கோயில் நூலை எத்தனை நாள் கையில் கட்டியிருக்கலாம்?
பல்வேறு அம்மன் கோயில்களில் கருப்பு, சிவப்பு நூல் விற்பது வழக்கம். சில இடங்களில் மஞ்சள் நிற நூலும் தரப்படுகிறது.
கோயில்களில் அர்ச்சனை செய்யப்பட்ட நூலைப் பெற்று கைகளில் கட்டிக் கொள்வது வழக்கமானது. பெரும்பாலானவர்கள் ஏதாவதொரு கோயிலில் நூல் கட்டியிருப்பீர்கள்.
சிலர் வேண்டுதல்களுடனும், இன்னும் சிலர் தங்களை தீய சக்திகள் அண்டக்கூடாது, வீட்டில் சுப காரியங்கள் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு நூல் கட்டிக் கொள்வார்கள். அப்படி நாம் கட்டிக் கொள்ளும் நூல் எத்தை நாட்கள் கையில் கட்டியிருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
எத்தனை முடிச்சுகள் போட வேண்டும்?
பல்வேறு அம்மன் கோயில்களில் கருப்பு, சிவப்பு நூல் விற்பது வழக்கம். சில இடங்களில் மஞ்சள் நிற நூலும் தரப்படுகிறது.
அப்படிக் கொடுக்கப்படும் நூல் நம் கைகளில் கட்டும் போது ஐந்து முடிச்சுகள் போட வேண்டும். அதாவது ஆசை, ஆணவம், பொறாமை, கோபம், நீங்கி உடல் நிலை சிறக்க வேண்டும் என ஐந்து முடிச்சு போடுகின்றனர்.
பலன்கள்
இந்த நூல் கட்டிக் கொள்வதால், மனதில் தோன்றும் தேவையற்ற பயம் நீங்கும். தைரியம் கூடும். விபத்துகளிலிருந்து நம்மை காக்கும்.
பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளிலிருந்து உங்களை காக்கும்.
நோய்கள், தோஷங்கள் போன்றவற்றிற்கு நிவாரணம் தரும். கெட்ட கனவுகள் வராமல் செய்யும். கடன் தொல்லை தீரும். அருள் பெருகும்.
ஆண், பெண் எந்த கைகளில் நூல் கட்ட வேண்டும் ?
ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நூல் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி பூஜையின் போது கொடுக்கப்படும் நூல் மட்டும் பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளலாம்.
எத்தனை நாள் நூல் கட்டவேண்டும்?
கோயிலில் கொடுக்கப்படும் நூல் பெரும்பாலானோர் கால வரையின்றி கட்டி இருப்பார்கள். சிலர் ஒரு வருடத்திற்கு மேலாக கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நூலுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன் பின்னர் ஆற்றிலோ அல்லது நீர் நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும் படியாக போட்டு விடக்கூடாது. அதனால் உடல் நலத்திற்கும், வாழ்க்கையின் வளமும் குன்றும்.