நவராத்திரியின் 9 நாட்களிலும் எந்த நாள் எந்த நிற ஆடையை அணிய வேண்டும்?
பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வண்ண ஆடையை அணிவர். இங்கே, நவராத்திரியின் 9 நாட்களிலும் எந்த நாள் எந்த நிற ஆடையை அணிய வேண்டும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்தியாவில் நவராத்திரி பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியானவள் சக்தி சொரூபமாக கருதப்படுகிறார்.
அத்தகைய துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை இந்த நவராத்திரியின் 9 நாட்களிலும் வழிபடுகின்றனர். அதாவது, சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளிலும் பூஜித்து வழிபடுவர்.
நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவானது, அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, விஜயதசமியுடன் நிறைவடைகிறது.
இந்த ஒன்பது நாட்களில், துர்கா தேவியை வழிபடுவோர் விரதமிருந்து, பூஜை செய்து, துர்கா தேவியின் 9 வடிவங்களையும் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ணங்கள் கடவுள் வழபாட்டுடன் தொடர்புடையவை.
எனவே, பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வண்ண ஆடையை அணிவர். இங்கே, நவராத்திரியின் 9 நாட்களிலும் எந்த நாள் எந்த நிற ஆடையை அணிய வேண்டும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
முதல் நாள் - மஞ்சள்
நவராத்திரியின் முதல் நாளான அக்டோபர் 7ஆம் தேதி மஞ்சள் நிறத்தைக் குறிக்கிறது. இந்த நாளில், நவராத்திரி கொண்டாடுவோர் கலசத்தை கொலுவில் வைப்பர். இது கலச ஸ்தாபனம் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், துர்கை தேவியின் சைலபுத்ரி தேவியை முதல் நாளில் வழிபடுவர். இதற்கிடையில், மஞ்சள் நிறமானது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் குறிக்கிறது.
இரண்டாம் நாள் - பச்சை
நவராத்திரியின் இரண்டாவது நாளாக அக்டோபர் 8 ஆம் தேதி பச்சை நிறத்தைக் குறிக்கிறது. இந்த நாளில், திருமணமாகாத துர்கா தேவியின் பிரம்மசாரிணி ரூபத்தை பூஜித்து வழிபடுகின்றனர். இதற்கிடையில், பச்சை நிறம் இயற்கையின் பல்வேறு அம்சங்களையும், அதன் புத்துணர்ச்சியையும் குறிக்கும் விதமாக அமைகிறது.
மூன்றாம் நாள் - சாம்பல்
நவராத்திரியின் மூன்றாவது நாளான அக்டோபர் 9ஆம் தேதி சாம்பல் நிறத்தைக் குறிக்கிறது. இந்த நாளில், சந்திரகாந்தா தேவி வழிபடப்படுகிறார். மேலும், பக்தர்கள் துர்கா தேவியின் கூஷ்மாண்ட தேவியையும் இந்த நாளில் பூஜிக்கின்றனர். இதற்கிடையில், சாம்பல் நிறமானது தீமையை அழிப்பதைக் குறிக்கிறது.
நான்காம் நாள் - ஆரஞ்சு
நவராத்திரியின் நான்காம் நாள் அக்டோபர் 10ஆம் தேதி ஆரஞ்சு நிறத்தைக் குறிக்கிறது. பஞ்சமி திதியான இன்றைய நாளில், பக்தர்கள் கார்த்திகேயரின் தாயான ஸ்கந்த மாதாவை வணங்குகிறார்கள். இதற்கிடையில், ஆரஞ்சு நிறம் பிரகாசம், அறிவு மற்றும் அமைதியை குறிக்கும் விதமாக அமைகிறது.
ஐந்தாம் நாள் - வெள்ளை
நவராத்திரியின் ஐந்தாம் நாள் அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளை நிறத்தையும் சஷ்டி திதியையும் குறிக்கிறது. இந்த நாளில் பக்தர்கள், காத்யாயனி தேவியை பூஜித்து வழிபடுகின்றனர். இதற்கிடையில், வெள்ளை நிறமானது அமைதி, சாந்தம் மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
ஆறாம் நாள் - சிவப்பு
நவராத்திரியின் ஆறாம் நாளான அக்டோபர் 12ஆம் தேதி சிவப்பு நிறத்தை குறிக்கிறது. இந்த நாளில், துர்கா தேவியின் காளராத்திரி ரூபத்தை வழிபடுகிறார்கள். இதற்கிடையில், சிவப்பு நிறம் உணர்ச்சியையும் கோபத்தையும் குறிக்கிறது.
ஏழாம் நாள்- நீலம்
நவராத்திரியின் ஏழாம் நாள் அக்டோபர் 13ஆம் தேதி நீல நிறத்தைக் குறிக்கிறது. அஷ்டமி திதியான இந்த நாளில், மகா கௌரியை பக்தர்களால் வழிபடுகின்றனர். இதற்கிடையில், நீல நிறம் நேர்மறை ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் குறிக்கிறது.
எட்டாம் நாள் - பிங்க்
நவராத்தியின் எட்டாம் நாள் அக்டோபர் 14ஆம் தேதி பிங்க் நிறத்தைக் குறிக்கிறது. நவமி திதியான நவராத்திரியின் எட்டாம் நாளில் பக்தர்கள் துர்கா தேவியின் சித்திதாத்திரி ரூபத்தை வழிபடுகிறார்கள். இதற்கிடையில், பிங்க் நிறம் இரக்க குணத்தையும், தூய்மையையும் வெளிப்படுத்துகிறது.
ஒன்பதாம் நாள் - ஊதா
நவராத்தியின் ஒன்பதாம் நாளான அக்டோபர் 15ஆம் தேதி ஊதா நிறத்தைக் குறிக்கிறது. தசமி திதியான நவராத்திரியின் கடைசி நாளில் துர்கா பூஜையின் கொண்டாடட்டத்தில் ஈடுபடுவர். இதற்கிடையில், ஊதா நிறமானது குறிக்கோள், லட்சியம் மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது.