இந்த ராசிக்காரர்கள் இன்று சிக்கனமாக செலவு செய்வது நல்லது!
ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை இப்போது தெரிந்து கொள்வோம்.
மேஷம் - காதல் விவகாரத்தில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். அன்புக்குரியவருடன் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடு பெரிய சண்டையில் சென்று முடியலாம். காதல் கைகூட வேண்டுமென்றால் நிச்சயம் விட்டுகொடுத்து செல்ல வேண்டியது அவசியம். தனிமையில் இருப்பதை தவிர்த்திடுங்கள். குடும்பத்தாரோடு நேரம் செலவிட முயற்சிப்பது நல்லது. வேலையை பொறுத்தவரை, சற்று கூடுதல் பணிச்சுமை உணர்வீர்கள். அதனால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய காலமிது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய பண ஆதாயம் இருக்க வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:05 மணி முதல் மாலை 6 மணி வரை
ரிஷபம் - ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும். திருமண வாழ்க்கையில் இன்று சிறு சண்டைகள் ஏற்படக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வாழ்க்கை துணையின் மனதை புண்படுத்தும்படியாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் 2 மணி வரை
மிதுனம் - பல கவலைகள் இன்று உங்களை ஆட்கொள்ளக்கூடும். தேங்கிய வேலையை முடிக்க பொன்னான நேரத்தை கொஞ்சம் செலவிடுவது நல்லது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைக்க வேண்டும். தவறான முடிவுகளால் எதிர்கால கனவுகளில் சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது. உங்களை தேவைக்கு பயன்படுத்து நபரின் நட்பை துண்டிப்பது நல்லது. இல்லையேல், தவறான பாதையில் சென்று முடிந்துவிடும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், மன அழுத்தத்தை குறைத்து கொள்ள முடியும். பண வரவு உண்டு. பண பிரச்சனைகளுக்கு இன்று நல்ல தீர்வு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:40 மணி முதல் மாலை 3 மணி வரை
கடகம் - நிதி நிலை சிக்கல்களை சந்திக்கலாம். திடீர் பண இழப்பால் அவதியுற வாய்ப்புள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது, பந்தயம் கட்டுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. நிதி சார்ந்த முடிவுகளை மிகுந்த கவனத்துடன் எடுக்கவும். தவறினால், வருத்தம் மட்டுமே மிஞ்சும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்றைய தினம் மிகுந்த சோர்வாக உணர்வீர்கள். அதனால், எரிச்சலும், மனஅழுத்தமும் அதிகமாகி, ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். எதையும் பொறுமையுடன் கையாளவும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் 10 மணி வரை
சிம்மம் - பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வர்த்தகர்களுக்கு இன்று அற்புதமான நாள். வணிகர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உங்களது வாழ்க்கை துணை விடுபடலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து சிறிது நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள்.. உங்கள் தவறான அணுகுமுறை அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். உடல்நலப் பிரச்சனைகள் அசௌகரியத்தை ஏற்படுத்தும். கவனக்குறைவாக இருப்பதை தவிர்த்திடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை
கன்னி - குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு மற்றும் பிரிவினைக்கு ஆளாகலாம். சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பாக சில மன அழுத்தம் உண்டாகக்கூடும். உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் துணை உங்கள் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருப்பார். இது உங்களிடையே அன்பை அதிகரிக்கச் செய்யும். ஆன்மீகத்தில்அதிக கவனம் செலுத்துவீர்கள். இன்று செலவு செய்வதை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் 11:30 மணி வரை
துலாம் - நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். பணி சுமையை குறைக்க அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கும். பெற்றோரின் முழு ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். இதனால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தந்தையின் உதவியால் பெரிய நிதி பிரச்சனை தீர்க்கப்படும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். காதல் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இன்று உண்ணும் உணவில் கவனம் செலுத்தாவிட்டால், உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
விருச்சிகம் - வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு வழிகளில் இன்றைய நாள் பயணிக்கும். குடும்பத்தாரின் அன்பால் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்வின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வரக்கூடும். அன்பானவர்களின் பாராட்டு உங்களை தேடி வரும். பிரச்சனைகளை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்துகொள்ள தயங்க வேண்டாம். அவர்களின் உதவியினால் கூட பிரச்சனை முடிவிற்கு வரக்கூடும். பண வரவு உண்டு. முதலீடு செய்வதற்கு ஏற்ற, சாதகமான தினம் இன்று. இன்று செய்யப்படும் முதலீடு நல்ல லாபத்தை ஈட்டித்தரும். ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள அதிகாலையில் எழுந்து யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட மதிப்பெண்: 5
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணி வரை
தனுசு - உங்களது நம்பிக்கை அதிகரிக்கும் நாள். அலுவலக பணிகளை எவ்வித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். வீட்டில் இருந்து வந்த மன கலக்கம் குறையும். குடும்பத்தாரின் பாசத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார முன்னணியில், இன்று இயல்பை விட உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் தேவைக்கு அதிகமாக செலவழிக்கும் உங்களது பழக்கத்தால் சில சிக்கல்களில் சிக்கலாம். வாழ்க்கைதுணையிடன் ஏற்பட்ட சண்டை மாலைக்குள் சமாதானம் ஆகிவிடும் என்றாலும் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை. உங்களது கவனக்குறைவால் உயர் அதிகாரியின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எனவே, செய்யும் வேலையில் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை
மகரம் - செலவுகள் அதிகரிப்பதால் மன அழுத்தமும் அதிகரிக்கும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான பழைய சண்டைகள் இன்று உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்ப தகராறால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடிய சண்டைகளை விரைவில் தீர்ப்பது நல்லது. இல்லையெனில் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். மாலையில் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும். இன்று பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உடல்நலம் குறையக்கூடும் என்பதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை
கும்பம் - இன்றைய மாணவர்களுக்கு சாதகமானது. எந்தவொரு போட்டித் தேர்வுக்கும் தயாராக முயற்சி மேற்கொண்டு வந்தால், உங்களது ஆசிரியரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தந்தையின் ஆசீர்வாதமும், பாசமும் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகளை குறைத்து கொண்டால், வரும் நாட்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பணத்தட்டுப்பாட்டால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிடாமல் இருப்பதால் சிறிது மனகசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் குறித்து புறம் பேசுவதை தவிர்த்தால், வீண் பிரச்சனையில் சிக்காமல் தப்பலாம். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை
மீனம் - உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையென்றால், பெரிய பிரச்சனைகளில் சிக்கக்கூடும். இதுபோன்ற சமயங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை செலுத்த வேண்டிய நாள். ஏனென்றால், நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மனஅழுத்தம் நிறைந்ததாக இருக்கும். மாமியார் குறுக்கீடு இருவருக்கும் இடையே சில சர்ச்சைகளை ஏற்படுத்தும். யார் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்க வேண்டாம். செய்யும் வேலையில், முழு ஈடுபாட்டுடனும், கவனக் குறைவின்றியும் செய்து முடிக்க முயற்சியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை