மகரம் செல்லும் குருவால் இந்த ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்!

குரு பகவான் செப்டம்பர் 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த ராசியில் இவர் நவம்பர் 20 ஆம் தேதி வரை இருப்பார். 

மகரம் செல்லும் குருவால் இந்த ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்!

ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலை நன்றாக இருந்தால், அவர் வெற்றியின் உச்சத்தைத் தொடுவார். மேலும் ஒருவருக்கு நேர்மறை உணர்வை வழங்குவதில் குரு மிகப்பெரிய காரணியாக கருதப்படுகிறார்.

இப்படிப்பட்ட குரு பகவான் செப்டம்பர் 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த ராசியில் இவர் நவம்பர் 20 ஆம் தேதி வரை இருப்பார். 

இது அனைத்து கிரகங்களிலும் பெரிய மற்றும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இப்போது குரு பகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்காரரின் தொழில் மற்றும் பண அடிப்படையில் எம்மாதிரியான விளைவு இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்

மேஷம் - இந்த குரு பெயருச்சி காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல காலம் என்பதை நிரூபிக்கப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாராத்தில் நிறைய நிதி ஆதாயம் இருக்கும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நன்றாக இருக்கும். நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைகள் நிறைவேற ஆரம்பிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் புதிய வேலைக்காக காத்திருக்க வேண்டியதில்லை. வருமானத்தை அதிகரிக்க பல புதிய வழிகள் கிடைக்கும்.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

கடகம் - நீங்கள் கடக ராசியாக இருந்து, வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் விரும்பிய வேலையைப் பெறலாம். பணிபுரிபவர்களின் சம்பளதும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். மேலும் புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு இது நல்ல காலம்.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி காலத்தில், தங்கள் பணியிடத்தில் சிரமங்களை சந்திக்கலாம். இருப்பினும் இக்காலத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள் மற்றும் பொறுமையாக இருங்கள்.

கன்னி - வியாபாரத்துடன் தொடர்புடைய கன்னி ராசிக்காரர்கள் இக்காலத்தில் முதலீடு செய்வது நல்லது. வேலை செய்பவர்களுக்கு இந்த காலம் நன்றாக இருக்கும். மேலும் இக்காலத்தில் உங்கள் முதலாளி மற்றும் சக ஊழியர்கள் உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் வியாபாரிகள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் கடுமையாக உழைத்தால் மட்டும் தான், வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் பிஸியாக இருக்கும். இருப்பினும், அவர்களின் கடின உழைப்பிற்கு ஏற்ப அவர்களுக்கு பலன்கள் கிடைக்காமல் போகலாம். இக்காலத்தில் மிகவும் சிந்தனையுடன் செலவிடுவது நல்லது.

தனுசு - இந்த குரு பெயர்ச்சி காலம் தனுசு ராசிக்காரர்களின் தொழில் மற்றும் பணம் இரண்டிலும் நல்லதாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் சேமிக்கும் பணம், எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

மகரம் - குரு மகர ராசிக்கு செல்வது, இந்த ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. உங்களிடம் இருக்கும் பணத்தை சேமித்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக பணம் இருக்கும். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு வேலை செய்யுங்கள்.

மீனம் - மீன ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் நல்ல காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேறுவார்கள். பண ஆதாயம் உண்டு. மேலும் இந்த காலத்தில் செய்யும் எந்த வேலையும் குறைந்த முயற்சியுடன் சிறப்பாக முடிக்கப்படும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0