இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்க சாதகமான நாள்...

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 10 வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்க சாதகமான நாள்...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்குத் தயாராகிறீர்கள் என்றால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன்மூலம், நீங்கள் சிறப்பான முடிவுகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலை முன்னணியில் இன்று பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் இன்று பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். இன்று, உங்கள் உயர் அதிகாரிகளும் சில முக்கியமான வேலைகளை உங்களிடம் ஒப்படைக்கலாம். எனவே, உங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கவும். வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை

ரிஷபம் - இன்று, நிலம் தொடர்பான எந்தவொரு பழைய விஷயத்திலும் நீங்கள் வெற்றி பெறலாம். இதனால் உங்களின் பெரும் கவலைகள் தீரும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், பெற்றோருடனான உறவு வலுவடையும். உங்கள் தந்தையிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், ஒரு அழகான திருப்பத்தை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். இன்று உங்களுக்காக போதுமான நேரத்தையும் பெறுவீர்கள். வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்கள் உடல்நிலை திடீரென குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 5 மணி முதல் மாலை 5:15 மணி வரை

மிதுனம் - அலுவலகத்தில் உங்களின் மெதுவான போக்கு உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். உங்கள் முதலாளி இன்று உங்களை கடுமையாக நடத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் சில நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். உங்கள் பரபரப்பான வழக்கத்தில், அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பையும் உற்சாகத்தையும் தக்க வைத்துக் கொள்ள உங்கள் தரப்பிலிருந்து சில முயற்சிகளை மேற்கொள்ளவும். உங்கள் தவறான அணுகுமுறை வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்களை விலக்கக்கூடும். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருந்தால், உணவில் கவனம் செலுத்தவும். ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

கடகம் - கூட்டு வியாபாரம் செய்பவர்கள், நிதி விஷயங்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று அவசர அவசரமாக எந்த நிதி பரிவர்த்தனை செய்வதையும் தவிர்க்கவும். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். உங்களின் முக்கியமான அலுவலக ஆவணங்களைப் பத்திரமாப வைத்திருக்கவும். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவு செய்வதைம் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். சில விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் எடையைக் கண்காணிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

சிம்மம் - இன்று, உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி, வேலையில் உங்களைத் தாழ்வாக உணர வைக்கும். அதிக சிந்தனையைத் தவிர்த்து, வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நேர்மறையாக இருந்தால் நல்லதே நடக்கும். தொழிலதிபர்கள் இன்று திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்களின் இந்தப் பயணம் மிகவும் சோர்வாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் வரலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கப்படலாம். அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, மன அழுத்தத்திலிருந்து அவர்களை விலக்கி வைக்கவும். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

கன்னி - தொழிலதிபர்கள் இன்று எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அவசரத்தில் எடுக்கும் ஒரு தவறான முடிவு உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும், இன்று பெரிய கொள்முதல் எதுவும் செய்ய வேண்டாம். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று மறக்கமுடியாத நாளாக இருக்கும். உங்களுக்கு இதய நோய் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

துலாம் - இன்று, உங்கள் வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்யலாம். இது வீட்டின் சுற்றுச்சூழலை நேர்மறையாக மாற்றிடும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மன அமைதி ஏற்படும். நிதி நிலை கண்ணோட்டத்தில், இன்று நல்ல நாளாக இருக்கும். திடீரென்று ஒரு பெரிய செலவு இருக்கலாம். ஆனால் அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது. வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் பல முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதை நீங்கள் இன்றே முடிக்க வேண்டும். போக்குவரத்து தொடர்பான பணிகளைச் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம் - உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடினமான பணியை இன்று நீங்கள் ஒப்படைக்கலாம். உங்கள் வேலையை முழு நேர்மறையுடன் செய்ய முயற்சி செய்யுங்கள். இதில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். உங்கள் வருமானமும் கூடும். சிறு வணிகர்கள் இன்று நல்ல லாபம் பெறலாம். வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவை வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று சிறப்பாக இருக்கும். உடல்நலம் மேம்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு - உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் சிறு சிறு தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும். இதே நிலை தொடர்ந்தால் உங்கள் மேலதிகாரியும் கடுமையான முடிவை எடுக்கலாம். வணிகர்கள் சராசரி லாபத்தைப் பெறலாம். குறிப்பாக உங்கள் வேலை நிதி தொடர்பானதாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். சிந்திக்காமல் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவராக இருந்தால், பெரியவர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். உங்களுக்கு கீல்வாதம் பிரச்சனை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை சற்று அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மகரம் - அலுவலகத்தில் முதலாளியின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். சில்லறை வர்த்தகர்கள் இன்று மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். நீங்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், தற்போது அதற்கு சாதகமான நேரம். இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. சொத்து தொடர்பான சில விஷயங்கள் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அமைதியாக இருக்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

கும்பம் - அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் எல்லா வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மேலும், உங்கள் கடின உழைப்பு அனைத்தும் பாராட்டப்படும். நீங்கள் விரைவில் முன்னேறலாம். வணிகர்கள் தங்கள் சரியான முடிவுகளுக்கு நல்ல முடிவுகளைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்களுக்குப் பிடித்த உணவு வகைகளை நீங்கள் ரசித்து உண்ண முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவருக்கு சிறப்புப் பரிசையும் வழங்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம் - மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறலாம். குறிப்பாக அவர்கள் உயர்கல்வியை பெற விரும்பினால் இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்களின் நிதிப் பிரச்சனைகள் தீரும். வேலையைப் பற்றி பேசினால், உங்கள் மேலதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். உங்கள் வேலையை முழு நம்பிக்கையுடன் செய்ய முடியும். உங்களின் நல்ல செயல்திறனால் உங்களது நல்லுறவை நன்றாக உருவாக்க முடியும். தொழிலதிபர்கள் இன்று அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் சில முக்கியமான வேலைகள் பாதியில் நிற்கலாம். உடல்நலக் குறைவு உங்கள் அன்றாட திட்டங்களைத் தடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0