இன்று இந்த ராசிக்காரங்க பொறுமையா இல்லன்னா பிரச்சனையை சந்திப்பாங்க...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரங்க பொறுமையா இல்லன்னா பிரச்சனையை சந்திப்பாங்க...

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 6சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால், கவனமாகவும், நிதானமாகவும் செயல்படவும். குடும்ப வாழ்க்கையில் இன்று சில மன அழுத்தம் சாத்தியமாகும். அதிகரித்து வரும் குடும்ப பிரச்சனையால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலுக்கு இடையே சமநிலை கொண்டு வர முயற்சிப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பெரிய செலவுகள் செய்யும் திட்டத்தை கைவிடவது நல்லது. உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. மன அழுத்தம், சோர்வு காரணமாக ஆரோக்கியம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த நாளில் நல்ல பலன்களைப் பெறலாம், குறிப்பாக பொறியியல் படிப்பவர்கள், வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. மாற்று வேலை சாத்தியமாகும். அரசு பணியாற்றுவோருக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வணிகர்கள் தங்கள் எதிரிகளுடன் கவனமாக இருக்க வேண்டும். சில வேலைகளில் அவர்கள் ஒரு பெரிய தடையாக இருக்க முயற்சி செய்யலாம். இன்று பணத்தின் அடிப்படையில் கலவையான முடிவுகளாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் நடைப்பயணத்திற்கு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்று விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

மிதுனம் - எதிர்பார்த்த முடிவுகளை பெற வேண்டுமெனில், பொறுமையுடன் இருக்க வேண்டிய நேரமிது. உங்களது கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவதற்கான நேரம் வந்து விட்டது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணை அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். நிதி நிலைமை வலுப்பெறும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு காதுகள் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம் - திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் இருக்கும். இன்று சிறிய விஷயத்திற்காக வாழ்க்கைத் துணையுடன் ஒரு பெரிய சண்டை ஏற்படகலாம். உங்கள் மனநிலையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கவும். காதல் வாழ்க்கையில், துணையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவருடன் ஒரு சிறந்த நேரத்தை பெறுவீர்கள். நிதி நிலைமையில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் சற்று அதிகரிக்கக்கூடும். வேலை சுமை இன்று அதிகமாக இருக்கலாம். உங்கள் எல்லா வேலைகளையும் அமைதியான மனதுடன், திட்டத்தின் படி முடிக்க முயற்சிப்பது நல்லது. இன்று சிறு வணிகர்கள் மிகவும் பயனடையலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:35 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்புள்ளது. இன்று, வணிகர்கள் பெரும் நிவாரணத்தைப் பெற முடியும். எந்தவொரு நீண்டகால சட்ட சிக்கலில் இருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் எந்தவொரு பெரிய நிதி பரிவர்த்தனையும் செய்யலாம். இது தவிர, சிறிய முதலீடுகளைச் செய்வதற்கும் நல்ல நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று உங்கள் தந்தை சொத்து குறித்து ஒரு முக்கியமான முடிவை எடுக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை இருக்கும். காதல் வாழ்க்கையிலும் நிலைமைகள் சாதகமாகத் தெரிகிறது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி  - கூட்டு வியாபாரிகள், தங்கள் கூட்டாளருடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இன்று, தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர் நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நாளாக இருக்கப்போகிறது. உங்கள் சிறந்த உழைப்பிற்காக அலுவலகத்தில் பெரிய மரியாதையைப் பெறலாம். மாற்று வேலை பற்றி யோசிப்போருக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணை மீது அதிக அக்கறை செலுத்தினால், அவர்களின் ஆரோக்கியம் முன்னேறும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்  - மனம் மகிழ்ச்சியாக இருக்கும், இன்று நீங்கள் மன அழுத்தமில்லாமல் இருப்பீர்கள். அலுவலகத்தில், கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் எல்லா வேலைகளையும் முடிப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு, இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். சிறந்த வாய்ப்பு தேடி வரலாம். வணிகர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் சில வேலைகளில் ஒரு பெரிய தடையாக இருக்கலாம். நாளின் இரண்டாம் பகுதியில் இந்த சிக்கல் முடிவுக்கு வரும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வரவிற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் பற்றிப் பேசும்போது, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். புரிதலும் அதிகரிக்கும்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம் - நீங்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவராக இருந்தால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நேரத்தில் படிப்புகளில் சிறிது கூட கவனக்குறைவாக இருக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள், தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குறிப்பாக அரசு பணிபுரிவோர் இன்று அலுவலகத்தில் சில நல்ல தகவல்களைப் பெறலாம். விரும்பிய உயர் பதவியை கூட பெறலாம். இன்று, வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையக்கூடும். உங்கள் தாயின் உடல்நிலை இன்று ஓரளவு பலவீனமாக இருக்கும். மருத்துவர்களுக்கும் மருந்துகளுக்கும் நிறைய பணம் செலவிடப்படலாம். வாழ்க்கைத் துணையுடன் மோசமான உறவைக் கொண்டிருக்கலாம். பேசும் போது சிந்தனையுடன் வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு - வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படைத்தன்மை இருப்பது மிகவும் முக்கியம். காதல் வாழ்க்கையில் இன்று ஒரு அழகான திருப்பம் ஏற்படலாம். பணம் நல்ல நிலையில் இருக்கும். வீட்டு அலங்கார மாற்றங்களைச் செய்ய நீங்கள் சில பொருட்களை வாங்கலாம். இன்று வேலை முன்னணியில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். மேலும், இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு ஏதேனும் இதய நோய் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

மகரம் - தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி உங்கள் முக்கிய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். இன்று சில எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகள் அனைத்தையும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்க முடியும். சமீபத்தில் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இன்று உங்கள் மூத்த அதிகாரிகளால் பாராட்டப்படலாம். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மர வணிகர்கள் தங்கள் பொருளாதார முடிவுகளை கவனமாக எடுக்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வழக்கமான காரணங்களால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாது. காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு சில பதற்றம் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 முதல் மதியம் 12:45 மணி வரை

கும்பம் - வணிகர்கள் இன்று நீண்ட தூர பயணத்தைத் தவிர்த்திடவும். துணி வணிகர்கள் இன்று சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். தடைப்பட்ட பணத்தை திடீரென பெறுவதன் மூலம் பெரிய கவலை நீக்கும். சொத்து தொடர்பான லாபத்திற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். குறிப்பாக பெற்றோரிடமிருந்து நீங்கள் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று, நீங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ஒரு அழகான ஆச்சரியத்தைப் பெறலாம். உங்கள் காதலை வெளிப்படுத்த விரும்பினால் இன்றே அதற்கு உகந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:40 மணி முதல் இரவு 10:05 மணி வரை

மீனம் - இன்று தொழில் மற்றும் கல்வித் துறையை சேர்ந்தவர்கள் கடுமையாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இன்று அதற்கு சாதகமான நாள். நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான கதவுகளைத் திறக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தந்தையின் உடல்நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான காதலும். புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கியம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு நல்ல மனநிலையில் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0