இந்த திறமையான ராசிகாரர்களின் மூளை எப்படி எல்லாம் வேலை செய்யும் தெரியுமா?
ஒருவருக்கு பின் அதே போன்ற திறமை அவரின் மகன், மகள் கொண்டிருந்தாலும் முதல் நபர் அளவிற்கு பேசப்படுவது அல்லது புகழப்படுவது கிடையாது.
திறமை என்பது பிறவி வரம் என்று சொல்லலாம். சிலருக்கு பரம்பரையில் வந்தாலும், முதலில் உருவாகக்கூடிய திறமையான கலைஞர், விளையாட்டு வீரர், அறிவியல் அறிஞர், அரசியல்வாதி அல்லது சாதாரண வாழ்க்கை வாழக்கூடிய நபரைக் கணக்கில் கொண்டால் கூட மிக திறமைசாலியாக்கவும், புகழ் பெற்றவராக இருப்பார்.
ஒருவருக்கு பின் அதே போன்ற திறமை அவரின் மகன், மகள் கொண்டிருந்தாலும் முதல் நபர் அளவிற்கு பேசப்படுவது அல்லது புகழப்படுவது கிடையாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை இருக்கிறது. அதை சரியாக அறிந்து கொள்வதும், சரியான நேரத்தில் அறிந்து கொண்டு அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவரே வாழ்வில் பெரியளவில் வெற்றி அடைகிறார், புகழடைகிறார்.
அனைவரிடத்திலும் கடுமையாக உழைக்கும் சக்தி இருந்தாலும், சிலர் மட்டும் முன்னேற அவர்களிடம் இருக்கும் சிறப்பான திறமை தான் காரணமாக இருக்கும். ஒருவரிடத்தில் இருக்கும் தனித்திறன் அவரை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லத்தக்கது. ஜோதிட ரீதியாக எந்த ராசியினர் எல்லாம் சிறப்பான திறமை உடைவர்கள் மற்றும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.
மிதுனம்
ஞானத்தின் அளிக்கக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய மிதுன ராசியினரிடத்தில் உள்ள அற்புத திறமை, எந்த ஒரு விஷயத்தையும் மிக விரைவாக கற்றுக் கொள்பவர்கள். எந்த ஒரு வெற்றிக்கும் அந்த செயலை செய்து முடிக்க தேவையான விஷயங்களை கற்றறிவது, செயல் முறை அறிவு முக்கியம். அது மிதுன ராசியினரிடம் இருப்பது மிக சிறப்பு வாய்ந்தது.
பெரும்பாலான புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய கலைஞர்கள், பல மொழிகளை கற்று வித்தகராகக் கூடியவர்கள் பெரும்பாலும் இந்த ராசியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
கன்னி
ஞானத்தின் அளிக்கக்கூடிய புதன் பகவான் ஆளக்கூடிய மற்றொரு ராசி கன்னி. இவர்கள் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்கக்கூடிய மன உறுதி கொண்டவர்கள். அதுமட்டுமல்லாமல் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும், வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த ராசியினர் எந்த ஒரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள் என்ற நற்பெயரால் அறியப்படுவார்கள்.
விருச்சிகம்
செவ்வாய் ஆளக்கூடிய விருச்சிக ராசியினர் மிகவும் புத்தி கூர்மையானவர்கள் அல்ல ஆனால் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க வேண்டும் என தீவிரமாக இறங்குபவர்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் தனக்கான சரியான நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என நினைத்து சிறப்பாக வேலை செய்து முடிக்கும் திறமை வாய்ந்தவர்கள்.
மகரம்
மகர ராசியினரின் திறமை அதீத ஆற்றல் வாய்ந்தவர்கள் மட்டுமல்லாமல் எப்போதும் வேலை, தொழிலை சிந்திக்கக்கூடியவர்கள். இந்த குணம் அல்லது திறமை அவர்களை நல்ல தலைவராக்கக்கூடியது.
இவர்களுக்கு தன் இலக்கை அடைய சரியான வழி எது என்பது தெரிந்து வைத்திருப்பதோடு, எப்போதும் அதை அடைவதற்கான கவனம், கடின உழைப்பு கொண்டவர்கள். அதன் மூலம் எந்த ஒரு இலக்கையும் சிறப்பாக எட்டிவிடுவார்கள்.
மீனம்
குரு ஆளக்கூடிய மீன ராசியினருக்கு இறைவனால் அளிக்கப்பட்ட சிறப்பான திறமைகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். குறிப்பாக கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு அதீத கற்பனைத் திறன் இருப்பதோடு புதிய விஷயங்களை உருக்காக்கும் திறமை மிக்கவர்கள். எனவே அவர்களின் உணர்வு, மன வெளிப்பாடு அவர்களின் கலை அல்லது ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.