இன்றைய ராசிப்பலன் (04.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளை அதிகமா சந்திப்பாங்க!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

   இன்றைய ராசிப்பலன் (04.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளை அதிகமா சந்திப்பாங்க!

இன்று மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இன்று உங்களுக்கு வேலை முன்னணியில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் மிகவும் சோர்வாக உணருவீர்கள். தொடர்ச்சியாக வேலை செய்வதைத் தவிர்த்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க முயற்சிக்கவும். இன்று, பணம் தொடர்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் இன்று ஏதோ ஒரு சிறப்பான சம்பவம் நிகழலாம். பேச்சுத்திறமையால் சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடல்நிலையைப் பற்றி பேசினால், இன்று மனசோர்வு அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியம் பாதிக்கும். எதிர்மறை எண்ணங்கள் உங்களில் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 முதல் 9:45 வரை

ரிஷபம் - உங்கள் துறையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இன்று நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும். கூட்டு வியாபாரிகள் இன்று ஏதாவது முக்கியமான வணிக முடிவை எடுத்தால், மிகவும் கவனமாக யோசித்து செய்ய வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் இனிமையும் இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

மிதுனம் - வேலை முன்னணியில், இன்று உங்களது சிறப்பான செயல்திறனால் அலுவலகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். மேலும், உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வர்த்தகர்கள் இன்றைய தினம் எடுக்கும் முடிவுகளில் சரியான பலனைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடனான உங்களது தவறான அணுகுமுறை பிரிவை ஏற்படுத்தக்கூடும். குடும்ப பிரச்சனைகளால் நிறைய தொந்தரவுகள் ஏற்படலாம். பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டுமெனில், குடும்பத்தாருடன் பொறுமையாக விவாதிக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:45 மணி முதல் மாலை 4:05 மணி வரை

கடகம் - தனிப்பட்ட வாழ்க்கையின் சில தொல்லைகள், உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் மன அமைதியின்றி, சோர்வடைவீர்கள். வீட்டில் அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளால், மன அமைதி கெடும். இத்தகைய சூழ்நிலையில், முழு தைரியத்துடனும் பொறுமையுடனும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். பணிபுரிவோர், தங்கள் உயர் அதிகாரிகளின் கடுமையாக அணுகுமுறைக்கு ஆளாகக்கூடும். அவர்களின் புகார்கள் அனைத்தையும் விரைவில் தீர்க்க முயற்சிப்பது நல்லது. உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று உங்கள் மனைவியுடன் ஒரு சிறிய சண்டை ஏற்படலாம். பொருளாதார முன்னணியில், இன்றைய தினம் சாதாரணமாக இருக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்கவும். இந்த நேரம் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

சிம்மம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். இது தவிர, சிலருக்கு நிதி ரீதியாகவும் உதவலாம். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் சாத்தியமாகும். அன்புக்குரியவரின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கும். பணியில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும். எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படாவிட்டாலும், தைரியத்துடன் பணியாற்ற வேண்டும். இன்று வணிகர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். சில சட்ட சிக்கல்களிலும் சிக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அலட்சியத்தின் காரணமாக தொல்லைகள் அதிகரிக்கும். உங்கள் அன்றாட வழக்கத்தில் தேவையான சில மாற்றங்களைச் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 முதல் 9 மணி வரை

கன்னி - திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் இருவரின் பரஸ்பர புரிதல் அதிகரிப்பதோடு, உங்கள் உறவில் இனிமையும் நெருக்கமும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பொருளாதார முன்னணியில், நாள் நன்றாக இருக்கும். இன்று கூடுதல் வருமானத்தை பெறலாம். இவை அனைத்தும் உங்களின் விடா முயற்சிக்கான பலனாகும். இது தவிர, இன்று நீங்கள் சில புதிய பொருளாதார திட்டங்களையும் தொடங்கலாம். உங்கள் தந்தையின் வியாபாரத்துடன் நீங்கள் இணைந்திருந்தால், இன்று நல்ல பலன்களைப் பெற்றிடலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று தங்கள் முதலாளியின் பாராட்டை பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதகமானது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம் - இன்று உங்களுக்கு ஒரு அருமையான நாளாக இருக்க போகிறது. குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் இன்று நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வீட்டில் இருந்த மன அழுத்தம் நிறைந்த சூழல் மாறும். இன்று உங்கள் குடும்பத்தாருடன் நாளை செலவிடுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், உங்களது நேர்மறையான சிந்தனையால் இன்று ஒரு பெரிய வெற்றியைப் பெறப்போகிறீர்கள். வர்த்தகர்கள், இன்று தங்கள் எதிரிகளை விட அதிகமாக செயல்படுவீர்கள். உங்களது எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காணலாம். இன்று முக்கியமான முடிவை எடுத்தால், அதனை மிகவும் சிந்தனையுடன் எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த முடிவு உங்கள் வாழ்க்கையே மாற்றக்கூடியது. மேலும், அதிகப்படியான உழைப்பை தவிர்க்கவும். இல்லையெனில் இன்று உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:45 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

விருச்சிகம் - இன்று பணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக இருக்கலாம். கடன் வாங்கியிருந்தால், கடன் வழங்கியவர்கள் இன்று அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம். இன்று நீங்கள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு முக்கியமான முடிவும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அலுவலக வேலைகளில் ஏதேனும் தடை இருந்தால், சகஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். தவறான புரிதல் காரணமாக, வீட்டு உறுப்பினருடன் சிக்கல் ஏற்படலாம். உங்கள் மனதை அமைதியாக வைத்து கொள்வது நல்லது. வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் விரும்பினால், உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் நீங்கள் சம கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:25 மணி வரை

தனுசு - இன்று உங்களது உடல்நலம் பற்றிப் பேசினால், மன அழுத்தத்தால் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணருவீர்கள். இத்தகைய சூழலில் நீங்கள் உங்களை நன்றாக கவனித்துக் கொள்வது நல்லது. உங்கள் துறையில் விரும்பிய முடிவுகள் கிடைக்கவிட்டால், அதற்காக ஏமாற்றமடைய வேண்டியதில்லை. கடின உழைப்பு மட்டுமே வெற்றியின் ஒரே மந்திரம். உங்கள் கடின உழைப்பு நிச்சயம் வீணாகாது. விரைவில் உங்களுக்கு சரியான பலன் கிடைக்கும். இன்று வர்த்தகர்களுக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும். லாபம் ஈட்ட உங்களுக்கு வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் இன்று மன அழுத்தம் நிறைந்து காணப்படும். வீட்டு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 10 மணி வரை

மகரம் - இன்று நீங்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாக இருக்கும். மேலும் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உங்கள் துறையில் நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். இன்று வேலை காரணமாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். காதல் விஷயத்தில் இன்று மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் உறவு தொடர்பாக எந்தவொரு முக்கியமான முடிவையும் நீங்கள் இன்று எடுக்கலாம். திருமணமானவர்கள், தங்கள் மனைவியின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். ஒருவேளை இன்று உங்கள் காதலியிடமிருந்து சில நல்ல செய்திகளையும் பெற வாய்ப்புள்ளது. பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:55 மணி முதல் மதியம் 1 மணி வரை

கும்பம் - குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் தீவிரமடையும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களுக்கு உதவ நீங்கள் தயாராக இருப்பீர்கள். குறிப்பாக உங்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று, உங்கள் குழந்தை தொடர்பான கவலையிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் சிறந்த செயல்திறன் வெளிகொணர முடியும். உயர் அதிகாரிகள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக பழகுவார்கள். மேலும், வரும் காலத்தில் உங்கள் உழைப்பிற்கான சரியான முடிவுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:45 மணி வரை

மீனம் - நிதி நிலைமையில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம். நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்த பொருளாதார லாபத்தை இன்று பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர அன்பு அதிகரிக்கும். நாளின் பிற்பகுதியில் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். சூழ்நிலையை புரிந்து கொண்டு, பிரச்சனையை உடனடியாக முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் நீதிமன்ற வழக்கில் சிக்கிக்கொள்ளக்கூடும். இன்று அலுவலகத்தில் விடாமுயற்சியுடன் பணியாற்ற வேண்டும். நீங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை விரும்பினால், உங்கள் உயர் அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் 6 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0