இன்று இந்த ராசிக்காரங்க சேமிப்பில் கவனம் செலுத்துனா சிக்கல் தீரும்…

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 06 சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்று இந்த ராசிக்காரங்க சேமிப்பில் கவனம் செலுத்துனா சிக்கல் தீரும்…

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம் - தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை நீக்க, உங்கள் நடத்தையை மாற்ற வேண்டியது அவசியம். இதன்மூலம், உங்கள் உறவை பலப்படுத்த முடியும். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் சொந்தமாக சிறு வணிகத்தை தொடங்க விரும்பினால், இன்று உங்கள் திட்டங்களைத் தொடங்க சாதகமான நாள். வேலையை விட்டுவிட்டு, சொந்த தொழில் தொடங்க நினைக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேவையற்ற கோபம் உங்கள் உடல்நலனை மோசமாக்கக்கூடும். மன அமைதிக்காக, கடவுள் வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம் - வேலை சுமை அதிகரிக்கக்கூடும். இது உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்படும் தொந்தரவுகளால் எரிச்சலும் உண்டாகும். இன்று, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓய்வில் கவனம் செலுத்துவது நல்லது. மன அழுத்தத்தின் கீழ் வேலை செய்வதும் உங்கள் செயல்திறனைக் குறைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அன்புக்குரியவரின் முழு ஆதரவும் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தினால், படிப்படியாக உங்கள் நிதி சிக்கல்கள் அகற்றப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம் - தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலையை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று தவறான எண்ணங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் நல்லதை செய்யும். பண நிலைமை நன்றாக இருக்கும். வாங்கிய கடனை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஊடகங்களில் பணியாற்றினால், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் நல்ல முடிவுகளை விரைவில் பெறலாம். வணிகர்கள் இன்று அதிக பயன் பெற மாட்டார்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு கண்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கடகம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் நீங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதிகரித்த மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான சரிவுக்கு வழிவகுக்கும். கூட்டாக ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இன்று வெற்றி பெறலாம். அலுவலகத்தில் சிறிய பணிகளை கூட கவனமாக செய்யுங்கள். இன்று, உங்கள் முதலாளி உங்கள் மீது கவனம் செலுத்துவார். நீங்கள் முன்னேற விரும்பினால், வேலையில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்துடனான உறவு வலுவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். முடிந்தால், இன்று உங்கள் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். பணத்தின் நிலை திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:45 மணி வரை

சிம்மம் - இன்று யோசிக்காமல் முடிவுகளை எடுத்தால் சிக்கலில் சிக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெரியவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துங்கள். தவறான நடத்தை உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விலக்கக்கூடும். அலுவலகத்தில் ஏதேனும் சிக்கல் இருந்தால், உயர் அதிகாரிகளுடன் அதைப்பற்றி பேச வேண்டும். இதனால் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும். இன்று அழகுசாதன பொருட்கள் வியாபாரம் செய்வோருக்கு நன்மை பயக்கும். மிகவும் பயனடையலாம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது தவிர, உணவு மற்றும் குடி பழக்கத்தையும் மாற்ற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி - நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நிதி ரீதியாக நீங்கள் ஒரு நெருங்கிய நண்பருக்கு உதவலாம். அலுவலகத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். வேலையை மிகுந்த கவனத்துடன் முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள், இன்று தந்தையின் ஆலோசனையால் நல்ல லாபம் பெற உதவும். எந்தவொரு முக்கியமான வணிக முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் தந்தையின் கருத்தை கேட்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தங்களை அதிகம் கவனித்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

துலாம் - காதல் விஷயத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கப்போகிறது. நீண்டகால நட்பு காதலாக மாறும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உங்கள் நடத்தை நன்றாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உங்கள் கோபம் பெரிய சிக்கலில் ஆழ்த்தக்கூடும். அதே நேரத்தில், வணிகர்கள் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் எந்த வேலையும் திடீரென்று தடைபட்டாலும், அதற்காக ஏமாற்றமடையத் தேவையில்லை. விரைவில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறக்கூடும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 39

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:45 மணி முதல் மதியம் 2 மணி வரை

விருச்சிகம் - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், கல்வியில் இருந்துவந்த தடைகளை ஆசிரியரின் உதவியுடன், பிரச்சனைகளை இன்று சமாளிக்க முடியும். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள். விடாமுயற்சியுடன் படிக்க முடியும். அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எல்லா வேலைகளையும் வேகமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். இன்று வியாபாரிகளுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். இன்று நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், சில சிக்கல்களால் உங்கள் பணி நிறுத்தப்படலாம். பணத்தின் சூழ்நிலையில் இழப்பு சாத்தியமாகும். பணத்தின் அடிப்படையில் நீங்கள் கவனமாக இருந்தால் நல்லது. உடல்நிலை சரியில்லை என்றால், இன்று மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை

தனுசு - வேலை அல்லது தொழில் எதுவாக இருந்தாலும், இன்று நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகள், தங்கள் பழைய தொடர்புகள் மூலம் ஏதேனும் நல்ல பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திடீரென்று சில நல்ல செய்திகளை இன்று பெறலாம். திருமணமாகாதவர்கள், இன்று திருமண திட்டத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். பணம் தொடர்பான முடிவுகளை நீங்களே எடுத்தால் நல்லது. இந்த நேரத்தில், நிதி விஷயங்களில் நீங்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. பெற்றோருடனான உறவு வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 மணி முதல் மாலை 5 மணி வரை

மகரம் -உங்கள் வேலையை சரியான நேரத்தில், திட்டத்தின் படி முடிப்பதன் மூலம்  நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். மன அமைதியையும் பெறுவீர்கள். இது தவிர, நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று உங்களுக்கென சிறிது நேரம் கிடைக்கும். வேலையை மாற்ற விரும்புவோருக்கு, இது சாதகமான நேரம். உங்கள் தேடலை இன்றே தொடங்கலாம். விரைவில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். கூட்டு வியாபாரிகளுக்கு இன்று ஒரு கடினமான நாளாக இருக்கும். உங்கள் கூட்டாளருடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். விரைவில் உங்களிடையே எல்லாம் இயல்பாக இருக்கும். ஆனால் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் அது உங்கள் வணிகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம் - இன்று நீங்கள் மனரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள். அலுவலக பணிகளை கவனமாக செய்யுங்கள். சிறிதளவு தவறு கூட செய்யாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு, இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வர்த்தகர்கள் இன்று விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோருக்கு இன்று நன்மை பயக்கும். வீட்டின் சூழ்நிலை சரியாக இருக்காது. தந்தையுடன் மோசமான உறவு இருக்கலாம். இருப்பினும், நீங்கள் உங்கள் பக்கத்தை பொறுமையாக எடுத்துரைத்தார், உங்கள் தந்தை நிச்சயமாக புரிந்துகொள்வார். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம்  - இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும், நன்றாக உணருவீர்கள். அலுவலகத்தில் உங்கள் சிறந்த செயல்திறனைப் பார்க்கும்போது, முன்னேற்றம் குறித்த நல்ல முடிவை பெறலாம். இதனால் உங்கள் நற்பெயரும் அதிகரிக்கக்கூடும். இன்று சில்லறை வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும். பெரிய லாபம் கிடைக்கலாம். பணம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டின் தோற்றத்தை மாற்றுவதற்கு இன்று நீங்கள் நிறைய செலவு செய்யலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவை மகிழ்ச்சியாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறிய விஷயங்களில் ஏற்படும் வேறுபாடுகளால் திருமண வாழ்க்கையில் முரண்பாடு அதிகரிக்கும். ஆரோக்கியம் இன்று மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0