இன்று இந்த ராசிக்காரங்க பேச்சால பெரிய சிக்கலில் சிக்குவாங்களாம்!

தை மாதத்தின் முதல் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். 

இன்று இந்த ராசிக்காரங்க பேச்சால பெரிய சிக்கலில் சிக்குவாங்களாம்!

இன்று ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 14 வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சாதகமான நாளாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று குடும்பத்தாருடன் கூடுதல் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலையைப் பற்றி பேசும்போது, வணிகர்கள் இன்று பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு உங்கள் பணி தொடரும். உத்தியோகஸ்தர்கள் தங்களள் வேலைகளை இன்று சரியான நேரத்தில் முடிக்க முடியும். பாதிக்கப்பட்ட உடல்நலம் மேம்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம் - இன்று மதியம் வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் இன்று அதிகப்படியான வேலை இருக்கும். முறையாக திட்டமிட்டு உங்கள் பணிகளை முடிக்க முயற்சித்தால், எல்லா பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெற முடியும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் நிலையற்றதாகவே இருக்கும். இன்று நீங்கள் கோபத்துடன் அல்ல, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவு இணக்கமாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை, தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி நிலைமையை மேம்படுத்தலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சரியாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை

மிதுனம் - இன்று மதியம் முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால், கவனமாகவும், நிதானமாகவும் இருக்கவும். இன்று உங்களுக்கு வேலை முன்னணியில் நல்ல நாளாக இருக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இன்று நல்ல வாய்ப்பைப் பெறலாம். அரசு வேலையில் இருப்போர், இன்று அலுவலகத்தில் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். சிறு கவனக்குறைவு கூட நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் வேலையை இழக்கவும் நேரிடலாம். வணிகர்கள் இன்று பெரிய நிதி சிக்கலை தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் மாலைக்குள் எல்லாம் சரியாகிவிடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம் - உங்கள் பேச்சால் இன்று பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். வேலையில் கவனத்தை செலுத்துங்கள். கேட்காத யாருக்கும் அறிவுரை வழங்காதீர்கள். பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். சில்லறை வர்த்தகர்கள் இன்று நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். இன்று மாணவர்கள் தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தவும். பொருளாதார முன்னணியில் இன்று கலவையான முடிவுகளைப் பெறலாம். நிதி பிரச்சனையில் மன அழுத்தத்தில் இருப்பீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம்

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 முதல் இரவு 9 மணி வரை

சிம்மம் - இன்று நீங்கள் அவசர அவசரமாக எந்தவொரு செயலையும் செய்யவே கூடாது. குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இன்று குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். அலுவலகத்தில் இன்று உங்களது அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். உங்களது சிறு அலட்சியம் கூட உயர் அதிகாரிகளின் அதிருப்தியை ஏற்படுத்தி விடும். சிறு வணிகர்கள் இன்று லாபம் ஈட்ட நல்ல வாய்ப்புள்ளது. பண வரவு மேம்பட வாய்ப்புள்ளது. நிதி சார்ந்த முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால், உங்கள் நிதி சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

கன்னி - எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள். அலுவலகத்தில் உங்களது கடின உழைப்பை தொடர்ந்து செலுத்தி வாருங்கள். நேரம் வரும்போது அதற்கான பலனை நிச்சயமாகப் பெறுவீர்கள். மேலும், சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது. வணிகர்கள் இன்று நல்ல பலனைப் பெறுவார்கள். பங்குச் சந்தை தொடர்புடையவர்கள், இன்று மிகுந்த சிந்தனையுடன் செயல்பட்டால், இழப்புகளை தவிர்க்கலாம். குடும்ப நிலைமை நன்றாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிப்பது நல்லது. உடல்நிலை சரியில்லாவிட்டால், உடனே மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம் - இன்று வேலை முன்னணியில் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும், உயர் அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். இது உங்களது முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாகும். கூட்டு வியாபாரிகள், இன்று நிதி ரீதியாக பயனடையலாம். நிதி நிலைமை மேம்படும். இன்று நிதி சார்ந்த முடிவுகளை எடுத்தால், அதற்கான சிறப்பான பலனை வரும் நாட்களில் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

விருச்சிகம் - வேலை முன்னணியில் இன்று நல்ல வெற்றியைப் பெற முடியும். ஊதிய உயர்வு பெறுவதற்கு வலுவான வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களது கடின உழைப்பின் விளைவாகும். மேலும், உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வணிகர்கள் இன்று நிறைய உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதன் மூலம் உங்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தொடர்பான எந்தவொரு பெரிய கவலையையும் இன்று சமாளிக்க முடியும். உடல்நலம் பற்றி பேசினால், பழைய உணவுகள் உண்ணுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு - இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் வெற்றியை அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவீர்கள். தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையோர் தங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறலாம். வணிகர்கள் இன்று நல்ல வாய்ப்பைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சில மன அழுத்தம் சாத்தியமாகும். உடன் பிறப்புகளுடன் உங்களுக்கு வேறுபாடுகள் இருக்கலாம். உடல்நலம் பற்றி பேசினால், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:55 மணி வரை

மகரம் - நீங்கள் சில காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருந்தால், இன்று உங்களுக்கு சாதகமான முடிவாக இருக்கும். கவலைகள் நீங்கி மன அமைதியை உணர்வீர்கள். வேலை முன்னணியில் இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. இன்று உங்கள் வாழ்க்கை புதிய திசையில் நகரும் வாய்ப்பை பெறலாம். அத்தகைய வாய்ப்பை கை விட வேண்டாம். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர், இன்று பெரிய லாபத்தைப் பெற்றிடலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து நற்செய்திகளை பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 12 மணி வரை

கும்பம் - இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. நீண்ட காலமாக சிக்கிய ஒரு முக்கியமான பணியை முடிக்கலாம். உங்கள் பணியில் இன்று வெற்றி வெற வலுவான வாய்ப்புள்ளது. சொந்த தொழில் தொடங்கும் திட்டம் நிதி சிக்கலால் பாதியில் நின்றிருந்தால், இன்று சிக்கல்கள் தீரும். இருப்பினும், எந்தவொரு அவசர முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். திருமணமாகாதவர்கள், இன்று உங்களது வரும் கால வாழ்க்கைத் துணையை சந்திக்க முடியும். உடல்நலத்தைப் பொறுத்தவரை, யோகா, தியானம் போன்வற்றை செய்வதை வழக்கமாக கொண்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் இரவு 9:50 மணி வரை

மீனம் - வணிகர்கள் இன்று நிதி ரீதியாக பயனடையலாம். உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் இன்று உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். உங்கள் திறமையால், சக ஊழியர்களுடனான நட்பை வலுப்படுத்திக் கொள்ள முடியும். பொருளாதார நிலைமைய மேம்படும். யோசித்து செலவு செய்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் இயல்பில் சில மாற்றங்களைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்கும். புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 10 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0