இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்க போறீங்க...

அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், தொடர்ந்து படியுங்கள். 

இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்க போறீங்க...

இந்த வாரம், அதாவது செப்டம்பர் 19, 2021 முதல் செப்டம்பர் 25, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

மேஷம் - வேலை விஷயத்தில், இந்த வாரம் உங்களுக்கு சற்று கலக்கமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் முன்னேறலாம். குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிவோருக்கு, இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அரசு ஊழியர்களும் நல்ல வெற்றியைப் பெறலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு சர்ச்சைக்கு வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக நீங்கள் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். கூட்டு வியாபாரம் செய்வோர் இந்த காலகட்டத்தில் எந்த பெரிய விஷயத்தையும் செய்வதற்கு முன்பு கவனமாக சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் கிட்டத்தட்ட சாதாரணமாக இருக்கும். வேலையுடன் உங்கள் குடும்பத்தினர் மீதும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.  நிதி ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யும் தவறை மட்டும் செய்யாதீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இந்த காலத்தில் கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

ரிஷபம் - குடும்பத்தினருடன் உங்களுக்கு போதுமான நேரம் செலவிட முடியாத நிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டின் சூழல் மோசமடையக்கூடும். அன்புக்குரியவர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் அனைத்து கசப்புகளையும் மறந்து உங்கள் உறவை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது. இந்த நேரத்தில், உங்கள் துணையிடமிருந்து சிறப்பான ஆதரவும் கிடைக்காது. உங்கள் அன்புக்குரியவரின் முரட்டுத்தனமான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யலாம். உங்கள் குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடன் நீங்கள் நல்லுறவை பேண வேண்டும். நிதி ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். நீங்கள் ஏதேனும் மதிப்புமிக்க பொருளை வாங்க திட்டமிட்டால், இந்த வாரத்தில் அதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து முதலாளியின் அழுத்தம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எல்லா வேலைகளையும் மிகவும் புத்திசாலித்தனமான, அமைதியான மனதுடன் முடிக்க வேண்டும். இந்த வாரம் சிறு தொழிலதிபர்களுக்கு லாபகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள்

வருமானம் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு ஒவ்வாமை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

மிதுனம் - இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு சவாலானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், அவை காணாமல் போகலாம். இதனால் நீங்கள் பெரும் சிக்கலில் சிக்கலாம். வேலையில் அதிக கவனக்குறைவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட சில முக்கிய பொறுப்புகளும் திரும்பப் பெறப்படலாம். வணிகர்கள் இந்த வாரம் பல சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், உங்களின் இந்தப் பயணங்களின் மூலம் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் வணிகத்தை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்க முயற்சித்தால், நீங்கள் வெற்றியைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எந்த குடும்ப பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பழைய குடும்பக் கடனைத் தீர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கடகம் - இந்த ஏழு நாட்கள் வணிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரம் பெருகும். நீங்கள் மின்னணுவியல் தொடர்பான வியாபாரம் செய்தால், வணிகம் முன்னேறும். அதே நேரத்தில், மர வியாபாரிகளும் நல்ல லாபம் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் கலங்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் முக்கியமான பணியில் சில தடைகள் இருக்கும். உங்களால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். முழு உழைப்பு மற்றும் நேர்மையுடன் உங்கள் வேலையை முடிக்க முயற்சித்தால் விரைவில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று செலவிடலாம். உங்கள் துணையை நன்றாக கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் யோசிக்காமல் தேவைக்கு அதிகமாகச் செலவழித்தால், பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். உங்கள் உடல்நலத்தைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் நீங்கள் சில நாள்பட்ட நோய்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம் - நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் கடினமாக முயற்சிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நீங்கள் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தால், நீங்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம். நிதி சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி இழப்பு சாத்தியமாகும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் வேலை நடுவில் சிக்கிக்கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டின் எந்த உறுப்பினருடனும் தகராறு இருந்தால், இந்த காலகட்டத்தில் அனைத்து தவறான புரிதல்களும் நீக்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதன் மூலம் உங்கள் பெரிய கவலைகள் நீங்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு கலவையாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

கன்னி - இந்த காலகட்டத்தில், தேவைப்படும் ஒருவருக்கு உதவ உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயவுசெய்து உங்கள் திறமைக்கு ஏற்ப உதவுங்கள். ஒருவேளை உங்கள் சிறிய உதவி கூட பெரிய பிரச்சனையில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம். இது தவிர, உங்கள் வீட்டின் பெரியவர்களுக்கு சேவை செய்யுங்கள். இதனால், நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.​​அவர்களுடன் பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நிதி அடிப்படையில், இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் வியாபாரம் செய்தால், கடந்த காலத்தில் செய்யப்பட்ட எந்த முதலீட்டிலும் இரட்டிப்பு நன்மையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையெனில், உங்கள் வேலையை இழக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த காலத்தில் வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். உங்கள் உணவில் கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

துலாம் - வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பணம் தொடர்பான கவலைகளிலிருந்து விடுபடலாம். உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் பதவி உயர்வும் பெறலாம். வணிகர்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வேலை வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையது என்றால் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டின் உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். அதுமட்டுமின்றி, இந்த காலத்தில் பரம்பரை சொத்து தொடர்பான எந்த சர்ச்சையும் தீர்க்கப்படும். உங்கள் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், சிறிய பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

விருச்சிகம் - இந்த காலத்தில் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வேலையை கெடுக்கும் எதையும் அதிக நம்பிக்கையுடன் செய்யாதீர்கள். முதலாளி உங்களுக்கு ஒதுக்கும் முக்கிய பொறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். வணிகர்கள் கலவையான முடிவுகளைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரம் செய்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பெற்றோருக்கு போதுமான நேரம் செலவிடலாம். உங்கள் தந்தையின் உடல்நிலை சரியில்லை என்றால் அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

தனுசு - வணிகர்கள் அரசு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சிறிய குறைபாடும் உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். இந்த வாரம் கூட்டு வியாபாரம் செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வணிகம் வேகமாக வளரும். உங்கள் நிதி பிரச்சனையும் தீர்க்கப்படலாம். சிறு வணிகர்களும் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் உத்தியோகஸ்தர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சச்சரவுகள் சாத்தியமாகும். இந்த நேரத்தில் பணம் சம்பந்தமாக உங்கள் வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் விஷயத்தை புத்திசாலித்தனமாக கையாள முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் வீட்டின் அமைதி பாதிக்கப்படலாம். இந்த நேரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மகரம் - ஆன்லைன் வர்த்தகம் செய்வோருக்கு இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களை அடைய முடியும். நீங்கள் மருந்து வியாபாரம் செய்தால் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு உயர் பதவியைப் பெறலாம். உங்கள் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சொந்தமாக சிறு தொழிலை தொடங்க விரும்பினால், நீங்கள் வெற்றி பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் அன்புக்குரியவர்களுடன், குறிப்பாக உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியுடன் செலவிடுவீர்கள். உறவில் நல்லிணக்கம் நன்றாக இருக்கும். நீண்ட காலமாக வாழ்க்கைத் துணையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் தேடல் முடிவடையும். ஒரு நல்ல வரன் உங்களைத் தேடி வரலாம். விரைவில் வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்க போகிறது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

கும்பம் - இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. இந்த நேரத்தில், பல சிக்கல்கள் ஏற்படலாம். அதை சமாளிக்க நீங்கள் மிகவும் கடினமா முயற்சிக்க வேண்டியிருக்கும். நிதித் தடைகள் காரணமாக, உங்கள் பல திட்டங்கள் இந்த காலகட்டத்தில் முழுமையடையாமல் போகலாம். நிதி ரீதியாக வலுவடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இருப்பினும், தவறான அல்லது குறுக்குவழியை பின்பற்றுவதில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில், உங்கள் கஷ்டங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம். நீங்கள் வியாபாரம் செய்தால், இந்த நேரத்தில் எந்த புதிய வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். புதிய வணிக முன்மொழிவு கிடைத்தாலும், நீங்கள் அவசரமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. உடல்நலம் குறித்து எந்த கவனக்குறைவும் எடுக்காவிட்டால் நல்லது. எதிர்பார்த்த முடிவுகளைப் பெறாததால், இந்தக் காலகட்டத்தில் உங்கள் இயல்பில் எரிச்சல் ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் மனதை குளிர்ச்சியாக வைத்து, அனைத்து கவலைகளையும் மறந்து, பிரச்சனைகளுக்கு அமைதியாக தீர்வு காண முயற்சி செய்யுங்கள். திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த நேரம் கலவையானதாக இருக்கப் போகிறது. உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். உணவுப் பழக்கத்தில் ஏற்படும் தொந்தரவுகள் காரணமாகவும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர, தூக்கமின்மையால் பிரச்சனை உங்களை தொந்தரவு செய்யும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மீனம் - அலுவலகத்தில் இந்த வாரம் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். கடினமான சூழ்நிலைகளில் கூட அமைதியாக வேலை செய்யும் உங்கள் கலை மேலதிகாரிகளால் மிகவும் பாராட்டப்படும்.​​நீங்கள் ஒவ்வொரு சவாலையும் மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வீர்கள். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வணிகர்களின் வேலை மிக வேகமாக முன்னேறும். எதிர்பார்த்த லாபத்தை அடைவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் சில புதிய திட்டங்களில் வேலையைத் தொடங்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் நிதி நன்மைகளைப் பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் பெரிய செலவு செய்தாலும், அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் திருமணமாகாதவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நபரின் வருகை இருக்கலாம். உடல்நலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வீட்டை விட்டு விலகி வாழ்ந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: புதன்

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0