இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்க போறாங்க!

உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்வதோடு, நல்ல பலனையும் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க, உங்கள் அணுகுமுறையை மென்மையாக்க வேண்டும்.

இந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்க போறாங்க!

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது டிசம்பர் 20 முதல் டிசம்பர் 26 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இந்த வாரம் வேலை தொடர்பான நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். திடீரென பணிச்சுமை அதிகரிப்பதால் நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வணிகர்களால் இந்த வாரம் எந்த சிறப்பு லாபத்தையும் பெற முடியாது. நீங்கள் துணி, ஒப்பனை அல்லது எழுதுபொருள் வியாபாரம் செய்தால், இந்த நேரத்தில் சிறிது லாபம் ஈட்ட முடியும். நீங்கள் வேலை செய்தால் சம்பளம் தொடர்பாக சில சிக்கல்கள் இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்வதோடு, நல்ல பலனையும் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க, உங்கள் அணுகுமுறையை மென்மையாக்க வேண்டும். இந்த நேரத்தில், பெற்றோருடனான உங்கள் உறவும் இனிமையாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்களுக்கு தோல் ஒவ்வாமை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

ரிஷபம் - அலுவலகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் முடிவடைந்து நம்பிக்கை அதிகரிக்கும் வாரமிது. மேலும், உங்களது வேலையில் கவனம் செலுத்தவும் முடியும். இந்த காலக்கட்டத்தில் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. இந்த வாரம் வணிகர்கள் பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். பொருளாதார முன்னணியில் இந்த வாரம் வழக்கத்தை விட உங்களுக்கு நன்றாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால், பல தொல்லைகளை தவிர்க்கலாம். உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை உங்களது வாழ்க்கைத் துணை சந்திக்க நேரிடலாம். அவரது இயல்புகளில் வழக்கத்தை விட சில மாற்றங்களை காணலாம். எனவே, அவரை நன்றாக கவனித்து, உணர்ச்சி ரீதியாக ஆதரியுங்கள். இந்த வார இறுதியில் நற்செய்தி ஒன்று வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம் - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வேலைக்கு முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த வாரம் நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியை கூட பெறலாம். இவை அனைத்தும் உங்களது கடின உழைப்பிற்கான பலனாகும். கடந்த வாரம் நீங்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தால் நேர்ந்தால், இந்தக் காலகட்டத்தில் அதனை சமாளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய எந்தவொரு நிறுத்தப்பட்ட வேலையும் மீண்டும் தொடங்கப்படலாம். வீட்டுச் சூழல் மேம்பட வாய்ப்புள்ளது. வீட்டின் உறுப்பினர்களுடன் ஏதேனும் மோதல் இருந்தால், இந்த காலகட்டத்தில் எல்லாம் அமைதியாகிவிடும். இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருக்க உங்களது நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தின் பார்வையில், இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

கடகம் - வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு, நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இந்த வாரம், வேலை செய்பவர்களுக்கு, அனைத்து வேலைகளையும் எளிதாக முடிக்கப்படும். உயர் அதிகாரிகள் உங்களது வேலையில் திருப்தி அடைவார்கள். வியாபாரம் செய்பவர்கள் நன்றாகப் பயனடையலாம். பொருளாதார முன்னணியில், இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த நன்மையையும் நீங்கள் பெறலாம். இதுமட்டுமல்லாமல், உங்களது கடன்களிலிருந்து விடுபட சில முக்கியமான முடிவுகளையும் எடுக்கலாம். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இந்த காலகட்டத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

சிம்மம் - வேலை முன்னணியில், இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறீர்கள். இந்த மாற்றம் நல்லதாகவும் இருக்கலாம் அல்லது மோசமானதாகவும் இருக்கலாம். அலுவலகத்தில், வீண் கோபங்களை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எந்தவொரு சட்ட விஷயத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை வலுப்பெறும். இருப்பினும், செலவுகள் அதிகரித்து காணப்படும். இந்த வாரம், வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். அதனால் அன்பு வளரும் மற்றும் பரஸ்பர புரிதல் மேம்படும். உடல்நிலை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

கன்னி  - கன்னி ராசிக்காரர்கள் இந்த நேரம் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் முதலாளி அல்லது உயர் அதிகாரியுடன் தகராறு ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவொரு முடிவும் அவசரமாக எடுக்காதிருந்தால், அது மட்டுமே போதும். பொருளாதார பிரச்சனைகள் காரணமாக, வர்த்தகர்களின் வேலை பாதிக்கப்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் லாபம் ஈட்ட மிகவும் கடினமாக போராட வேண்டியிருக்கும். வீட்டு செலவுகள் அதிகரிப்பதால், இந்த காலகட்டத்தில் உங்களது நிதி நிலை மோசமடையக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நிதித் திட்டங்களின்படி, எல்லா வேலைகளையும் செய்தால் நல்லது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்களது பெற்றோர் உங்களை ஆதரிப்பார்கள். இந்த நேரத்தில் உடல்நலம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

துலாம் - இந்த வாரம் வேலை செய்வோர் மிகவும் பரபரப்பாக காணப்படுவர். நீங்கள் இந்த ஒரு வார கால திட்டத்தை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. வேலையில்லாமல் இருப்பவர்கள், இந்த வாரம் தங்களது முயற்சிகள் மூலம் சில வாய்ப்புகள் தேடி வரும். சில காலமாக குறைந்து கொண்டே இருந்த வணிகம், இந்த வாரம், உங்களது பணி நல்ல வேகத்தை பெறக்கூடும். நீங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வேலையைச் செய்தால், பெரிய பொருளாதார நன்மைகளைப் பெறலாம். மறுபுறம், உங்கள் வணிக விஷயங்களில் இந்த காலகட்டத்தில் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். வீட்டின் பெரியவர்களை அவமதிப்பதை தவிர்த்து, அவர்களுடனான உறவைப் பேண முயற்சிக்கவும். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இந்த வாரம் நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சாப்பிடுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

விருச்சிகம் - பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. நிதிப் பிரச்சனைகள் காரணமாக, மனம் கலக்கம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இந்த காலகட்டத்தில் தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். சிறு விஷயங்களில் கூடு நீங்கள் பதற்றம் கொள்ளலாம். இதன் காரணமாக வீட்டின் சூழல் கொந்தளிப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வலுப்படுத்த முயற்சிக்கவும். வாரத்தின் நடுப்பகுதியில், தந்தையின் உதவியுடன் எந்தவொரு பெரிய வேலையும் செய்து முடிக்க முடியும். இந்த வாரத்தில், சக ஊழியர்களுடனான நல்லுறவைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் பணியால் மகிழ்ச்சி அடைவார்கள். மறுபுறம், வணிகர்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சிறிதளவு கவனக்குறைவு கூட உங்களுக்கு பிரச்சினைகளை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை உருவாகலாம். ஏதாவது கருத்து வேறுபாடுகள் உங்களுக்கு இடையே ஆழமான வேறுபாடுகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களது வருமானம் அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில் வர்த்தகர்கள் நன்றாக பயனடையலாம். ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமான காலமாக இருக்கும். உங்களுக்கு முழு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறு கலக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அலட்சியமாக இருந்தால், தவறான முடிவை அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மகரம் - மகர ராசிக்காரர்களே, இந்த வாரம் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முன்பு, மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் அணுகுமுறை சரியில்லாவிட்டாலும், நீங்கள் வார்த்தை பார்த்து பயன்படுத்தவும். இல்லையெனில், வேலை கூட போக வாய்ப்புள்ளது. இந்த வாரம் வேலையில் கவனம் செலுத்துவதில் மட்டும் முனைப்பாக இருங்கள். வணிகர்கள், இந்த வாரம் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை குலையக்கூடும். மேலும், வருமானத்தை விட செலவு அதிகமாகும். வார இறுதியில், மங்கள நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். வெளியே சென்றாலும், சமூக தூரத்தை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கும்பம் - இந்த காலகட்டத்தில் நீங்கள் மனதளவில் நன்றாக இருப்பீர்கள். மனம் அமைதியாக இருப்பதோடு, உங்களது மனநிலையும் நன்றாக இருக்கும். அவசரமாக அலுவலகத்தில் எந்த வேலையும் செய்ய வேண்டாம். நிலுவையில் உள்ள பணிகளிலும் கவனம் செலுத்துங்கள். வாரத்தின் ஆரம்பம் வர்த்தகர்களுக்கு சற்று மெதுவாக இருக்கும். வார இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. நிதி முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இந்த வாரம் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தை சொத்து தொடர்பான முக்கிய முடிவை எடுக்க முடியும். உடல்நலம் பற்றிப் பேசினால், நீங்கள் நீண்ட காலமாக உங்கள் உடல்நலப் பரிசோதனையைச் செய்யவில்லை என்றால், இந்த வாரம் அதற்கு சாதகமானது. வார இறுதியில், ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மீனம் - இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுடைய சில முக்கியமான பணிகளை சிறப்பாக முடிக்க முடியும். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில், நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில், இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். வர்த்தகர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். இந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வணிகம் புரிபவர்கள் மிகவும் பயனடைவர். புதிய வாகனம் அல்லது வேறு ஏதேனும் விலை மதிப்புமிக்க பொருளை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த வாரத்தில் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்பத்துடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். குழந்தைகள் கல்வித்துறையில் பெரும் வெற்றியைப் பெற முடியும். உடல்நலம் பற்றி பேசினால், இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0