இன்று இந்த ராசிக்காரர்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது
இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 07வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்றைய தினம் அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் இருந்து விலகி, உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்களது அலட்சியப்போக்கால் வேலையில் சிரமங்கள் அதிகரிக்கலாம். பாதகமான சூழல்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. இன்று வணிகர்கள் கடன் வழங்குவதைத் தவிர்க்கவும். மேலும், தொழில் எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடு முயற்சிக்கவும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை
ரிஷபம் - இன்றைய தினம் உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் சில பெரிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். நிதி விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. எந்தவொரு பழைய கடனையும் திருப்பிச் செலுத்துவதில் அழுத்தம் இருக்கும். வேலை முன்னணியில், நீங்கள் இன்று அலுவலகத்தில் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். எல்லா பணிகளையும் அமைதியான மனதுடன் கவனமாக கையாள முயற்சிக்கவும். இன்று வணிகர்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இணக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வியில் எதிர்கொண்ட தடைகளை சமாளிக்க முடியும். உடல்நிலை பற்றி பேசுகையில், ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:55 மணி முதல் இரவு 7:00 மணி வரை
மிதுனம் - சிறு விஷயங்களுக்காக வருத்தப்பட்டு பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். இல்லையென்றால், சிக்கல்களில் சிக்கக்கூடும். பெற்றோரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய தருணமிது. பண விவகாரங்கள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் இருக்கலாம். வேலை முன்னணியில், இன்று நல்ல முடிவுகளை பெறலாம். உங்களது கடின உழைப்பிற்கான பலனை பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்கள் இன்றைய தினம் பயணத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், வீண் விரயமும், அலைச்சலும் மட்டுமே மிஞ்சும். இன்றைய தினம் மனரீதியாக சுமையாக உணருவீர்கள். இதனால், ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:10 மணி முதல் மதியம் 3:50 மணி வரை
கடகம் - இன்று தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தாழ்மையான இயல்பு உங்களை குடும்பத்துடன் நெருக்கமாக கொண்டு வரும். பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பான நடத்தையால் மன அழுத்தம் அகலும். இன்று பணத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வான நிலை இருக்கும். வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். இன்று அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மறுபுறம், வணிகர்கள் இன்று பயனடையலாம். ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 11:00 மணி வரை
சிம்மம் - இன்று உங்கள் வாழ்க்கையில் சில வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம். உங்களது கடின உழைப்பிற்கான பலனை பெற வாய்ப்புள்ளது. அதன்மூலம் வாழ்வில் முன்னேற ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். இன்று வணிகர்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, சிறந்ததை வழங்க முயற்சிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும். திடீரென்று பெரிய செலவு இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சாதகமானது.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை
கன்னி - இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்கள் திருமணத்தை பற்றி வீட்டில் விவாதிக்கலாம். நல்ல வரன் தேடி வரக்கூடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று வீட்டு வசதிகளுக்காக கொஞ்சம் பணம் செலவிடலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கக்கூடும். வியாபாரிகள், திடீரென்று ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், விரைவில் இந்த பிரச்சனை சமாளிக்கப்படும். முக்கிய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 5:00 மணி வரை
துலாம் - இன்று உங்களுக்கு கிடைக்கும் பொழுதை ஓய்வெடுக்க நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனைகளால் உங்களது மன அமைதியைக் குலைக்க வேண்டாம். இன்று அலுவலகத்தில் சில முக்கியமான தகவல்களைப் பெறலாம். உயர் அதிகாரிகளுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். மோதலையும் குழப்பத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், இழப்பு உங்களுக்கு தான். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இன்று உங்களது வணிகம் வேகமாக வளருவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பாசமும் ஆதரவும் கிடைக்கும். உடன்பிறப்புகள் நிதி உதவி செய்யலாம். உடல்நிலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் காலையில் திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மாலை 5:00 மணி வரை
விருச்சிகம் - நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறவில்லை என்றால், ஏமாற்றமடைய வேண்டாம். விரைவில் நிலைமை மேம்படும். அலுவலகத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உயர் அதிகாரிகளுடன் வெளிப்படையாக பேச வேண்டும். இந்த தருணத்தில் மன அழுத்தத்தோடு பணிபுரிவது உடல்நலத்தையும், செயல்திறனையும் சரிவுக்கு வழிவகுக்கும். வியாபாரிகளின் சில முக்கிய வேலைகள், அரசு பிரச்சனை காரணமாக நடுவில் சிக்கிக்கொள்ளக்கூடும். இன்று நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பழைய கடனை திருப்பிச் செலுத்த முடியும். வீட்டில் அமைதி நிலவும். குடும்பத்துடனான உறவு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:05 மணி வரை
தனுசு - வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வான நிலை இருக்கும். பிரச்சனைகள் மற்றும் சவால்களை கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, அவற்றை தைரியமாக எதிர்கொண்டால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். மேலும், உயர் அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது எந்த அவசரமும் வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
மகரம் - இன்று, பணிச்சுமை காரணமாக சோர்வு அதிகரித்து, ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதற்கு போதுமான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படலாம். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாடுகள் முடிவடையும். இன்று உங்களை அன்போடு நடத்துவார்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சி செய்யுங்கள். பொருளாதார முன்னணியில், நாள் நன்றாக இருக்கும். இன்று வருமானத்தை அதிகரிக்க முடியும். இன்று அலுவலகத்தில் தேவையின்றி ஒருவருடன் தகராறு ஏற்படலாம். இதுபோன்றவற்றைத் தவிர்த்து, வேலையில் கவனம் செலுத்த முயற்சிப்பது நல்லது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறலாம். இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இதனால், எதிர்காலத்தில் வருத்தப்படக்கூடிய சூழல் ஏற்படலாம் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை
கும்பம் - இன்று பொருளாதார முன்னணியில் ஆரோக்கியமான நாளாக இருக்கப்போகிறது. அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் சில முக்கியமான நபர்களை சந்திக்கலாம். இந்த சந்திப்பிலிருந்து நீங்கள் விரைவில் பயனடைவீர்கள். இன்று வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்கள் வணிகம் தங்கம் மற்றும் வெள்ளி தொடர்புடையது என்றால், நிச்சயமாக விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கோபத்தில் தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வேலையில் அதிக பரபரப்பாக இருப்பதால், உங்கள் வாழ்க்கைத்துணைக்கு போதுமான நேரம் கொடுக்க முடியாமல் போகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:05 முதல் 9:30 மணி வரை
மீனம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் என்பதால் கவனமாக இருக்கவும். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சங்கடங்கள் இருந்தால், நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரை அணுக வேண்டும். அவசரமாக எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் கிடைக்கப்பெறுவீர்கள். இன்று உங்களுக்கு சில பெரிய மற்றும் முக்கியமான பொறுப்பு வழங்கப்படலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் இன்று பயனடைவார்கள். நீங்கள் இரும்பு வர்த்தகம் செய்பவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வீட்டின் சூழ்நிலை இன்று நன்றாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறையக்கூடும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். பண்டிகை காலத்தில் வீட்டு செலவுகள் அதிகரிக்கக்கூடும். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு வாயு அல்லது அஜீரண பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் மதியம் 2:00 மணி வரை