இந்த ராசிக்காரர்கள் இன்று யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டுமாம்!

Today Rasi Palan: நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ராசிக்காரர்கள் இன்று யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டுமாம்!

Today Rasi Palan: நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.நவம்பர் 28ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 8.30-9.00 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 3.00-4.30 மணி வரை. குளிகை காலை 12.00-1.30 மணி வரை. எமகண்டம் காலை 9.00-10.30 மணி வரை. சூலம் - வடக்கு திசை. சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். தொழிலதிபர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான நேரமிது. உங்கள் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இன்று மருந்துவ செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் உடல்நலத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 2 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு கண் சம்பந்தமான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுமு் மாணவர்கள், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள். அலுவலகத்தில் சில பொறாமை கொண்ட சக ஊழியர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கலாம். வியாபாரிகளுக்கு இன்று கலவையான லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், இன்று கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் நல்ல செயல்திறனின் அடிப்படையில் உங்களுக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். தொழிலதிபர்களுக்கு புதிய முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால் துரித உணவைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ் நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பாமல், வெற்றியை அடைய சற்று கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் விரும்பிய வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்று வணிகர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பற்றிய முக்கிய கவலைகள் நீங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்கள் அதிகரித்து வரும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். இன்று சில நல்ல செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறலாம். இன்று உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்க முடியும். புதிய வேலைகளைத் தொடங்கவும் முடிவு செய்யலாம். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களின் பரபரப்பான வழக்கத்தால் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணரலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பேணுவது நல்லது. நீங்கள் அரசு வேலைக்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வியாபாரிகள் இன்று அவசர அவசரமாக எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டாம். சிந்திக்காமல் செலவு செய்யும் உங்கள் பழக்கம் உங்களைச் சிக்கலில் மாட்டிவிடும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்வோர் முக்கிய வணிக முடிவுகளை கவனமாக சிந்தித்த பின்னரே எடுக்கவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். காதல் திருமணம் செய்ய விரும்புவோர் எதிர்கொண்ட பிரச்சனை விரைவில் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் நல்ல நாளாக இருக்கும். தொழிலதிபர்கள் சமீபத்தில் தொடங்கிய புதிய தொழில் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வணிகத் திட்டங்களை மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்பத்தில் வயதான ஒருவரின் உடல்நிலை குறைவினால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதன் மூலம் இன்று நீங்கள் மனதளவில் நன்றாக உணருவீர்கள். நீங்கள் சில காலமாக பணப் பற்றாக்குறையால் சிரமப்பட்டுக்கொண்டிருந்தால், உங்கள் பிரச்சனை இன்று தீர்க்கப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணமும் இன்று திரும்பக் கிடைக்கும். இன்று அலுவலகத்தில் உங்களுக்கு சில முக்கிய வேலைகள் ஒதுக்கப்படலாம். வணிகர்கள் இன்று பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களை தேவைக்கு அதிகமாக நம்புவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். வியாபாரிகளுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீதிமன்ற விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பெரியவர்களின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். குழந்தைகளால் இன்று பிரச்சனைகள் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் உடலின் சில பகுதிகளில் வலியால் சிரமப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மாலை 4:20 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, சில நாட்களாக உங்கள் வீட்டின் சூழல் சரியாக இல்லாவிட்டால், இன்று பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து உறவுகளை வலுப்படுத்த முயற்சித்தால் நல்லது. பண விஷயத்தில் இன்று அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கசப்பான வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகள் லாபம் ஈட்ட வாய்ப்புகளைப் பெறலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0