும். அதனால், உயர் அதிகாரிகளின் ஆதரவை பெற்றிட முடியும். வணிகர்கள் இன்றைய தினம் நிதி நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக உங்கள் பணி இறக்குமதி ஏற்றுமதியுடன் தொடர்புடையதாக இருந்தால், இன்று உங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. சொற்களை பார்த்து பயன்படுத்துவதன் மூலம், வாழ்க்கைத் துணையுடனான சண்டைகளை தவிர்த்திடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம் - இன்று, வாழ்க்கைத் துணையுடனான சண்டைகள் காரணமாக நீங்கள் சோகமாக காணப்படுவீர்கள். இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் உங்களை நீண்ட காலமாக விலக்கி வைத்திருக்கின்றன. மற்றொரு வாய்ப்பு கொடுப்பதும், தூரத்தை குறைத்திட முயற்சிப்பதும் நல்லது. அலுவலகத்தில் உங்களிடம் வழங்கப்பட்ட பொறுப்புகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலும், நிதி நிலைமைகளை மேம்படுத்த நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. இன்றைய தினம் மேற்கொள்ளும் பயணங்களால் நன்மை பயக்கும். உடல்நிலையில் சிறிது அக்கறை செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் 4:20 மணி வரை

விருச்சிகம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வேலையை எளிதாக முடிக்க முடியும். உங்கள் முதலாளி மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வணிகர்கள் தங்களது தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்க இது ஒரு நல்ல நேரம். இதில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். நிதி நிலை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையில் காதல் மற்றும் பாசம் நிறைந்திருக்கும். உங்கள் அன்பக்குரியவருடன்யுடன் அழகான மாலைப்பொழுதை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

தனுசு  - உறவினர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மாலைக்குள் எல்லாம் சரியாகவிடும். வெளியே செல்லும் போது உங்கள் வாழ்க்கைத் துணையை சரியாக நடத்துங்கள். பொறுப்பற்ற செயல்களை தவிர்க்காவிட்டால் உறவு கெட்டுப்போகக்கூடும். பொருளாதார முன்னணியில், நாள் நன்றாக இருக்கும். இன்றைய முதலீடு உங்களது வளர்ச்சியையும் நிதி பாதுகாப்பையும் அதிகரிக்கும். அலுவலகத்தில் முக்கியமான சில பணிகள் தடைப்படலாம். இத்தகைய சூழலில் வருத்தப்படுவதற்குப் பதிலாக, பிரச்சனைகளை தொடர்ந்து சமாளித்து வேலையை செய்து முடிக்க முயற்சிக்கவும். இன்று ஓய்வெடுக்க போதுமான அளவு நேரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 33

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

மகரம் - இன்று நீங்கள் திடீரென்று சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். நேர்மறையான மற்றும் வலிமையான சிந்தனையின் அடிப்படையில், மிகப்பெரிய சிரமங்களை கூட எளிதாக சமாளிக்க முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மனசோர்வை உணர்ந்தால், நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். திருமணமானவர்கள் தங்களது வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவும் கிடைக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் சிறந்த நாளாக இருக்கும். இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். வேலை முன்னணியில், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். இன்று ஆரோக்கியம் அவ்வளவு நன்றாக இருக்காது. மேலும், கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 முதல் 9 மணி வரை

கும்பம்  - இன்று நீங்கள், வருமானத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால், வரவிற்கு ஏற்ப செலவுகளும் அதிகரிக்கக்கூடும். காதல் விவகாரத்தில் இன்று சற்று பதற்றமான சூழல் இருக்கும். அன்புக்குரியவருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்து காணப்படுவதை உணருவீர்கள். அத்தகைய சூழலில், அன்பு மற்றும் புரிதலுடன் வாழ்க்கைத் துணையின் மனதை அறிய முயற்சியுங்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். இதனால் கடினமான சூழ்நிலைகளில் கூட நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இன்று அலுவலகத்தில், சில பணிகள் முழுமையடையாமல் போகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 9:45 மணி வரை

மீனம்  - குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறந்தோர் பற்றிய கவலைகள் இன்று முடிவடையும். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முடியும். மறுபுறம், இன்று குறிப்பிட்ட விஷயத்தில் குழப்பமான நிலை நீடிக்கும். மேலும், சரியான முடிவை எடுக்க முடியாவிட்டால், தயவுசெய்து ஒரு அனுபவமுள்ள நபரை அணுகி ஆலோசனை பெறவும். வாழ்க்கைத் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். காதலிப்பவர்கள், தங்களது அன்புக்குரியவரின் எண்ணங்களை புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். இன்று அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும் மற்றும் உங்கள் உயர் அதிகாரியின் மனநிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0