இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு!

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம். 

இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு!

வேலை, தொழில், சந்தோஷம், துக்கம் என அனைத்தை பற்றியும் அறியலாம். டிசம்பர் 14 திங்கட்கிழமையான இன்றைய தினம் உங்கள் ராசிக்கான பலன் எப்படி இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்றைய தினம் உங்களது நம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கப் போகிறது. வேலை அல்லது வணிகம் செய்பவராக இருந்தால், கடினமான உழைக்க வேண்டியிருக்கும். அரசு பணியில் உள்ளவர்கள் வளர்ச்சியை அடைவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள சிறந்த நாள். வீட்டில் அமைதியான சூழல்நிலவும். உடன்பிறப்புகளின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். உண்ணும் உணவால் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:10 மணி வரை

ரிஷபம் - அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கக்கூடும். எனவே, திட்டமிட்ட படி பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சித்தால் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம். வணிகர்கள் இன்றைய தினம் சட்டம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மின்னணு வணிகம் செய்பவர்கள் இன்று நல்ல நிதி நன்மையை பெற முடியும். வாழ்க்கை துணையுடன் சில சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகைச்சுவைக்காக கூட பிறர் மனம் புண்படும் படி பேசாதீர்கள். பண வரவு திருப்தி அளிக்கும். சிந்திக்காமல் செய்யும் செலவால் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம் - இன்று அலுவலகத்தில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். செய்யும் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வணிகர்கள் இன்று மிகப்பெரிய சலுகையை பெற வாய்ப்புள்ளது. நிலுவை பணிகளை முடித்த பின்னர், புதிய வேலைகளை தொடங்குவது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கை நிலைமை மோசமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உடன்பாடில்லா விஷயத்திலும் உங்களது பக்கதை பக்குவமாக எடுத்துரைக்க முயற்சிக்கவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பெரிய செலவுகள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதனை தற்போது தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணம் மேற்கொண்டார் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

கடகம் - இன்றைய தினம் மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அலட்சியப்போக்கை தவிர்த்திடவும். பணத்தில் அடிப்படையில் இன்றைய தினம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். முன்னெடுத்த நிதி முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணப்பிரச்சனைகள் தீரும். பெற்றோருடனான உறவு வலுப்பெறும். பாதகமான சூழலில் பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். தேவையற்ற கோபம், அன்புக்குரியவர் இடையே தூரத்தை அதிகரிக்கக்கூடும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் பற்றி கவலை தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 முதல் மதியம் 2:30 மணி வரை

சிம்மம் - இன்றைய தினம் உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தம் கணிசமாக அதிகரிக்கும். நிதி சார்ந்த அனைத்து முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். அத்துடன் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் கடனில் இருந்து நீங்கள் விரைவில் விடுபட முடியும். பெற்றோர் விஷயங்களை புறக்கணிப்பதை தவிர்க்கவும். வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் அதனை சுலபமாக முடித்திட முடியும். இன்று வணிகர்கள் நல்ல பயனடைவர். ஆரோக்கியம் இன்று அவ்வளவு நன்றாக இருக்காது. சோர்வு மற்றும் பலவீனம் அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் விஷயத்தில் விளையாட்டு வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கன்னி - பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய முதலீடு செய்ய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அனைத்து வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும். வியாபாரிகள், புதிய பணியைத் தொடங்க நினைத்தால், இன்று உங்கள் திட்டத்தை முன்னெடுக்க இன்று சாதகமான நாள். நாளின் இரண்டாம் பாகத்தில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். இன்று அன்புக்குரியவருடன் சுற்றுலாவிற்கு செல்லலாம். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, நீங்கள் இன்று மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

துலாம் - நீண்ட நாட்களாக இருந்து வந்த பணிசுமையால் மிகுந்த சோர்வாக காணப்பட்ட நீங்கள், இன்று சற்று நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். பிடித்த வேலையை செய்வதன் மூலம் வாழ்க்கையில் உற்சாகத்தை கொண்டு வர முடியும். இன்றைய தினம் பயன்படுத்தும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. சிந்திக்காமல் பேசும் பழக்கம், உங்களை சிக்கலில் சிக்க வைத்துவிடும். வணிகர்கள் இன்று வெற்றி காணலாம். பெற்றோரிடன முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறப்புகளுடன் நல்லுறவு மேம்படும். குடும்பத்தாரோடு அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

விருச்சிகம் - வேலை முன்னணியில் இன்று சில சிக்கல்களை சந்திக்கலாம். உங்களது சோம்பேறித்தனத்தால், வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் அவதிப்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வியாபாரிகள், திடீரென சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இறுதி முடிவை எப்போம் யோசித்து எடுக்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். பிறருக்கு உதவி செய்ய கிடைக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். சிறு உதவி கூட ஒருவரின் பெரிய பிரச்சனையை தீர்க்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் 9:00 மணி வரை

தனுசு - பிறர் உங்கள் மீது வைக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பிற்கு வேண்டாம் என்று சொல்ல தயாராக இருங்கள். எந்தவொரு விஷயத்திற்கும் அதிகப்படியான அழுத்தம் கொடுக்க வேண்டாம். வேலையை பொறுத்தவரை, இன்றைய தினம் பொன்னான நாளாக அமையப்போகிறது. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால், சரியான நேரத்தில் உதவி கிடைக்கும். பாதியில் நின்ற வணிக பணிகளை மீண்டும் தொடங்கலாம். இதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்காக உங்கள் திட்டங்களில் சில மாற்றங்களை செய்யலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

மகரம் - எத்தகைய மோசமான சூழ்நிலையையும் மிகவும் எளிதாக கையாளும் திறமுடையவர்கள் மகர ராசிக்காரர்கள். அதுமட்டுமல்ல, பாதகமான சூழ்நிலைகளில் கூட, தெளிவான புரிதலை உங்களால் உண்டாக்க முடியும். முழு நம்பிக்கையுடன் பெரிய சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அதிகப்படியான செலவு சில சிக்கல்களை உண்டாக்கும். வாழ்க்கை துணையுடனான காதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிக்கல்களை கூட புறக்கணிக்காதீர்கள். மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம் - இன்று வேலை முன்னணியில் நல்லதாக இருக்கும். உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த செயல்திறனைப் பார்த்து, உங்களது உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. மறுபுறம், வணிகர்கள் இன்று பெரிய நன்மையைப் பெறக்கூடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் திருமணத்தை பற்றி வீட்டில் விவாதிக்கும் சூழல்ர உருவாகலாம். உங்கள் உடல்நிலை பற்றி பேசுகையில், நீங்கள் இன்று மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 10:10 மணி வரை

மீனம் - இன்று சிறப்பான செய்தி உங்களை தேடி வரப் போகிறது. உங்கள் வாழ்க்கை துணையுடன் சிறப்பாக சேரம் செலவிடுவீர்கள். பழைய நாட்களின் நினைவு, இன்று உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். குடும்ப உறுப்பினர்களில் ஆரோக்கியத்தை பற்றிய நீண்ட கால கவலை நீங்கிடும். அவரது ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றத்தை காண முடியும். உடற்பிறப்புகளுடனான சர்ச்சரவு முடிவிற்கு வரும். இன்று மிகப் பெரிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் குறித்து நண்பரிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளையும் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 9:15 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0