வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா?

ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உங்களுடைய பழைய நினைவுகளை அதிகம் தூண்ட உதவும் எனவும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் மகிழ்ச்சியாக உங்களை உணர வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா?

மெழுகுவர்த்தி என்பது அலங்காரத்துக்காக அல்லது ஒளிக்காக மட்டும் வீடுகளில் ஏற்றப்படுகின்றன என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், மெழுகுவர்த்தி என்பது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் தியானம் மற்றும் காதலை ரெப்ரசன்ட் செய்வதாகவும் உள்ளது என்கிறார்கள். 

உங்களது வீடு மற்றும் அலுவலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது ஏராளமான சுகாதார நன்மைகளை தருவதோடு மட்டும் இல்லாமல் உளவியல் ஆரோக்கியம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நலனை அதிகரிக்கும் ஒன்றாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரி, மெழுகுவர்த்தி ஏற்றுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்னு தெரிஞ்சுக்கலாமா?

* ஒருநாள் உங்களது மனநிலை மிகவும் மோசமானதாக இருக்கும். அன்றைய நாள் உங்களது அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது உங்களது மனநிலையை மேம்படுத்தும். எப்படினுதான கேக்குறீங்க.. மெழுகுவர்த்தியின் மணம் (மெழுகுவர்த்தியில் பல வகையான வாசனைகள் உள்ளன. நமக்கு பிடித்த வாசனையை வாங்கி அதனை பயன்படுத்தலாம்) ஆண்டிடிப்ரஸண்ட்போல செயல்படுகிறது. இந்த மணம் உங்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் ஹார்மோன் அளவையும் ஒழுங்குப்படுத்துகிறது. உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. 

* கொரோனா தொடர்பான ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருக்கும் பலரும் தூக்கமின்மைகளில் சிக்கி தவித்து வருகிறோம். ஆங்சைட்டியால் பிரச்னைகளை அனுபவித்து வருகிறோம். தூக்கம் முறையாக இல்லாமல் போவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில், நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்களது படுக்கையறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உங்களைச் சுற்றி அமைதியான சூழலை உருவாக்க உதவியாக இருக்கும். உங்களது சூழலால் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்களது அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது நிம்மதியை ஏற்படுத்தும். ஒரு நல்ல தூக்கத்துக்கு உதவும்.

* நீங்கள் தினமும் தியானம் அல்லது பிரார்த்தனை செய்யக்கூடிய நபராக இருந்தால் உங்களது தியானம் செய்யும் அறை அல்லது பிரார்த்தனை அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது நல்லது. இதனால், உங்களது தியானம் மற்றும் பிரார்த்தனை மேம்படும். தியானத்தின்போது உங்களது உணர்வுகளை யுனிவர்ஸுக்கு அனுப்ப மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட சூழல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

* வாழ்க்கையில் மிகுந்த மன அழுத்தங்களை சந்திக்கும் நேரங்களில் மன அழுத்தத்தைக் குறைக்க அரோமாதெரபி உதவி செய்யும் என நம்பப்படுகிறது. அரோமாதெரபி என்றால் நறுமண மருத்துவம். அதாவது, வாசனை மூலம் உடல் மற்றும் மன நலன்களை மேம்படுத்த உதவி செய்வதே அரோமாதெரபி என்று அழைக்கப்படுகிறது. இதனால், கவலை மற்றும் மனச்சோர்வு அதிக அளவில் நீங்கும்.  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும். 

* நாம் பெரும்பாலும் லேப்டாப் மற்றும் மொபைல்களில் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறோம். இந்த கேட்ஜெட்டுகளில் இருந்து வெளியேறும் ஒளி நமது உடலை பாதிக்கிறது. இதனால், இந்த கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்காக உங்களது அறை, அலுவலக அறை அல்லது குளியலறையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். மெழுகுவர்த்தியில் இருந்து வெளியாகும் வாசனையை அனுபவிக்க சிறிது நேரங்களை செலவிடலாம். இதன்மூலம் நீங்கள் குளிக்கும்போது, வேலை நேரங்களில் இடைவேளை வரும்போது அல்லது காபி சாப்பிடும்போது நீங்கள் நல்ல நேரத்தை அனுபவித்ததற்கான தருணங்களைப் பெறலாம்.

* நம்மில் பெரும்பான்மையானவர்கள் அதிக வேலைகளில் சிக்கியுள்ளோம். இதனால், நமது அன்பிற்குரியவர்களுடன் நேரத்தை செலவழிக்க மறந்து விடுகிறோம் அல்லது கடந்த காலத்தில் நடந்த இனிமையான நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்த மறந்துவிடுகிறோம். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உங்களுடைய பழைய நினைவுகளை அதிகம் தூண்ட உதவும் எனவும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் மகிழ்ச்சியாக உங்களை உணர வைக்கும் என்றும் கூறப்படுகிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0