இன்று இந்த ராசிக்காரர்கள் பதவி உயர்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாம்!
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இன்று பிற்பகல் வரை விருச்சிக ராசிக்காரர்களுக்கும், பிற்பகலுக்கு பின்னர் தனுசு ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம். 2020 ஆம் ஆண்டின் கடைசி நாளாக இன்று, ராசி பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். கடின உழைப்புடனும், கவனத்துடன் உங்களது வேலையை செய்யுங்கள். உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றம் தொடர்பான முடிவை எடுப்பார்கள். வணிகர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். பணியில் மந்தநிலை மாறி, லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் தந்தையுடனான உறவை மேம்படுத்துவதன் மூலம் நன்றாக இருப்பீர்கள். இன்றைய தினம் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசினால், உலகளாவிய தொற்றுநோய் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரை
ரிஷபம் - அலுவலகத்தில் இன்று பதவி உயர்வு தொடர்பான நற்செய்தியை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். சொந்த தொழில் தொடங்க விரும்புவோர் சந்தித்து வந்த, நிதி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் கூடுதல் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் பற்றி பேசினால், ஒற்றைத் தலைவலி அல்லது தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மருந்து, மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மதியம் 1:15 மணி வரை
மிதுனம் - இன்றைய தினம் உங்களது பெரிய கவலையிலிருந்து நீங்கள் விடுபடலாம். செய்யும் வேலையில் இருந்துவந்த சில தடைகள் நீங்கும். சொந்த தொழில் செய்வோர், வேகமான முன்னேற்றத்தை காண்பர். நிதி ரீதியாக பயனடையலாம். வீட்டின் சூழல் மன நிம்மதியை தரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதன் அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக இன்று நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியம் இன்றைய தினம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம் - உங்களது மறைக்கப்பட்ட திறமையை வெளிக்கொணரவும், உங்கள் புதிய யோசனைகளைப் பயன்படுத்தவும் இன்றைய தினம் ஏற்றதாக இருக்கும். விடாமுயற்சியினால் வெற்றி காணப்போகும் நாள். நீங்கள் வியாபாரம் செய்தால், நிதி தொடர்பான மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்காது. வீட்டில் பெரிய தகராறு ஏற்படலாம். தவறான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை காயப்படுத்தக்கூடும். சிறிய விஷயங்கள் கூட வாழ்க்கைத் துணையுடன் குழப்பத்தை ஏற்படுத்தும். இன்று, வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை
சிம்மம் - வேலை முன்னணியில் எதிர்கொள்ளக்கூடிய சில சிக்கல்களை கண்டு அச்சப்பட தேவையில்லை. இந்த பிரச்சனைகள் அனைத்தும் தற்காலிகம் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகரிக்கலாம். வணிகர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். பெரிய லாபமும் இருக்காது, நஷ்டமும் இருக்காது. இருப்பினும், தொடர் முயற்சியை செலுத்துங்கள். குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உறவுகள் மோசமடையக்கூடும். சண்டைகளை மனதில் வைத்து கொள்வதை தவிர்க்கவும். யோசித்து செலவு செய்தால், சேமிப்பில் கவனம் செலுத்த முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
கன்னி - குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். பழைய பிரச்சனைகளால் வீட்டில் அமைதி கெடும். அத்தகைய சூழலில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சில சமசரங்களை செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில், உங்களது செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். வேலைகளை வேகமாக முடித்து, உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். கடின உழைப்பிற்கான சரியான பலனை பெறுவீர்கள். வியாபாரிகள், நிதி ரீதியாக பயனடைவர். ஆரோக்கிய விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
துலாம் - கிரக அமைப்புகளின் காரணமாக, இன்று உங்களுக்கு இயல்பை விட அதிக அளவில் கோபம் வரக்கூடும. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த கோபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பேச்சில் அதீத கவனம் செலுத்த வேண்டும். வீண் வார்த்தைகளால், அலுவலகத்தில் சிக்கல்களில் சிக்கக்கூடும். சிறு வணிகர்கள் இன்று நிதி ரீதியாக பயனடையலாம். பண வரவு திருப்தியளிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி வேண்டுமெனில், வாழ்க்கைத் துணையின் மனதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அன்புக்குரியவரை புறக்கணித்து, அவர்களின் உணர்வை புண்படுத்துவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் 11:30 மணி வரை
விருச்சிகம் - இன்று பிற்பகல் வரை உங்கள் ராசிக்க சந்திராஷ்டமம் உள்ளதால், கவனமாகவும், நிதானமாகவும் செயல்படவும். மாற்று வேலை பற்றி யோசிப்பதற்கு, இது உகந்த நேரம் கிடையாது. அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வர்த்தகர்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால், உங்களது நிதி நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகள் பற்றி நீண்ட நாள் கவலை அகலும். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாட்டை, வெளிப்படையாக பேசுவதன் மூலம் சரிசெய்து கொள்ளலம். வானிலை மாற்றம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை
தனுசு - இன்று பிற்பகல் முதல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. எனவே, கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் இருப்பீர்கள். அலுவலகத்தில் உங்களது பணி மிகவும் பாராட்டப்படும். இது தவிர, உயர் அதிகாரிகளும் உங்களிடம் சில பெரிய வேலைகளை ஒப்படைக்கலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் காண வாய்ப்புள்ளது. நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்திருப்பது நல்லது. சில காலமாக வீட்டில் இருந்துவந்த மன அழுத்தம் குறைந்து, வீட்டுச் சூழலில் முன்னேற்றத்தைக் காணலாம். உடல்நலம் பற்றிப் பேசினால், இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 10 மணி வரை
மகரம் - உங்கள் பேச்சில் கூடுதல் கட்டுப்பாட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களது கடுமையான பேச்சு, சில முக்கியமான வேலைகளை கெடுத்துவிடும். இன்று உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். சிறிய தவறுகளால், வரும் நாட்களில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்கள் வேலைகளை கவனமாக செய்ய முயற்சி செய்வது நல்லது. மறுபுறம், வியாபாரிகள் விவாதங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மாணவர்களுக்கு இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். விடாமுயற்சியுடன் படித்து, உங்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை முறையாக பெறுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:40 மணி முதல் மாலை 3 மணி வரை
கும்பம் - வேலை முன்னணியில், இன்றைய தினம் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில், முக்கிய வேலைகளில் சில தடைகளை சந்திக்கக்கூடும். வர்த்தகர்கள், தங்களது போட்டியாளர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். இன்று நண்பர்கள் உங்களுக்கு நிதி ரீதியாக உதவ முன்வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 முதல் 2 மணி வரை
மீனம் - இன்று உங்களுக்கு சற்று கடினமான நாளாக இருக்கும். சில தேவையற்ற பயத்தால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். அதனால் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மேலதிகாரிகளின் கோபத்தையும் எதிர்கொள்ளக்கூடும். இந்த நாள் வணிகர்களுக்கு சாதகமற்றது. எனவே, அதிக முயற்சிகள் மற்றும் கடுமையான போராட்டங்கள் எதிர்கொண்டாலும் கூட, எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாது. வீட்டு உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. சிறு கவனக்குறைவு கூடு உங்களை சிக்கலில் சிக்க வைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை