இந்த ராசிக்காரர்கள் இன்று செலவுகளை குறைத்துக் கொண்டால் பிரச்சனையில் சிக்காமல் தப்பலாம்!

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றி பார்க்கலாம். 

இந்த ராசிக்காரர்கள் இன்று செலவுகளை குறைத்துக் கொண்டால் பிரச்சனையில் சிக்காமல் தப்பலாம்!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 

மேஷம் - இன்றைய தினம் உங்களது உடலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முடிந்தவரை, வெளிஉணவுகள் சாப்பிடுவதை தவிர்த்திடவும். போதுமான அளவு ஓய்வெடுக்கவும். வேலை முன்னணியில் இன்று நல்ல நாள். அலுவலகத்தில் உங்களது செயல்திறன் நன்றாக இருக்கும். அதனால் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பலனை பெறலாம். உங்களது முயற்சியால், தந்தையுடனான மனகசப்பு நீங்கும். மாலையில், நண்பர்களுடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கு சில அழகான ஆச்சரியத்தை அளிக்க இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம் - இன்றைய தினம் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதற்கு, உங்களது வாழ்க்கைத் துணை எல்லா வகையிலும் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார். இது உங்களது சுமையை குறைப்பது மட்டுமல்லாதல், ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பும் கிடைக்கும். குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். யோசித்து செலவுகளை செய்வது நல்லது. இன்றைய தினம் முதலீடுகளை தவிர்க்க வேண்டும். எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் உறுதியாக இருக்கவும். பயணம் மேற்கொள்ள இன்று சிறந்த நாள். பயணத்தால் நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம் - குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தாய் அல்லது தந்தையின் உடல்நலம் குறித்த கவலைகள் விடுபடலாம். உங்களது சிறப்பு கவனிப்பால் அவர்களது ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றத்தை காணலாம். வணிகர்கள் இன்று மிகப்பெரிய நன்மைகளை பெற வாய்ப்புள்ளது. கூட்டு வியாபாரத்தில் இன்று பெரிய நன்மைகளை பெறலாம். அலுவலக வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நிதி நிலைமையை வலுப்படுத்த, புதிய வருமான ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் வழங்கும் அறிவுரைகளை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 மணி முதல் மதியம் 1 மணி வரை

கடகம் - இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அதனால், அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் விரைவாக முடிக்க முடியும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். பண விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தலாம். சிறிது காலமாக தோல்வியில் முடிந்த நிதி முயற்சிகளில், இன்று சில நற்செய்திகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே காதல் அதிகரிக்கும். விவாதங்களை தவிர்த்தால், பெரிய சிக்கலில் சிக்காமல் தப்பிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 9:25 மணி வரை

சிம்மம் - உங்கள் காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் உருவாகலாம். வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடலாம். பின்னர், அதை நினைத்து வருத்தப்பட வேண்டியிருக்கும். அதே சமயம், திருமணமானவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான புரிதலுடன் அவரை கையாள வேண்டியது அவசியம். வேலை முன்னணியில், இன்று அவ்வளவாக நன்றாக இருக்காது. புதிய வேலைகளை தொடங்க இன்று சாதகமான நேரம் கிடையாது. அதிக செலவுகளை தவிர்க்கவும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 5 மணி வரை

கன்னி - இன்று உங்களது நிதி நிலை மேம்படும். உங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயங்களுக்கா கொஞ்சம் செலவிடலாம். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையெனில், உயர் அதிகாரிகளின் கடுமையான அணுகுமுறைக்கு ஆளாகலாம். கூட்டு வியாபாரிகள், தங்களது உறவை மேம்படுத்த வேண்டிய நேரம். உங்களது கருத்துவேறுபாடு, வேலையில் மோசமான விளைவை ஏறபடுத்தும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிட்டும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:25 மணி வரை

துலாம் - உங்களது வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். வேலையை விரைந்து முடிக்க குறுக்குவழிகள் பின்பற்றுவதைத் தவிர்க்கவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். அதற்காக மனசோர்வடைய வேண்டியதில்லை. உங்களது வேலைகளை சொந்த முயற்சியினால் நிறைவேற்றுவது தான் சிறப்பு. குடும்பத்தாரின் அன்பும், பாசமும் அதிகரித்து, மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அரசு பணிகளில் சந்தித்து வந்த தடைகளை, சமாளிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மாலை 5:30 மணி வரை

விருச்சிகம் - கூட்டாளியின் விமர்சனம் உங்களை பெரிதும் கலக்கப்படுத்திடும். இருவரது கருத்துக்களிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், அத்தகைய சூழலில் அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் விவாதிப்பதன் மூலம் மன அமைதி சீர்குலைந்து, மன அழுத்தம் தான் அதிகரிக்கும். உங்களது துறையில் எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் போகலாம். ஆனால், அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றியை பெற நிச்சயம் கடினமாக உழைக்க வேண்டும். மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு - உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கிடும். உடல்ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் நன்றாக உணர்வீர்கள். வேலை முன்னணியில் சிறப்பான நாளாக இருக்கும். வேலை அல்லது வியாபாரம், எதுவாக இருந்தாலும், எதிர்பார்த்த முடிவுகளை பெறுவீர்கள். இது மகிழ்ச்சி, தன்னம்பிக்கை இரண்டையுமே அதிகரிக்கச் செய்யும். பண விவகாரங்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். வீட்டின் மற்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம் - பணத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்காது. இன்று வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த வகையான சிக்கலைத் தவிர்க்க, சிறந்த நிதித் திட்டம் தேவை. இன்று, ஒவ்வொரு அடியையும் மிகவும் சிந்தனையுடன் எடுத்து வைக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சில சிக்கல்களில் சிக்கலாம். போக்குவரத்து விதிகளாக இருந்தாலும், எந்த சட்டவிரோத வேலையும் செய்ய வேண்டாம். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வேலை முன்னணியில், நீங்கள் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். உடல்நலம் பற்றி பேசினால், இன்று நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கும்பம் - வேலை பார்ப்பவர்கள், இன்று பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களது கடின உழைப்பு உங்களது முன்னேற்றத்திற்கான கதவை திறக்கும். வர்த்தகர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நிகழ்வுகள் நடைபெறும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். அன்புக்குரியவரின் ஆதரவுடன் சில முக்கிய பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், சிறிது தூரம் நடைப்பயிற்சி செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம் - இன்றைய தினம் வர்த்தகர்களுக்கு சிறப்பான நாள். பெரிய லாபத்தை ஈட்ட முடியும். அலுவலகத்தில் உங்களது செயல்திறனால் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பெரிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதை சரியான நேரத்தில் முடிக்க முடியும். இதற்கான பாராட்டையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கைப் பற்றி பேசினால், வீட்டுச் சூழலை மாற்றக்கூடிய சில பிரச்சனைகளை தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 9 மணி வரை

like

dislike

love

funny

angry

sad

wow