இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 7ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். நீங்கள் ஒரு புதிய திட்டத்தில் பணிபுரிந்தால் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, உங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்பீர்கள். திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று அதிக காதல் இருக்கும். கசப்புகளை மறந்து, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறப்பாக நாளை செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் நன்றாக இருக்கும். எந்தவொரு நாட்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம் - இன்று அலுவலகத்தில் உங்கள் செயல்திறனில் எவ்வித தவறுகளும் நேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். கவனமாக இருக்க வேண்டிய தினமிது. வர்த்தகர்கள் இன்று வீண் விவாதங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. பாதகமான சூழல்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அதனை தீர்க்க முயற்சிக்கவும். இல்லையெனில், பண நிலைமை மோசமடையக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகளிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். நிதி முடிவுகளை கவனமாக எடுக்கவும். உடல்நிலை பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம் - பணத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். சிறிய முயற்சியால் நல்ல லாபத்தை பெற முடியும். பாதியில் சிக்கிய வேலையால், நிதி நன்மையைப் பெற்றிட முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்வீர்கள். சக ஊழியர்களும் உங்களை புகழ்வார்கள். வர்த்தகர்கள் பெரிய பொருளாதார பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும். இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம் - திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாமல் வாதிட்டு உங்கள் மன அமைதியைக் குலைக்க வேண்டாம். உங்களுக்கிடையேயான கசப்பை விரைவில் அகற்ற முயற்சிக்க வேண்டும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று அன்புக்குரியவரை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. நெருங்கிய நண்பரின் ஆதரவுடன், நீங்கள் ஒரு முக்கியமான பணியை முடிக்க முடியும். இது உங்களின் பெரிய கவலையை நீக்கும். நிதி ரீதியாக, சில மேம்பாடுகளை இன்று காணலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று சாதாரணமான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை

சிம்மம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் இன்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். உங்கள் துறையுடன் தொடர்புடைய மற்றும் உயர் பதவியில் பணிபுரிவோரிடமிருந்து நல்ல, பயனுள்ள ஆலோசனையைப் பெறுவது சாத்தியமாகும். வியாபாரிகள், இன்று ஒரு சிக்கலான வணிக விஷயத்தைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பண நிலைமை வலுவாக இருக்கும். வாடகை வீட்டில் வசிப்போரின். சொந்த வீடு குறித்த கனவு பற்றி சில நற்செய்திகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்காது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், கிடைக்கும் நேரத்தில் போதுமான ஓய்வெடுக்க முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

கன்னி - இன்று உங்கள் இயல்பில் கடுமையான தன்மை இருக்கும். இதனால் நீங்கள் மிகவும் எரிச்சலடைவீர்கள். மனக் கலக்கம் காரணமாக, எந்த வேலையிலும் கவனம் செலுத்த மாட்டீர்கள். அத்தகைய சூழ்நிலையில், தியானம் செய்யலாம் அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கலாம். குழந்தைகளை இன்னும் கண்டிப்பாகக் கையாள வேண்டாம். இன்று அலுவலகத்தில் உங்கள் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் சில வேலைகள் முழுமையடையாது. வியாபாரிகளுக்குஇந்த நாள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக பயனடையலாம். திருமணமானவர்களுக்கு, இன்று வாழ்க்கைத் துணையுடன் சிறிது பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 10 மணி வரை

துலாம் - பணத்தின் அடிப்படையில், இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். எந்தவொரு பெரிய நிதி நெருக்கடியிலிருந்தும் விலகி இருக்க, உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். சேமிப்பில் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். இதன் மூலம், உங்கள் கடனை விரைவாக திருப்பிச் செலுத்தலாம். வீட்டில் அமைதி நிலவும். வீட்டு உறுப்பினர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இன்று, நண்பர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இணக்கமாக இருக்கும். காதல் வாழ்க்கையில், உங்கள் துணை மீதான நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். இன்று வேலை முன்னணியில் உங்களுக்கான சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். இன்று நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை

விருச்சிகம் - இன்று மாணவர்களுக்கு அவ்வளவு நல்ல நாள் அல்ல. இன்று நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். படிப்பில் கவனக்குறைவு அதிகரிக்கும். தியானம் அல்லது பிற புத்துணர்வு அளிக்கும் பயிற்சிகளை செய்தால், உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வணிகர்கள் இன்று ஒரு பெரிய நன்மையைப் பெறலாம். உங்கள் வணிகத்தை அதிகரிக்கும் ஒரு பெரிய ஆர்டரைப் பெறுவீர்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கும். அன்புக்குரியவரின் கடுமையான அணுகுமுறை உங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தும். பொருளாதார முன்னணியில், இன்று கலவையான முடிவுகளைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

தனுசு - இன்று நீங்கள் உங்கள் மன அழுத்தத்தை எல்லாம் மறந்து உங்கள் குடும்பத்துடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணையுடன் இருப்பதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். எந்தவொரு முக்கியமான பிரச்சனைகளையும் பெற்றோருடன் விவாதிக்கலாம். காதல் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தொல்லைகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள், இன்று அலுவலகத்தில் உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் எனும் பெயரில் சிக்கலில் சிக்குவதை தவிர்க்கவும். வணிகர்களுக்கு இன்று முக்கியமாக நாளாக இருக்கும். உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவது மற்றும் நிதி சிக்கல்கள் நீங்குவது போன்ற சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தில் கலவையான முடிவுகளைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம் - இன்று வேலை முன்னணியில் நல்ல நாளாக இருக்கப்போகிறது. உங்கள் செயல்திறன் அதிகரிப்பதோடு, உங்கள் எல்லா வேலைகளையும் சிறப்பாக கையாள முடியும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான பணியை வெற்றிகரமாக முடிக்க முடியும். அதனால் விரைவில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத்துணை நன்றாக இருப்பார். உங்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். பல நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சிறிது நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கலாம். உடல்நலம் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கும்பம் - காதல் வாழ்க்கையில் மந்தமான தன்மை இருக்கும். பல முயற்சிகளை மேற்கொண்ட பிறகும், அவர்களின் அதிருப்தியை உங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், வாழ்க்கைத் துணையிடம் எந்த வகையிலும் பொய் சொல்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்களிடையே ஒரு பெரிய சர்ச்சை ஏற்படக்கூடும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நன்மை பயக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று நண்பர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மேலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை பற்றி பேசினால், அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் வேலை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாள். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை

மீனம் - உங்கள் பிடிவாத இயல்பு இன்று உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசும் போது உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்தவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வார். இதனால் இருவரிடையே நெருக்கம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை உண்மையிலேயே நேசிக்கிறார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக பொழுதைக் கழிப்பீர்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒருவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தால், இன்று அதை திருப்பிச் செலுத்த முடியும். ஆரோக்கிய விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0