இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால நிதி முயற்சிகள் வெற்றியடையலாம்...
இன்று துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 19 ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இன்று அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், உங்கள் மீதான அழுத்தமும் மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், பாதகமான சூழ்நிலைகளிலும் எளிதாக வேலை செய்யும் உங்கள் கலை இன்று அனைவரின் மனதையும் வெல்லும். வியாபாரிகளின் பொருளாதார பிரச்சனைகள் தீரும். தடைப்பட்ட பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் நேரத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இரவு உணவிற்கு வெளியே செல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மறக்கமுடியாத நாளாக நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். உங்களுக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்:32
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மாலை 4:25 மணி வரை
ரிஷபம் - இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் முதுகு அல்லது இடுப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களது எந்த வேலையாவது முழுமையடையாமல் இருந்தால், தவறான பலனை அனுபவிக்க நேரிடலாம். வணிகர்கள் இன்று புதிய வணிக சலுகையைப் பெறலாம். இருப்பினும், அனுபவம் வாய்ந்த மற்றும் நெருங்கிய நபர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்ற பின்னரே எந்த புதிய சலுகையையும் நீங்கள் ஏற்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையுடன் சில சர்ச்சைகள் இருக்கலாம். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் மதியம் 2:20 மணி வரை
மிதுனம் - நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு புதிய வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் வேலையை மாற்ற முடிவு செய்தால், இன்று அதற்கு ஏற்ற நேரம். வியாபாரிகள் இன்று கலவையான பலன்களைப் பெறலாம். உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கும். ஆனால், நீங்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன், உங்கள் குடும்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் கல்வியில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்ற கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உணவில் அதிக கவனக்குறைவு வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:40
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
கடகம் - இன்று உங்களுக்கு நல்ல பலனைத் தரும். மனம் அமைதியாக இருப்பதோடு, மன அழுத்தமும் இல்லாமல் இருப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நீங்கள் நன்றாக உணர்வீர்கள். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் முதலாளி உங்கள் வேலையில் மிகவும் மகிழ்ச்சியடைவார். அவருடைய பாராட்டு உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண திட்டமிட்டிருந்தாலும், வழியில் ஏற்படும் சில தடைகளளையும், அனைத்து சிரமங்களையும் இன்று சமாளிக்க முடியும். இருப்பினும், முக்கியமான ஆவணங்களைக் கையாளும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் அன்பும் இனிமையும் நிலைத்திருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்:20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
சிம்மம் - நீங்கள் அலுவலகத்தில் சில பாதகமான சூழலைச் சந்திக்க நேரிடலாம். சக ஊழியர்களுடன் மோசமான ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒரு சிறிய தவறும் உங்கள் பெயரைக் கெடுத்துவிடும். வணிகர்களுக்கு லாபகரமான சூழ்நிலை உள்ளது. குறிப்பாக பால் பொருட்கள் தொடர்பான பணியை செய்வோர், நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். தானியங்கள் தொடர்பான வேலை செய்பவர்களும் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும், உங்களிடையே விரைவில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. தேவையற்ற செலவுகள் உங்கள் நிதி நிலையைக் கெடுத்துவிடும். ஆரோக்கியமாக இருக்க உங்கள் தினசரி வழக்கத்தில் மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:45 மணி வரை
துலாம் - இன்று நீங்கள் வேலையில் கலவையான முடிவுகளைப் பெறலாம். நீங்கள் செய்துகொண்டிருக்கும் எந்த ஒரு வேலையும் பாதியில் நின்றுவிட்டால், கவலைப்படத் தேவையில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் தைரியமாக செயல்பட வேண்டும். சரியான நேரம் வரும்போது,உங்களின் பிரச்சனை நிச்சயம் முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வீட்டின் பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். இருப்பினும், வாழ்க்கைத் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்களை தொந்தரவு செய்யலாம். உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யுங்கள். பண விஷயத்தில் கொஞ்சம் கவலை இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், காரமான மற்றும் வறுத்த உணவைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை
விருச்சிகம் - இன்று உங்கள் மனம் அமைதியின்றி இருக்கும். வீண் குழப்பங்கள் சற்று அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனதை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அமைதியாக இருந்து உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்காதீர்கள். அலுவலகத்தில், வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்கள் வேலையை முடிக்காமல் விடாதீர்கள். அதுமட்டுமின்றி உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். சிறு வியாபாரிகள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் புதிய பங்குகளை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் திடீரென்று ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் கவலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதனுடன், உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தையும் சேர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
தனுசு - வியாபாரிகளின் பணிகளில் அரசு தடைகள் ஏதேனும் இருந்தால், இன்று உங்கள் பிரச்சனையை சமாளிக்க முடியும். உங்களுக்காக நிறைய பணம் செலவழிக்கப்படலாம். விரைவில் உங்கள் இழப்பு ஈடுசெய்யப்படும். அதே நேரத்தில், உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான பெரிய அறிகுறி தென்படும். அலுவலகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையலாம். இன்று லட்சுமியின் அருளால் பண வரவையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெற்றோருடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்:12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
மகரம் - குடும்பத்தில் இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வீட்டிற்கு சில சிறப்பு விருந்தினர்கள் வரலாம். அவர்களின் விருந்தோம்பலில் நீங்கள் எந்தக் குறையும் வைக்க மாட்டீர்கள். இருப்பினும், மற்றவர்களைக் கவருவதற்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் முதலாளியின் மனநிலை இன்று நன்றாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தவறுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மர வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், பங்குச் சந்தையுடன் தொடர்புடைய நபர்களும் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை
கும்பம் - நீங்கள் நீண்ட காலமாக வேலை சுமையை உணர்ந்தால், இன்று ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். வணிகர்கள் இன்று பெரிய முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வீட்டில் உள்ளவர்களுடன், குறிப்பாக உடன்பிறப்புடன் பரஸ்பர புரிதல் இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். அவர்களின் ஒத்துழைப்பால் இன்று உங்களின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணை உங்களுக்கு சில நல்ல செய்திகளைக் கூறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்:28
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை






