எப்பவுமே இந்த 4 பொருளை மட்டுமே காலியாயிடுச்சுன்னு சொல்லாதீங்க... இல்லன்னா பணப்பிரச்சனை வரும்...
வாஸ்து படி, வீட்டின் சமையலறை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. இத்தகைய சூழ்நிலையில், சமையலறையில் சில சிறப்பான பொருட்கள் உள்ளன. இந்த பொருட்கள் செல்வத்தின் நாயகியான லட்சுமி தேவி குடியிருக்கும் பொருட்களாகும்.
நம் அனைவருக்குமே வாழ்க்கை நன்கு மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகவே நாம் அல்லும் பகலும் அயராது உழைத்து பணத்தை சம்பாதிக்கிறோம். இது தவிர, பலர் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.
ஆனால் வாஸ்து படி, வீட்டின் சமையலறை மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. இத்தகைய சூழ்நிலையில், சமையலறையில் சில சிறப்பான பொருட்கள் உள்ளன. இந்த பொருட்கள் செல்வத்தின் நாயகியான லட்சுமி தேவி குடியிருக்கும் பொருட்களாகும்.
இந்த பொருட்கள் ஒரு வீட்டில் எப்போதுமே இருந்தால், அந்த வீட்டில் பணப்பிரச்சனை இருக்காது. ஆனால் அப்பொருட்கள் இல்லாவிட்டால், அது லட்சுமி தேவியின் அதிருப்திக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போது அந்த பொருட்கள் என்னவென்பதை காண்போம்.
மாவு - வீட்டின் சமையலறையில் வைத்திருக்கும் மாவு எப்போதுமே வீட்டில் முழுமையாக தீர்ந்துவிடக்கூடாது. வாஸ்து படி, மாவு பாத்திரமானது முற்றிலும் காலியாக இருக்கக்கூடாது. இது லட்சுமி தேவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். இதனுடன் ஒருவர் சமுதாயத்தில் மரியாதையை இழக்க நேரிடுகிறது. எனவே இனிமேல் உங்கள் வீட்டில் உள்ள மாவு முடிவதற்கு ஒரு நாள் முன்பே அதை வாங்கிவிடுங்கள்.
மஞ்சள் - மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. எனவே இது ஒவ்வொரு சுப காரியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் குரு பகவானுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் சமையலறையில் மஞ்சள் முற்றிலும் தீர்ந்துவிட்டால், அவர் குரு தோஷத்தை எதிர்கொள்ள நேரிடலாம். இதன் காரணமாக வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்பில் குறைவு ஏற்படலாம். இது மட்டுமின்றி, சுப வேலைகளிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் வீட்டில் மஞ்சள் குறைவாக இருந்தால், அது காலியாவதற்கு முன்பே வாங்கி வைத்து விடுங்கள்.
அரிசி - மஞ்சளைப் போலவே அரிசியும் மத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. எந்த வழிபாடும் அட்சதை அல்லது அரிசி இல்லாமல் முழுமையடையாது. ஆனால் அரிசியில் புழு வந்துவிடும் என்பதால், பலர் அதை மொத்தமாக வாங்குவதை தவிர்க்கிறார்கள். ஆனால் அரிசி சுக்கிர பகவானுக்கு சொந்தமானது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். ஆனால் அரிசி பற்றாக்குறை இருந்தால், வாழ்க்கையில் பணப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உங்கள் வீட்டில் எப்போதுமே அரிசி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உப்பு - உப்பு இல்லாமல் எதிலுமே சுவை முழுமையடையாது. அத்தகைய உப்பு, சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருளாகும். சமையலறையில் இருக்கும் உப்பு எப்போதுமே காலியாக இருக்கக்கூடாது. வாஸ்து படி, உப்பு வீட்டில் முற்றிலும் காலியாகிவிட்டால், வாழ்க்கையில் நிதி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது தவிர யாருடைய வீட்டில் இருந்தும் உப்பு கேட்பதைத் தவிர்ப்பது நல்லது.