இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 02 செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் நீண்ட கால மன அழுத்தம் நீங்குவதற்கான வாய்ப்பு அதிகம். மாற்று வேலை பற்றி சிந்திப்பவர்கள், இன்று ஒரு சிறந்த சலுகையைப் பெறலாம். வணிகர்கள் பணத்தின் அடிப்படையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக இன்று பெரிய நிதி பரிவர்த்தனை செய்தால் மிகவும் கவனமாக இருக்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். ஒவ்வொருவரின் மனநிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மறக்கமுடியாத நாளாக அமையும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

ரிஷபம் - உங்கள் உடல்நலம் குறித்து கவனக்குறைவாக இருக்காதீர்கள். இல்லையெனில் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழல் பதற்றமாக இருக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் நடத்தை உங்களுக்கு நல்லதாக இருக்காது. பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண வரவு இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வரவிற்கு ஏற்ப செலவிடுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், தானிய வர்த்தகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற முடியும். அதே நேரத்தில், மரம் மற்றும் இரும்பு வர்த்தகர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற மாட்டார்கள். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் மிகச்சிறிய வேலையை கூட கவனமாக செய்ய முயற்சி செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம் - வீட்டு வசதிக்களுக்காக இன்று நிறைய செலவு செய்யலாம். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிதி நிலைமைகள் வலுவாக இருக்கும். வணிகர்களுக்கு இன்று நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பு கிட்டும். பெரிதும் பயனடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கக்கூடும். எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு ஆழமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு சண்டை இருக்கலாம். ஆனால் விரைவில் எல்லாம் சரியாகும். உடல்நலம் பற்றி பேசினால், எண்ணெயில் வறுத்த அல்லது காரசாரமான உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10:20 மணி வரை

கடகம் - வியாபாரிகள் நல்ல லாபம் பெற வேண்டுமெனில், உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சில நல்ல சலுகைகளை வழங்குவது உங்களுக்கு பயனளிக்கும். இலக்கு அடிப்படையிலான வேலை செய்வோர், இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான முடிவுகளைத் தரும். வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் அதிகரிக்கும் செலவுகளால் மன அழுத்தம் உயரும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். பெற்றோரின் பாசமும் ஆசீர்வாதமும் பாதகமான சூழ்நிலைகளில் கூட உங்களுக்கு தைரியத்தை அளிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இனிமையை அதிகரிக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், நீங்கள் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், போதுமான ஓய்வு எடுப்பதோடு, சரியான நேரத்தில் மருந்துகளை எடுக்க மறக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. அலுவலகத்தில் உங்கள் கவனக்குறைவு, மனநிலையை கெடுத்துவிடும். உங்களுக்கு சில முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால், சிறந்ததை வழங்க முயற்சிக்கவும். முன்னேற்றத்தின் புதிய வழிகள் உங்களுக்காக விரைவில் திறக்கப்படும். வணிர்களுக்கு இன்றைய தினம் வீணாக போக வாய்ப்புள்ளது. பண நிலைமை நன்றாக இருக்கும். வரவிற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

கன்னி  - இன்று உங்கள் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றலால் சூழப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பல முக்கியமான பொறுப்புகள் இருக்கும். எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிப்பது நல்லது. இன்று, உங்கள் முதலாளி கடின உழைப்பை கவனிப்பால். வணிகர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம். சில்லறை வர்த்தகர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கலாம். அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதை நீங்கள் உணருவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தின் அடிப்படையில் கலக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் மதியம் 1 மணி வரை

துலாம்  - நீங்கள் இன்று நண்பர்களுடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். எந்தவொரு முக்கியமான பிரச்சனை பற்றியும் நீங்கள் விவாதிக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்காது. நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை நிச்சயமாக தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையின் அணுகுமுறை உங்களிடம் மிகவும் கடுமையாக இருக்கும். உங்களிடையே சில குழப்பங்கள் இருக்கலாம். உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது நல்லது. வேலை முன்னணியில், இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். வணிகர்கள் இன்று திடீரென்று பயணிக்க வேண்டியிருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, வானிலை மாற்றம் காரணமாக சில சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம் - மன கவலைகள் நீங்கி, இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். அன்புக்குரியவர்களுடனான உறவு வருப்பெறும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல ஆச்சரியத்தை அளிக்க இன்று நல்ல நாள். வேலை தேடுபவர்களுக்கு, நல்ல வேலை கிடைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. சில பெரிய மற்றும் பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர். வர்த்தகர்களுக்கும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. குறிப்பாக உங்கள் ரியல் எஸ்டேட் தொடர்புடையது என்றால், இன்று நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டு வசதிகளுக்காக அதிக பணம் செலவிடலாம். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

தனுசு - இன்று, கூட்டு வணிகம் செய்வோர் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். விவாதத்திலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சகஊழியர்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று எந்த பழைய கடனையும் திரும்ப செலுத்தலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். நாளின் இரண்டாம் பாகத்தில் வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசினால், உங்களுக்கு இதய நோய் இருந்தால், அலட்சியமாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம் - வீட்டில் உள்ள வயதான உறுப்பினரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு மோசமடைந்து வருவதால், வீட்டின் சூழல் மன அழுத்தத்தை தரும். உங்கள் கோபத்தையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். வேலை பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனில் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். எண்ணெய் வணிகர்கள் இன்று ஒரு நல்ல பொருளாதார நன்மையைப் பெற முடியும். பொருளாதார முன்னணியில், இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் எந்த பழைய கடனையும் திருப்பிச் செலுத்த முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கும்பம்  - திருமண வாழ்க்கையில் அதிகரித்து வரும் பதற்றத்தை, மனம் விட்டு பேசுவதன் மூலம் அமைதிப்படுத்த முயற்சியுங்கள். இன்று உங்களிடையே எல்லாம் இயல்பாக இருக்க ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. பண நிலைமை வலுவாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இரும்பு வணிகர்கள் இன்று நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களிடம் அதிக பணிச்சுமை இருக்கும். ஆனால், கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். அவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:20 மணி வரை

மீனம் - வர்த்தகர்கள் பெரிய முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், அனுபவம் வாய்ந்த நபரைக் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவை எடுக்க வேண்டும். ஆடை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். பெரிய ஆர்டர் கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். மேலும் பரஸ்பர புரிதலும் மேம்படும். மாலையில் நண்பர்களுடன் உற்சாகமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0