இந்த ராசிக்காரர்கள் இன்று தங்களது காதலை பற்றி வீட்டில் பேச சரியான நாளாம்!

எப்போது எத்தகைய மாற்றம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான் ஜாதகம், ராசிபலன்கள் அனைத்தும். 

இந்த ராசிக்காரர்கள் இன்று தங்களது காதலை பற்றி வீட்டில் பேச சரியான நாளாம்!

கிரக நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் தினந்தோறும் மாறக்கூடும். இப்போது உங்களது ராசிக்கான இன்றைய பலனை பார்க்கலாம்.

மேஷம் - பண அடிப்படையில் இன்று சிறப்பான நாள். புதிய வருமானத்திற்கான திடீர் வாய்ப்புகள் உருவாகும். வணிகர்கள் தங்களது தொழிலை மேம்படுத்த திட்டமிட்டிருந்தால் அதில் சிறிது வளர்ச்சி உண்டாகும். வேலை பார்ப்பவர்கள் தங்களது கடின உழைப்பிற்கான பலனை பெறலாம். உயர் அதிகாரிகள் உங்கள் பணியில் திருப்தி அடைவார்கள். அலுவலகத்தில் உங்கள் மீதான நற்பெயர் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வாழ்க்கைதுணை மூலம் நற்செய்தி வரலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:55 மணி முதல் 11 மணி வரை

ரிஷபம் - முன்னேற்றத்தில் ஏற்படும் ஒவ்வொரு தடைகளையும் வலிமையுடனும், தைரியத்துடனும் எதிர்கொள்வீர்கள். அலுவலகத்தில் இன்றைய தினம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் புரிதலுடன் கையாள முயலுங்கள். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு தேடி வரும். சில்லறை வணிகர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். வாழ்க்கை துணையுடனான கருத்து வேறுபாடுகளை சரிசெய்து கொள்வதற்கு சிறந்த நாள். உடல்நலத்தில் சிற தொந்தரவுகளை சந்திக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:25 மணி வரை

மிதுனம் - அலுவலகத்தில் உங்களின் அலட்சியப்போக்கால் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். உங்களிடம் வழங்கப்பட்ட சில முக்கிய பொறுப்புகள் திரும்பப் பெறப்படும். மாற்று வேலை பற்றிய சிந்தனை மேலோங்கும். எந்த ஒரு முடிவையும் அவசர அவசரமாக எடுப்பதை தவிர்க்கவும். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு நல்ல புரிதலும் முன்னெச்சரிக்கையும் அவசியம். வீட்டில் சில சச்சரவுகள் உண்டாகலாம். இன்று சோர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 முதல் 11 மணி வரை

கடகம் - கண்மூடித்தனமாக யார் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள். இல்லையெனில், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். பண விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கடின உழைப்பை செலுத்த முயற்சியுங்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடன்பிறப்புகளுடன் மறக்க முடியாத நாளாக இருக்கும். வாழ்க்கை துணையுடனான கருத்து வேறுபாடுகளால் உருவாகக்கூடிய தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதிருப்பது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3:45 மணி வரை

சிம்மம் - பண வரவு திருப்தி அளிக்கும். பண பரிவர்த்தனைகளுக்கு ஏற்ற தினம். வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அலுவலகத்தில் கடின உழைப்பிற்கான பாராட்டை பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் , இத்தனை நாளாக இருந்துவந்த பொருளாதார பிரச்சனையில் இருந்து விடுபடுவர். வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் இருந்த சிக்கல்கள் அகலும். உடல்நலத்தை பொறுத்தவரை, காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இதுபோன்ற வலிகளை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை

கன்னி - இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் நீண்டகால கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கான பலனை பெற வாய்ப்புள்ளது. இது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை உருவாக்கும். வரும் காலங்களில் பெரிய முன்னேற்றத்தை காணப் போகிறீர்கள். வர்த்தகர்களும் இன்று நிதி ரீதியாக பயனடையலாம். இது தவிர, எந்தவொரு சட்ட சிக்கல்களில் இருந்தும் நீங்கள் நிவாரணம் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், பெற்றோருடனான உறவு வலு பெறும். வாழ்க்கை துணையுடனான சண்டையை முடிவிற்கு கொண்டு வர கோபத்தை குறைத்து சமாதானத்தை நாட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:45 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம்  - தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். திடீர் பொறுப்புகளால் நீங்கள் சோர்வாகவும் சிக்கலாகவும் உணரக்கூடும். எனவே, இன்றைய தினத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அவசரத்தையும், பயத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் பெரிய வெற்றியை பெற வாய்ப்புள்ளது. பண வரவு திருப்தி அளித்தாலும், செலவுகளும் அதிகரிக்கக்கூடும். உடல் சற்று பலவீனமான இருக்கும். அலட்சியமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:15 மணி வரை

விருச்சிகம் - இன்றைய தினத்தில் நீங்கள் மிகவும் நிம்மதியாக உணர்வீர்கள். செய்யும் செயலில் கவனம் செலுத்த போதுமான நேரம் கிடைக்கும். குடும்ப நிலைமை சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறப்புகளுடனான சண்டை சமாதானத்தில் முடியும். பண வரவு திருப்தி அளிக்கும். அலுவலக பணி காரணமாக சிறிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வணிகர்கள், தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க சிறந்த நாள். உடல்நலம் நன்றாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 41

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

தனுசு - இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். சக ஊழியர்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கப்பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பால் பொருட்கள் தொடர்பான வணிகம் மேற்கொள்பவர்களுக்கு இன்று சிறந்த நாள். குடும்பத்தாரோடு நேரம் செலவட அதிக வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவர்களுடனான தருணங்கள் இன்று மறக்க முடியாததாக இருக்கக்கூடும். திருமணம் அல்லது காதல் தொடர்பாக வீட்டு பெரியவர்களுடன் பேசுவதற்கு நல்ல நாள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, சுகாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 முதல் 12:45 வரை

மகரம் - அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். உடல் வலிமை காரணமாக எந்தவொரு கடினமான வேலையையும் எளிதாக முடித்து விடுவீர்கள். வணிகர்கள், தங்கள் எதிரிகளுடன் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய வேலைகளில் எதிரிகளின் குறுக்கீடு இருக்கலாம். பண வரவு இன்று உங்களை மகிழ்ச்சி அடையச்செய்யும். வீண் செலவுகள் அதிகரிக்கலாம். வாழ்க்கை துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். அதுபோன்ற தருணங்களில், அவர்களுடன் நேரம் செலவிட முயற்சியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மாலை 3:05 மணி வரை

கும்பம் - நிலுவை பணிகளை முடிப்பதன் மூலம் அதற்கான பலன் தேடி வரும். மரம் தொடர்பான வணிகம் மேற்கொள்பவர்களுக்கு இன்று சிறந்த நாள். இன்றைய தினம் உங்களது வாழ்க்கை துணையின் மனநிலை சரியாக இருக்காது. எனவே, சற்று உஷாராக இருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:05 மணி முதல் மாலை 4 மணி வரை

மீனம்  - இன்று உங்களுக்கு சிறப்பாக நாள். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான பலனை பெறுவதற்கான நேரமிது. பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்ளுக்கு எதிர்பார்த்த லாபமும், முன்னேற்றம் வந்துசேரும். தேவையற்ற பிடிவாதத்தை தவிர்ப்பது நல்லது. நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும். பண வரவு திருப்தியளிக்கும். கவலைகள் அனைத்தையும் மறந்து, குடும்பத்தாரோடு சந்தோஷமாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0