இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு செலவு அதிகமாக இருக்கப் போகுதாம்… உஷார்!
அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
டிசம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான பணிகள் எவ்தி இடையூறுமின்றி சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மன ரீதியாகவும் வலிமையாக காணப்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்கள் உருவாகலாம். நிதி நிலைமையைப் பற்றிப் பேசினால், பணத்தைப் பற்றி இந்த வாரம் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இதனுடன், வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தாரோடு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகலாம். வாழ்க்கை துணையின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். உணவுப்பழக்கத்தால் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகக்கூடும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். வார இறுதியில் மகிழ்ச்சியை இரடிப்பாக்கும் நற்செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
ரிஷபம் - இந்த வாரம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் தன்னமிக்கையால் அனைத்தையும் எதிர்கொள்ள முடியும். அலுவலகத்தில் இந்த வாரம் பணி சிறப்பாக நடைபெறும். வாரத்தில் ஆரம்பத்தில் வேலைகள் சற்று மெதுவாக நடைபெறும். உயர் அதிகாரிகள் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்வர். உங்களது கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் உயர் அதிகாரிகளின் இதயத்தை வெல்ல முடியும். வணிகர்கள், இந்த வாரம் பெரிய பண பரிவர்த்தனைகள் மேறகொள்ளலாம் இருப்பது நல்லது. பங்கு சந்தை தொடர்பான பணி செய்பவர்கள், நன்கு யோசித்து பின்னரே முடிவுகளை எடுக்கவும். பெற்றோரின் உடல்நிலை பாதிக்கக்கூடும். பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
மிதுனம் - தொழில் புரிவோருக்கு இந்த வாரம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படும். வாய்ப்புகள் முறையாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். வியாபாரிகள், அதிக அளவில் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகளால் வரும் நாட்களில் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். கூட்டு வணிகம் செய்பர்கள் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். பணத்தின் அடிப்படையில் இந்த நேரம் போதுமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் செலவுகளை பார்த்து செய்ய வேண்டும். உங்கள் நிதி முயற்சிகளில் சில தோல்வியடையலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசினால், வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் வார இறுதியில் வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலம் குறித்து கவலைப்படுவீர்கள். ஏற்கனவே சில நோய்களுடன் போராடுகிறீர்களானால், நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட கிழமை: சனிக்கிழமை
கடகம் - இந்த வாரம் அலுவலகத்தில் நீங்கள் பொறுமையுடனும் தைரியத்துடனும் பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொடர் முயற்சிகளுக்கு பிறகும் வேலையை செய்து முடிக்க முடியவில்லையென்றால், விரக்தி அடைய வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சிக்கான பலன் நிச்சயம் கிடைக்கும. பொறாமை கொண்ட சக ஊழியர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில் பணிச்சுமை சற்று அதிகரிக்கக்கூடும். திட்டமிட்டபடி வேலையை முடிக்க முயற்சிப்பதே நல்லது. இந்த வாரம வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளும் எதிர்காலத்தில் நிச்சயம் பலன் தரும். வாழ்க்கை துணையுடனான நெருக்கம் குறையும். இந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட கிழமை: சனிக்கிழமை
சிம்மம் - இந்த வாரம் மாணவர்களுக்கு சற்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மிகவும் சோம்பலாக உணருவீர்கள். படிப்பில் கவனம் குறைவாக இருக்கும். இந்த வாரம் படிப்பில் அலட்சியம் காட்டுவதை தவிர்க்கவும். உயர் கல்விக்கு முயற்சிப்பவர்கள், அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்காது. இந்த வாரம் திடீர் செலவுகள் வரக்கூடும். பணத்தட்டுப்பாடு உண்டாகலாம். அதனால் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். வணிகர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். உணவகங்களுடன் தொடர்புடைய தொழில் புரிவோருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பாதகமான சூழ்நிலையில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலையைப் பற்றி பேசினால், மன அழுத்தம் மற்றும் வேலை சோர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆரோக்கிய விஷயத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
கன்னி - கன்னி ராசி பெண்களுக்கு, இந்த வாரம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை வழங்கினால், சிறு விஷயத்தை கூட புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில் இழப்பு உங்களுக்கு தான். மறுபுறம், வியாபாரிகள், தங்களின் பெரிய வாடிக்கையாளர்களுடன் நல்லுறவைப் பெற முயற்சிக்கவும். இந்த நேரத்தில், வீண் விவாதம் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் இயல்பை விட சிறப்பாகவே இருக்கும். வரவிற்கு ஏற் செலவிடுவது நல்லது. வாரத்தின் நடுப்பகுதியில் பண வரவிற்கான வாய்ப்புள்ளது. யோசித்து எடுக்கப்படும் முடிவுகளால், வரும் நாட்களில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுபெறும். இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளிக்கிழமை
துலாம் - ஆரோக்கியத்தில் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்காது. தோல் பிரச்சனைகள் உருவாகலாம். கவனக்குறைவாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த வாரம் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவினங்களின் அதிகரிப்பு காரணமாக, சேமிப்பில் கவனம் செலுத்த முடியாது. விஷயங்களை சரியாக கையாளாவிட்டால், உங்கள் எதிர்கால திட்டங்கள் தடைபடக்கூடும். குடும்பத்தில் சில உறுப்பினர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், பேச்சையும் நடத்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலகத்தில், இந்த வாரம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சில கடினமான மற்றும் முக்கியமான பணிகள் ஒதுக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட கிழமை: சனிக்கிழமை
விருச்சிகம் - இந்த வாரம் அலுவலக வேலை மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில பெரிய மற்றும் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். செய்யும் வேலையை விட்டுவிட்டு, சொந்த தொழில் தொடங்க திட்டமிடலாம். இருப்பினும், இதுபோன்ற முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த சிலரை அணுகுவது நல்லது. உங்களது வேலை மரம், இரும்பு, தங்கம், வெள்ளி மின்னணுவியல், எழுதுபொருள் போன்றவற்றுடன் தொடர்புடையது என்றால், இந்த வாரம் உங்களுக்கு நிதி ரீதியாக மிகவும் பயனளிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் உங்கள் வாழ்க்கை துணையுடன் போதுமான நேரத்தை செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். உடல்நிலையைப் பொருத்தவரை, ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையான சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
தனுசு - இந்த வாரம் வணிகர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவு ஒன்றை நீங்களே எடுப்பது நல்லது. பிறரின் ஆலோசனையை தவிர்க்க வேண்டும். உங்களது பணி திறனை கண்டு உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியடைவர். உங்களது விருப்பங்கள் குறித்து சரியாக முடிவெடுப்பதன் மூலம் வெற்றி நிச்சயம். வேலை தேடுபவர்களுக்கு இது சாதகமான காலம். பண வரவு திருப்தி அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மையடைவீர்கள். வாரத்தின் இறுதி சற்று மனஅழுத்தம் நிறைந்திருக்கும். இதனால் இல்லத்தில் பிரச்சனைகள் உருவாகக்கூடும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, தொண்டை தொடர்பான சில பிரச்சனைகள் வரக்கூடும். குளிர் பானங்கள் அல்லது குளிர்ந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
மகரம் - பணி தொடர்பாக இந்த வாரம் நல்ல முடிவுகள் கிடைக்கும். நிலுவை பணிகள் நிறைவடைவதோடு, நிதி ரீதியாகவும் பயனடையலாம். ஊதிய உயர்விற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இது தவிர, முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் பெரும் லாபத்தைப் பெற முடியும். குறிப்பாக உங்களது வேலை, போக்குவரத்து, எண்ணெய், இறக்குமதி ஏற்றுமதி போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். இந்த வாரம், உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலைமை வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பெரிய நிதி பரிவர்த்தனையையும் நம்பிக்கையோடு செய்யலாம். வார இறுதியில் எதிர்பாராத திடீர் தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட கிழமை: புதன்
கும்பம் - நீங்கள் வியாபாரம் செய்தால், இந்த வாரம் சில நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்கள் தொழில் தொடர்புடைய சில புதிய மற்றும் மரியாதைக்குரிய நபர்களின் சந்திப்பு கிட்டும். இந்த சந்திப்பால் எதிர்காலத்தில் நிச்சயமாக பயனடைவீர்கள். புதிய தொழிலைத் தொடங்க தடங்கலாக இருந்து வந்த நிதி சிக்கல்கள் இந்த வாரம் தீரும். வார தொடக்கத்தில் அதிக பணிச்சுமை காரணமாக நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். மறுபுறம், சக ஊழியர்களுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வேலையில் கவனம் செலுத்துவது சற்று கடினமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். சிறு கவனக்குறைவு கூட உங்களை பெரும் சிக்கலில் ஆழ்த்தக்கூடும். எனவே உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுபெறும். இந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்களுக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
மீனம் - கனவை நிறைவேற்ற வழி தெரியாமல் நின்றவர்கள், சில அனுபவசாரிகளின் ஆலோசனையை பெறுவது நல்லது. வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் கிட்டும். மிகப்பெரிய வேலைகளை கூட செய்து முடித்துவிடுவீர்கள். இந்த வாரம் நீங்கள் உணர்ச்சி ரீதியாக பலவீனமாக உணர்ந்தால், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குறிப்பாக வாழ்க்கை துணை உறுதுணையாக இருப்பார். நண்பர்களுடம் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். பண வரவு இந்த வாரம் அவ்வளவு திருப்தி அளிக்காது. மேலும், செலவுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உடல்நலம் பற்றி பேசினால், கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளிக்கிழமை