நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது?

ஒன்பது நாட்கள் தசரா விழாவை கொண்டாடிய மக்கள் பத்தாம் நாளான தசமி அன்று விஜயதசமி விழாவுடன் நிறைவு செய்வார்கள். இவ்வாறு நவராத்திரி விழா மற்றும் விஜயதசமி கொண்டாடும் காரணம் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது?

சாரதா நவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை கொண்டாடப்படும். இந்நாட்களில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஐப்பசி மாத சுக்ல பக்ஷத்தில் வரும் முதல் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு தசமி திதியில் தீமை அழிக்கப்பட்டு நன்மை வெற்றியடைந்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகவும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

ஒன்பது நாட்கள் தசரா விழாவை கொண்டாடிய மக்கள் பத்தாம் நாளான தசமி அன்று விஜயதசமி விழாவுடன் நிறைவு செய்வார்கள். இவ்வாறு நவராத்திரி விழா மற்றும் விஜயதசமி கொண்டாடும் காரணம் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

விஜயதசமி - பெயர்க்காரணம்

விஜயதசமி என்ற பெயரில் ‘விஜய' என்பது வெற்றியைக் குறிக்கும். எருமை தலை மற்றும் மனித உடல் கொண்ட மகிஷாசுரன் என்னும் அரக்கனை தேவி துர்க்கை போரில் வீழ்த்தி வெற்றி கொண்ட நாளை விஜயதசமி குறிக்கிறது. ஆனால் இந்த போர் எதற்காக ஏற்பட்டது, எத்தனை நாட்கள் இந்த போர் நீடித்தது, இறுதியில் என்ன நடந்தது? இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள நாம் தேவி துர்க்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

தேவி துர்க்கை எதற்காக தோன்றினார்?

புராணங்களின் படி மகிஷாசுரன் மூன்று உலகங்களான தேவலோகம், பூலோகம் மற்றும் பாதாள லோகம் ஆகியவற்றை ஆட்சி செய்ய விரும்பினான். தேவலோகத்தில் தேவர்களின் தலைவனான இந்திரனுடன் ஒரு கடுமையான போர் புரிந்தான் மகிஷாசுரன். மகிஷாசுரன் வலிமையானவனாக இருந்தாலும் அவனால் தேவர்களை தோற்கடிக்க இயலவில்லை. எனவே பிரபஞ்சத்தை படைக்கும் கடவுளான பிரம்ம தேவரை நோக்கி கடுமையான தவம் செய்யத் தொடங்கினான். பல காலம் தொடர்ந்து செய்த தவம் மற்றும் விரதத்தின் விளைவாக பிரம்மரின் கவனத்தை மகிஷாசுரன் ஈர்த்தான்.

பிரம்மா அளித்த வரம்

தவத்தின் பலனாக பிரம்ம தேவரிடம் ஒரு வரத்தை வேண்டினான் மகிஷாசுரன். தனக்கு சாகாவரம் வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை பிரம்ம தேவரிடம் வெளியிட்டான் மகிஷாசுரன். படைப்பின் அடிப்படை விதியை மீறக்கூடிய இந்த வரத்தை அளிக்க மறுத்த பிரம்மதேவர் மற்றொரு வரத்தை அவனுக்கு அளித்தார். அந்த வரத்தின்படி எந்த ஒரு தேவரோ, மனிதரோ, கடவுளோ, அரக்கனோ அவனைக் கொல்ல முடியாது.

சிவபெருமானிடம் உதவி கேட்ட தேவர்கள்

பிரம்ம தேவரிடமிருந்து வரம் பெற்ற மகிஷாசுரன் தன்னை யாராலும் கொல்ல முடியாது என்று இறுமாப்புடன் இருந்தான். இதனால் மூவுலகத்திலும் பலவித இம்சைகளை புரிந்து வந்த மகிஷாசுரனின் தொல்லையிலிருந்து எவ்வாறு மீள்வது என்று தேவர்கள் யோசித்து வந்தனர். பிரம்மதேவர் கொடுத்த வரத்தை மீண்டும் பெற முடியாத காரணத்தால் தேவர்களுக்கு அவரால் எந்த உதவியும் செய்ய முடியாமல் இருந்தார். அதனால் தேவர்கள் விஷ்ணு பகவானிடம் உதவிக்காக சென்றனர். ஆனால் விஷ்ணு பகவான் அவர்களை சிவபெருமானிடம் சென்று முறையிட அனுப்பி வைத்தார்.

துர்க்கையின் தோற்றம்

சிவபெருமான் அனைத்து தேவர்களையும், கடவுள்களையும் ஓரிடத்தில் கூடுமாறு கூறினார். அவர்களுடைய ஒட்டுமொத்த சக்தியின் ஒருங்கிணைப்பில் தேவி துர்க்கையை உருவாக்கினர். பெண் சக்தியை குறிக்கும் சக்தி தேவியாக அவர் அறியப்பட்டார். தேவர்கள் மற்றும் இதர கடவுள்களால் பரிசளிக்கப்ட்ட ஆயுதங்களை 10 கைகளில் தாங்கியபடி தேவி துர்க்கை வெளிப்பட்டார். சிங்கத்தின் மீது அமர்ந்திருந்த துர்க்கையின் ஒளிவடிவத்திற்கு எல்லைகள் இல்லை. இப்படியாக துர்கா தேவியின் அவதாரம் நிகழ்ந்தது.

மகிஷாசுரனை துர்கா தேவி எவ்வாறு வதம் செய்தார்?

துர்க்கை அவதாரம் செய்த பின்னர், மகிஷாசுரனிடம் தைரியம் இருந்தால் தன்னுடன் போர் செய்து வெற்றி பெறுமாறு கூறினார். தான் பெற்ற வரத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்ட மகிஷாசுரன் தன்னால் துர்க்கையை தோற்கடிக்க முடியும் என்று நம்பினான். தனக்கே வெற்றி கிட்டும் என்று பெருமை கொண்டான். பெண் சக்தியை குறைவாக மதிப்பிட்டு அவருடன் போர் செய்ய தயாரானான். தன்னுடைய இறப்பை வரவேற்க அவன் காத்திருப்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.

மகிஷாசுரன் மற்றும் துர்க்கையின் இடையிலான போர் ஒன்பது நாட்கள் நீடித்தது. 10 ஆம் நாள் மகிஷாசுரனை வதம் செய்தார் தேவி துர்க்கை. இதன் காரணமாக ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா நடத்தப்பட்டு இறுதியாக பத்தாம் நாள் விஜயதசமி விழா நடைபெறுகிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0