இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணத்தை மேற்கொள்ளலாம்…

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணத்தை மேற்கொள்ளலாம்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் முக்கியமான பணிகளில் சிறிதும் கவனக்குறைவாக இருக்காதீர்கள். இல்லையெனில், நிறைய சிக்கலில் சிக்கலாம். இன்று உங்கள் வேலையை முதலாளி மதிப்பாய்வு செய்யலாம். இன்று, தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர் நல்ல நிதி நன்மைகளைப் பெற முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வீட்டு உறுப்பினர்களின் தேவைகளை கவனித்து முன்னுரிமை வழங்க வேண்டும். கவனக்குறைவான அணுகுமுறை அன்புக்குரியவர்களை வருத்தமடைய செய்யலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீங்கள் முதுகுவலியால் கலங்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

ரிஷபம் - இன்று உங்களுக்கு வேலை முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், முன்னேற்ற பாதையில் செல்லும் வாய்ப்பைப் பெறலாம். வணிகர்களும் தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பைப் பெறலாம். சமீபத்தில் எங்காவது நேர்முக தேர்தலை சந்தித்திருந்தால், இன்று நேர்மறையான பதில்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பண நிலைமை வலுவாக இருக்கும். இன்று எந்த பழைய கடனையும் திரும்ப செலுத்தலாம். குழந்தைகளின் கல்விக்காக சிறிது கொஞ்சம் பணம் செலவிட வேண்டியிருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் அமைதியான மற்றும் அன்பான நாளைக் கழிப்பீர்கள். இன்று ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி அன்புக்குரியவருடன் கலந்துரையாடலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை

மிதுனம் - அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு ஓரளவு மோசமடையக்கூடும். புத்திசாலித்தனமாக வேலை செய்து, பாதகமான சூழலை கையாள முடிந்தவரை முயற்சி செய்வதும் நல்லது. வணிகர்கள் நன்கு பயனடையலாம். கூட்டு வியாபாரிகளுக்கு, இன்று மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பேச்சுவார்த்தையை சரியாக வைத்திருங்கள். வாதிடுவதற்குப் பதிலாக, அமைதியாக பேசி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். பொருளாதார முன்னணியில், இன்றைய நாள் கலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு சாதாரண நாளாக இருக்கப்போகிறது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கடகம் - மாற்று வேலை பற்றி யோசிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இருக்கும் வேலையில் தொடர முயற்சிப்பது நல்லது. பணத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்காது. சிந்திக்காமல் செலவு செய்தால், வரும் நாட்களில், கடன் சுமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் காதல் அதிகரிக்கும். துணையின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, மன அழுத்தம் மற்றும் சோர்வு உங்கள் ஆரோக்கியத்தில் சரிவை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 9 மணி வரை


சிம்மம்
இன்று உங்களுக்கு ஒரு நிம்மதியான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில காலமாக இருந்துவந்த சிக்கல், இன்று முடிவுக்கு வரலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் மனரீதியாக நன்றாக உணருவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய பணம் செலவிடலாம். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், அற்ப விஷயங்களுக்காக கோபப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், வீட்டின் அமைதி கலங்கக்கூடும். கோபத்தில் தவறான சொற்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் உறவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையின் மீது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:45 மணி வரை

கன்னி 
கன்னி
இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். எனவே வரவிற்கு ஏற்ப செலவு செய்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். ஒரே நேரத்தில் பல பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். வர்த்தகர்கள் திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனனான உறவில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம், சிறந்த புரிதலுடன் நிலைமையை கையாள முடியும். இன்று நண்பரிடமிருந்து நல்ல ஆலோசனையைப் பெறலாம். உடல்நிலை பலவீனமாக இருக்கும். பல் வலி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 4:20 மணி வரை

துலாம் 
துலாம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம். இன்று நீங்கள் எதிரிகளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்யலாம். மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். இல்லையெனில் இழப்பு உங்களுக்கு தான். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பேச்சைப் புறக்கணிக்காதீர். வர்த்தகர்கள் புத்திசாலித்தனமான செயல்பட்டு, நிதி சிக்கல்களில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இப்போது குழந்தைகளுடன் மிகச் சிறந்த நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று வயிற்று பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

விருச்சிகம் - இன்று பெரிய வர்த்தகர்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கப்போகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக பயனடையலாம். உத்தியோகஸ்தர்களின் வளர்ச்சியும் மேலோங்கும். எனவே, கடுமையாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண நிலைமை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் மிகவும் வேடிக்கையான நாளாக இருக்கும். பயணம் செய்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். வாழ்க்கை துணையின் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். அவர்களிடம் இருந்து ஒரு பெரிய ஆச்சரியத்தைப் பெறலாம். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் இன்று மிகவும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு - நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சாதகமான நாள். எதிர்பார்த்தபடி நல்ல முடிவைப் பெறுவீர்கள். பெற்றோருடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும். தந்தையிடமிருந்து நிதி நன்மை சாத்தியமாகும். வாழ்க்கைத் துணை இன்று பழைய கோபத்தை மறந்து அன்போடு நடந்து கொள்வார். எனவே, நீங்களும் அவரை அன்போடு நடத்துவது உங்களுக்கு நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விவாதங்களைத் தவிர்க்கவும். கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அது உங்களுக்கு கடினமான சூழலை ஏற்படுத்தும். எண்ணெய் வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற முடியும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். குறிப்பாக உங்கள் தேர்வுகள் விரைவில் வந்தால் கடினமாக உழைக்க வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை

மகரம் - உங்கள் உடல்நலம் சிறிது நேரம் சரியில்லை என்றாலும், அதிக வேலை அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் முக்கியமானது. பணத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும். இன்று நீங்கள் பண பரிவர்த்தனையைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடன் உறவில் இனிமை இருக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் வலுவாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது நல்லது. தேவைப்படும்போது அவர்களுக்கு உதவுவதும் உங்களுக்கு வரும்நாட்களில் நன்மை பயக்கும். வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பழகுவதில் மரியாதையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம் - இன்று வேலை முன்னணியில் ஒரு நல்ல நாள். உங்கள் வேலைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். உங்களுக்கும் போதுமான நேரம் கிடைக்கும். வர்த்தகர்களின் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். சிக்கித் தவிக்கும் பணத்தைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பது உங்களுக்கு நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் நடைப்பயணத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். உங்கள் துணைக்கு ஒரு நல்ல பரிசையும் வாங்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மிகவும் நன்றாக இருக்கும், மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்  - வேலையில் உங்களது அலட்சியம் முதலாளியின் மனநிலையை கெடுத்துவிடும். திடீரென்று வழங்கப்பட்ட முக்கியமான பொறுப்புகள் திரும்பப் பெறப்படலாம். சிறிய வேலையையும் கவனமாகச் செய்வது நல்லது. வணிகர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய நன்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். தந்தையிடம் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துவது நல்லது. ஆவேசமாக பேசுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியமாக இருக்க உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை நிறைய சாப்பிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0