இன்று இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும்...
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்று வேலையில் உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கலாம். உங்களின் கடின உழைப்பு வெற்றியடைவதோடு நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். மேலும் உங்கள் மன அழுத்தமும் குறையும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 9:30 மணி வரை
ரிஷபம் - நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புகளில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் அதிகரித்து வருவதால், உயர் அதிகாரிகள் உங்கள் மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பார்கள். அத்தகைய கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், முன்னேற்றம் பற்றிய உங்கள் கனவு முழுமையடையாது. இன்றைய நாள் பண விஷயத்தில் மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும். உங்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் விரைவில் முடிவுக்கு வரலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். வேலையுடன், உங்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மிதுனம் - இன்று உங்களுக்கு சிறப்பு நாளாக இருக்கும். குறிப்பாக நீங்கள் தனிமையில் இருந்தால், இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நபரின் வருகை இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்களிடையே பரஸ்பர புரிதலும் மேம்படும். பணத்தைப் பற்றி பேசும்போது, சிந்திக்காமல் செலவு செய்யும் உங்கள் பழக்கம் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். அரசு ஊழியர்கள் இன்று தங்கள் எல்லா வேலைகளையும் விரைவாக முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், எந்த முக்கியமான வேலையும் இன்று முடிக்கப்படாது. வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உடல்நிலை சில நாட்கள் சரியில்லை என்றால், நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
கடகம் - வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இன்று நீங்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சச்சரவுகளால் இழப்பு உங்களுக்கு மட்டுமே. உங்கள் முதலாளியால் உங்களுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டால், உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு சிறிய தவறை செய்தாலும், அதன் பலனை முழுமையாக அனுபவிக்க நேரிடும். வணிகர்கள் பணத்தை கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் முரட்டுத்தனம் இருக்கும். இன்று உங்களுக்குள் ஒரு சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். வானிலை மாற்றத்தால், உங்களுக்கு பிரச்சனை அதிகரிக்கலாம். கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
சிம்மம் - அலுவலகத்தில் முக்கியமான வேலையைச் செய்யும்போது, நீங்கள்அவசரப்படுவதையோ அல்லது பீதியையோ காட்டாதீர்கள். இல்லையெனில் நீங்கள் செய்யும் எந்த வேலையும் இன்று கெட்டுப்போகலாம். இது தவிர, உயர் அதிகாரிகளின் ஆலோசனையும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த கடன் வாங்க திட்டமிட்டால், அவர்களின் திட்டத்தை தொடர சாதகமான நாள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். குறிப்பாக தந்தையுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையின் நடத்தையிலும் மென்மை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனக்கசப்பு அனைத்தையும் மறந்து, உங்கள் துணையை அன்புடன் நடத்துங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினமும் லேசான உடற்பயிற்சியை செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்:35
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3:40 மணி வரை
கன்னி - தொழிலதிபர்கள் தங்கள் பழைய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் பெறலாம். இன்று, உங்கள் தடைப்பட்ட முக்கியமான சில வேலைகளை முடிப்பதன் மூலம் பெரிய நிதி நன்மை சாத்தியமாகும். நீங்கள் உங்கள் தற்போதைய வேலையில் திருப்தியடையாமல் வேலையை மாற்ற நினைத்தால், விரைவில் ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து நல்ல சலுகையைப் பெறலாம். நீங்கள் முழு கடின உழைப்பு மற்றும் நேர்மறையுடன் முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இப்படி வருமானத்துக்கும் செலவுக்கும் இடையில் சமநிலையை வைத்துக் கொண்டால், எல்லாக் கடன்களிலிருந்தும் விடுபடலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவருடன் நீண்ட பயணத்திற்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் இரவு 9:05 மணி வரை
துலாம் - அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் சூழ்நிலை உள்ளது. நீங்கள் ஒரு ஆடை வியாபாரி என்றால், உங்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கும். அழகுசாதனப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பிரிவு சாத்தியமாகும். கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் கட்டுப்படுத்த முடியாத கோபம் உங்கள் உறவில் தூரத்தை அதிகரிக்கச் செய்யும். இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். உடல்நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை
விருச்சிகம் - அலுவலகத்தில் நீங்கள் மிகவும் பாராட்டப்படுவீர்கள். மேலும், இன்று நீங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைப் பெறலாம். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் சாத்தியமாகும். சில்லறை வணிகர்களுக்கு லாபத் தொகை கிடைக்கும். விரைவில் உங்கள் வணிகமும் வளரலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணம் மேற்கொள்ளலாம். உங்களின் இந்த பயணம் மிகவும் சிறப்பாக அமையும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்றும் அன்புக்குரியவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த பரிசுகளை வாங்கலாம். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், இன்று அலட்சியம் விலை உயர்ந்ததாக இருக்கும். அவ்வப்போது உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை
தனுசு - நீங்கள் புதிதாக கூட்டு வியாபாரத்தைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு சாதகமாக இருக்கும். வரும் நாட்களில் நீங்கள் விரும்பிய பலனைப் பெறலாம். அதே சமயம் வெளியூர் சென்று வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு அதிகம். உங்கள் வழியில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சிறு விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மோதலைத் தவிர்க்கவும். இது உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நடத்தையையும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். சிந்திக்காமல் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
மகரம் - உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். இன்று நீங்கள் உங்கள் வேலைகள் அனைத்தையும் விரைவாக முடிப்பீர்கள். வணிகர்கள் தங்கள் முக்கியமான தொடர்புகள் மூலம் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்களது அரசு வேலைகள் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்தால், இன்று உங்கள் பிரச்சனையும் நீங்கும். பணத்தின் நிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று நீங்கள் சில பெரிய செலவுகளையும் செய்யலாம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சில பரிசுகளையும் வாங்கலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோரின் உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் தந்தையின் வியாபாரத்தில் தொடர்புடையவராக இருந்தால், இன்று நீங்கள் அவருடைய ஆலோசனையால் நல்ல பலன்களைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்:39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
கும்பம் - வீட்டில் அமைதியான சூழ்நிலையை வைத்திருக்க உங்கள் இயல்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். சிறிய விஷயங்களில் மோதல்கள் அல்லது வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நடத்தையை சரியாக வைத்திருங்கள். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலகத்தில் திடீரென்று ஒரு முக்கியமான சந்திப்பிற்கு அழைப்பு வரலாம். வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். சில புதிய வியாபாரத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பெற நினைத்தால், இன்று உங்கள் பாதையில் ஒரு பெரிய தடை இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று தலைவலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
மீனம் - தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் இந்த நேரத்தில் தங்கள் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் திடீர் பணிச்சுமை அதிகரிப்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ரியல் எஸ்டேட் சம்பந்தமான வேலைகளை செய்து நல்ல லாபம் பெறலாம். இரும்பு வியாபாரிகள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்காது. பெரிய செலவு செய்யும் மனநிலையில் இருந்தால், அதைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிகரித்து வரும் சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாக, உங்கள் உடல்நலம் இன்று ஓரளவு பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை