இன்று இந்த ராசிக்காரர்கள் பழைய கடனை திருப்பி செலுத்த முயற்சிக்கவும்...
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 08 திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 08 திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இன்று நீங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் வங்கியில் பணிபுரிபவராக இருந்தால், உங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். அரசு ஊழியர்களின் வருமானமும் அதிகரிக்கலாம். வியாபாரிகள் சட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. நாளின் இரண்டாம் பாதியில், உங்களுக்கு லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் உள்ள தூரம் முடிவடையும். இனிமேலாவது உங்கள் உறவில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், சிகரெட், மது போன்ற பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:20 மணி வரை
ரிஷபம் - தொழிலதிபர்கள் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், அனுபவமுள்ள சிலரிடம் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவை எடுங்கள். அவசரம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு வெற்றியடையும். மேலும் உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையின் கடுமையான தன்மை உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பொழுதுபோக்கிற்காகவும், இன்பத்திற்காகவும் அதிகமாகச் செலவழிப்பது உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்:8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை
மிதுனம் - வேலையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால், மீண்டும் உங்கள் திட்டமிடலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் விரைவில் நல்ல வெற்றியைப் பெறலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்பைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். துன்பங்களில், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்கள் முடிவுகளை ஆதரிப்பார்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் துணை மீது அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார். உங்களுக்கு இதய நோய் ஏதேனும் இருந்தால், அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்:36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2:55 மணி வரை
கடகம் - நீங்கள் மாணவராக இருந்து, உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், விரைவில் பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் படிப்பை விடாமுயற்சியுடன் தொடருங்கள். இன்றைய நாள் நிதி அடிப்படையில் உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். சமீபத்தில் ஏதேனும் நிதி சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட்டால், நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தந்தையின் உடல்நிலை சரியில்லை என்றால், இன்று அவரது உடல்நிலை மேம்படும். ஆனால் இந்த நேரத்தில் அவர் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் துணையின் தவறான அணுகுமுறை உங்கள் உணர்வுகளை புண்படுத்தும். வேலையில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்:23
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5:15 மணி வரை
சிம்மம் - அலுவலகத்தில் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பல எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் வரலாம். நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்தி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால் நல்லது. தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், உணவகங்களுடன் தொடர்புடையவர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வீட்டின் சூழலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் குறையும். உங்கள் மனக்கசப்பு அனைத்தையும் மறந்து உங்கள் உறவை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவர் இன்று தனிமையாகவும் சோகமாகவும் உணரலாம். பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவில் கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்:7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4:20 மணி வரை
கன்னி - மாணவர்கள் சமீபத்தில் ஏதேனும் போட்டித் தேர்வை எழுதியிருந்தால், நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. முன்னேற வேண்டும் என்ற உங்கள் கனவு விரைவில் நிறைவேறும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறிகளைக் கொடுக்கிறது. திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிக குறைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும். மேலும், இது உங்கள் மரியாதையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வியாபாரிகள் எந்த ஒரு பெரிய ஒப்பந்தத்தையும் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இன்று கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கம் இருக்கும். உங்களிடையே அன்பு அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று ஏதேனும் பிரச்சனை என்றால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை
துலாம் - எழுது பொருட்கள் தொடர்பான வேலை செய்வோர் இன்று நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். உணவு, பானங்கள் தொடர்பான வேலை செய்பவர்களும் நல்ல பலன்களைப் பெறலாம். அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இதற்காக நீங்கள் நிறைய பாராட்டுக்களையும் பெறுவீர்கள். பண விஷயத்தில் உங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். நீண்ட கால கடன்களில் இருந்து விடுபட விரும்பினால், சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வீட்டின் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். பரபரப்பாக இருப்பதால் இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். ஆனால் அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதன் மூலம், உறவில் அன்பும், சொந்தமும் அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்:12
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை
விருச்சிகம் - அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களின் அனைத்து வேலைகளையும் விடாமுயற்சியுடன் முடிப்பீர்கள். உங்கள் பணியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், உயர் அதிகாரிகளின் உதவியால் உங்கள் பிரச்சனையும் தீர்க்கப்படும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். அவசர அவசரமாக எந்த ஒரு முடிவும் எடுப்பதைத் தவிர்க்கவும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று உடன்பிறப்பிற்கு நல்ல திருமண வரன் தேடி வரலாம். விரைவில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தப்படும். பணத்தின் நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்கலாம். தடைப்பட்ட பணம் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் விரைவில் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு முதுகுவலியால் அவதியுறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்:11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
தனுசு - இன்று விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கலாம். இருப்பினும், உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் எண்ணெய் சம்பந்தமாக வேலை செய்பவர்களும் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். பணம் சம்பந்தமாக வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டின் பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் உறவில் கசப்பை அதிகரிக்கும் எதையும் கோபத்தில் செய்யாதீர்கள். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு காய்ச்சல், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
மகரம் - வேலை சம்பந்தமாகப் பேசும்போது,வியாபாரிகள் இன்று நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். பணப்பற்றாக்குறையால் இன்று உங்கள் வேலை பாதியில் நிற்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் புதிய பங்குகளை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இன்று அதற்கு பொருத்தமானதல்ல. உத்தியோகஸ்தர்கள் இன்று முதலாளியின் கோபத்தை சந்திக்க நேரிடும். சிறிய தவறுகளைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை இன்று மிகவும் நன்றாக இருக்கும். வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். இறைவனை வழிபடுவதால் மன அமைதி ஏற்படும். பண நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலையுடன், போதுமான ஓய்வும் எடுக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்:20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:25 மணி வரை
கும்பம் - நீங்கள் வேலை தொடர்பாக வீட்டை விட்டு விலகி இருந்தால், நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் செலவிடும் இந்த நேரம் உங்களுக்கு மறக்கமுடியாததாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் அன்பு அதிகரிக்கும். அன்புக்குரியவர்கள் உங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை உணருவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் நிதி நிலையை வலுவாக வைத்திருக்க சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வேலையைப் பற்றி பேசினால், இன்று உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமை குறையும். அதே சமயம் வியாபாரிகளின் வேலைகளும் சுமுகமாக முடியும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள். மேலும் உங்களுக்காக போதுமான நேரத்தையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை
மீனம் - மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த நேரத்தில் அலட்சியமாக இருப்பது உங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும். பணத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் கடன் வாங்கியிருந்தால், படிப்படியாக தவணை செலுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் வரும் நாட்களில் உங்கள் சுமை அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். குறிப்பாக வீட்டின் பெரியவர்களின் ஆசியையும் ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், விஷயங்கள் கையை விட்டு வெளியேறும். வியாபாரிகள் வேலை சம்பந்தமாக எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் கலவையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு கைகள் அல்லது கால்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்:7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை