இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 27 சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று நீங்கள் பணத்தின் அடிப்படையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கடந்த காலத்தில் செய்யப்பட்ட முதலீட்டிலிருந்தும் நீங்கள் நல்ல வருவாயைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் பதற்றம் இருக்கும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறையால் பெற்றோர்கள் உங்களிடம் மிகவும் கோபப்படுவார்கள். அன்புக்குரியவர்களை புண்படுத்தும் எதையும் நீங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளை புறக்கணிக்காதீர்கள். இன்று வேலை முன்னணியில் சாதாரணமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். வர்த்தகர்கள் கடனில் வாங்கிய பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசினால், காது தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம் - இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் புரிதலுடன் இந்த சிக்கல்களிலிருந்து விரைவில் வெளியேற முடியும். அலுவலகத்தில், உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். இருப்பினும், இன்று அதிக பணிச்சுமையால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த கடின உழைப்பிற்கேற்ற சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். வர்த்தகர்கள் தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று, உங்கள் சில முக்கியமான வேலைகளில் ஒரு பெரிய தடை உருவாகலாம். உடல்நலம் பற்றிப் பேசினால், நீங்கள் தினமும் நடைப்பயிற்சி செல்வது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

மிதுனம் - இந்த ராசி மாணவர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உயர் கல்வியைப் பெற முயற்சிப்பவர்கள், இன்னும் வேகமாக முயற்சிக்க வேண்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும், இன்று சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்கள் பணி எந்த இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று கை அல்லது கால்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:55 மணி வரை

கடகம் - வணிகத்தை மேம்படுத்த நினைக்கும் வணிகர்கள் இன்று வெற்றியைப் பெறலாம். கூட்டு வியாபாரிகளுக்கு சிறப்பான நாள். உத்தியோகஸ்தர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு குறித்த நற்செய்தியைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் குறையும். வீட்டு சூழலில் முன்னேற்றம் காணப்படும். அன்புக்குரியவருடன் கருத்து வேறுபாடு அகலும். நிதி ரீதியாக சிறப்பான நாளாக இருக்க வேண்டுமெனில், சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். யோசிக்காமல் செலவு செய்யும் பழக்கத்தால், சிக்கலில் சிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று இயல்பை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 12 மணி வரை

சிம்மம் - இன்று உங்கள் முக்கியமான சில வேலைகள் திடீரென பாதியில் சிக்கிக்கொள்ளக்கூடும். இது உங்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்யும். கூட்டு வியாபாரிகள் இன்று நன்றாக பயனடைவார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி, இன்று உங்களிடையே எல்லாம் சாதாரணமாக இருக்கும். அன்புக்குரியவரிடன் நடத்தையில் சிறிது மாற்றம் இருக்கும். பண நிலைமை நன்றாக இருக்கும். இன்று மிகவும் சிந்தனையுடன் செலவிடுவீர்கள். மாலையில் உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் இரவு 9:50 மணி வரை

கன்னி - அலுவலக பணிகளை முடிக்க சிரமப்படுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களின் உதவியை நாட வேண்டுமானால் நீங்கள் தயங்கக்கூடாது. பெரிய தொழிலதிபர்கள், தங்கள் ஊழியர்களுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யவும். அதிகப்படியான உற்சாகமடைத்தின் போது எந்த முடிவும் எடுத்தால், அதன் பாதகமான பலனைப் பெற வேண்டியிருக்கும். குழந்தைகள் தொடர்பான எந்தவொரு கவலையும் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம். இன்று அவர்களின் படிப்பு அல்லது உடல்நலம் குறித்து மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பீர்கள். பொருளாதார முன்னணியில், இன்று நன்றாக இருக்கும். இன்று செலவுகள் குறைவாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 10 மணி வரை

துலாம் - இன்று உங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முயற்சிப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிறிது அதிருப்தி இருக்கலாம். விரைவில் அனைத்தும் சரியாகும். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். வர்த்தகர்கள் இன்று கடுமையாக போராட வேண்டியிருக்கும். சிக்கிய வழக்குகள் பெரிதாக மாறலாம். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். கடன் வாங்குவதையும் கடன் கொடுப்பதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று நீங்கள் எந்த சுப நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10 மணி வரை

விருச்சிகம் - வணிகர்கள் தங்கள் போட்டியாளர்களுடன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் முழு ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பு இருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். இன்று நீங்கள் விரும்பும் எந்த இடத்திற்கும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சுற்றுலாவிற்கு செல்லலாம். வீட்டில் இருக்கும் வயதானவர்களை நன்கு கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். பொருளாதார முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

தனுசு - இன்று நாளின் தொடக்கம் நன்றாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தாருடன் நல்ல உறவு இருக்கும். இன்று உங்கள் குழந்தைகளுடன் மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு நல்ல ஆச்சரியத் திட்டத்தை உருவாக்க நல்ல நாள். இன்று வேலை முன்னணியில் கடின உழைப்பை செலுத்த வேண்டிய நாள். முக்கிய வேலை செய்தால், நேரத்தை கவனத்தில் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதே நேரத்தில், வர்த்தகர்கள் பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கண் மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். இன்று நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடும். சன ஊழியர்களுடன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை புறக்கணிப்பது எந்த வகையிலும் உங்களுக்கு நல்லதல்ல. தனிப்பட்ட வாழ்க்கைக்கு இன்று அவ்வளவு நல்ல நாள் இல்லை. நண்பர் அல்லது குடும்பத்தினருடனான உறவில் கசப்பு இருக்கலாம். உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். குறிப்பாக, வியாபாரிகள் இன்று அவசர அவசரமாக பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம் - இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். துன்பங்களை எதிர்கொள்ளும்போது, நீங்கள் வேகமாக சிந்திப்பீர்கள். வேலை முன்னணியில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மன அமைதியில் கவனம் செலுத்துவதால் உங்கள் வேலையை எளிதாக முடிக்க முடியும். வியாபாரிகளுக்கு நல்ல பொருளாதார நன்மை கிடைக்கும். பாதியில் நின்ற திட்டத்தை.மீண்டும் தொடங்க நல்ல நாள். இவற்றில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். நிதி நிலைமை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் எந்த பழைய கடனையும் திருப்பிச் செலுத்தலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். காதல் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு அழகான மாலை நேரத்தை செலவிட இன்று நீங்கள் வெளியே செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

மீனம் - திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பான நடத்தை உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்கள் உறவில் அன்பும் பாசமும் இருக்கும். பெற்றோரிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும். உத்தியோகஸ்தர்கள், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உயர் அதிகாரிகள் உங்களுக்கு வழங்கும் எந்த பணியையும் முடிக்க முயற்சி செய்யுங்கள். வர்த்தகர்கள் பொருளாதார முடிவுகளை கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் வெளியே உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0