இன்று இந்த ராசிக்காரர்கள் புதிதாக எந்த வேலையும் தொடங்க வேண்டாம்…
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 02 ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - இன்றைய தினம் வர்த்தகர்களின் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். நிதி சிக்கல்களால் அவதியுறக்கூடும். உத்தியோகஸ்தர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். மற்றவர்களின் கோபத்தை உங்கள் வாழ்க்கைத் துணை மீது காட்ட வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் உங்களில் ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். அப்போது தான் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவதை உணருவீர்கள். இன்று நீங்கள் எதைச் செய்தாலும், மிகவும் கவனமாக யோசித்த பிறகே செய்ய வேண்டும். இல்லையெனில் பின்னர் வருத்தப்படுவீர்கள். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று கலக்கப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை
ரிஷபம் - தனிப்பட்ட வாழ்க்கை இன்று நன்றாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நன்கு நேரத்தை செலவிடுவீர்கள். அன்புக்குரியவர்களுடனான அனைத்து சச்சரவுகளையும் நீக்க முயற்சி செய்யலாம். பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை இருக்கும். குடும்ப பிரச்சனைகள் அல்லது வேலை தொடர்பான சிக்கல்களை சமாளிக்க அன்புக்குரியவர்கள் உதவுவர். உத்தியோகஸ்தர்கள், தங்கள் உயர் அதிகாரிகளிடம் சில முக்கியமான ஆலோசனையைப் பெறலாம். வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் இரவு 7:45 மணி வரை
மிதுனம் - இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோர் ஒரு பெரிய வெற்றியைப் பெறலாம். வியாபாரிகளுக்கு சில பெரிய வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணம் நல்ல நிலையில் இருக்கும். இருப்பினும், பெரும் நன்மைக்காக, குறுக்கு வழியில் சென்று சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அமைதியை கொண்ட வர முயற்சிக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் துணைக்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியும். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் மன ரீதியாக வலுவாகவும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை
கடகம் - இன்று அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும். வர்த்தகர்கள் இன்று நன்றாக பயனடையலாம். இன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிட்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று நிதி அடிப்படையில் விலையுயர்ந்த நாளாக இருக்கும். விரைவில் கடன்களிலிருந்து விடுபட, முடிந்தவரை சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். இன்று மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்கள் படிப்பில் உள்ள எந்த தடையும் நீங்கும். மேலும், படிப்பில் நன்கு கவனம் செலுத்த முடியும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, அதிக கொழுப்பு உள்ள உணவு மற்றும் பானங்கள் பருகுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை
சிம்மம் - இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். அலுவலகத்தில் ஒரு சக ஊழியருடன் தவறான புரிதல் ஏற்படலாம். உங்களுக்கிடையே வீண் விவாதம் உண்டாகலாம். எனவே, நீங்கள் சமநிலையுடன் நடந்து கொள்வது நல்லது. இன்று வர்த்தகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குறிப்பாக உங்கள் பணி மின்னணு, உடைகள், பால் பொருட்கள் போன்றவற்றுடன் தொடர்புடையதென்றால், நீங்கள் எதிர்பார்த்தபடி பயனடைவீர்கள். உங்கள் நற்பெயருக்கு கலங்கும் ஏற்படுத்தும் நபர்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும். நிதி நிலைமையைப் பற்றி பேசினால், இன்று சாதாரண நாளாக இருக்கும். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை
கன்னி - இன்று உங்கள் வார்த்தைகளை மிகவும் சிந்தனையுடன் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில், சர்ச்சைகளில் மூழ்கிவிடுவீர்கள். பண நிலைமை சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். மேலும், வாங்கிய கடனால் உங்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படலாம். அலுவலகத்தில் புறம் பேசுவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். வணிகர்கள் நீண்ட பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால், இன்று அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, ஆரோக்கியத்துடன் இருக்க, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:45 மணி முதல் மதியம் 12:35 மணி வரை
துலாம் - வீட்டில் இருந்து வந்த பதற்றமான சூழலில் இன்று சில முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரின் ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை நல்ல மனநிலையில் இருப்பார். உத்தியோகஸ்தர்கள் இன்று சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உயத் அதிகாரிகள் உங்கள் செயல்திறன் குறித்து அதிருப்தி அடைவார்கள். எனவே கடினமாக உழைத்து, உங்களால் முடிந்ததை வழங்க முயற்சி செய்யுங்கள். அதே நேரத்தில், வணிகர்கள் கடந்த காலத்தில் செய்த முதலீடுகளிலிருந்து நல்ல பலன்களைப் பெற்றிடலாம். உடல்நலம் பற்றிப் பேசினால், எந்தவொரு நாள்பட்ட நோயும் இன்று அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே, அலட்சியமாக இல்லாமல் சிகிச்சையை சரியாகப் பெற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை
விருச்சிகம் - திருமண வாழ்க்கையில் நிலைமைகள் மன அழுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏதேனும் கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை ஏற்படலாம். நீங்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இல்லையெனில், உறவில் தூரம் அதிகரிக்கக்கூடும். பொருளாதார முன்னணியில் இன்று நல்ல நாள். இன்று பெரிய நிதி நன்மையைப் பெற முடியும். புதிதாக வாகனம் வாங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். வேலை தேடுபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். வர்த்தகர்களின் கவலைகள் இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று குழந்தைகள் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். அவர்களை ஏமாற்ற வேண்டாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், உற்சாகமாக இருக்க ஒவ்வொரு நாளும் சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை
தனுசு - இன்று பொருளாதார முன்னணியில் நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். திடீர் வருமானம் கிடைக்கும். வேலை பற்றி பேசுகையில், இன்று மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். திடீரென்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். எனவே, நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைப் பெற முடியும். இன்று எந்த புதிய வேலையும் தொடங்க வேண்டாம். திருமண வாழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். உடன்பிறப்புடன் இன்று தகராறு சாத்தியமாகும். ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், உங்கள் பக்கத்தை அமைதியாக எடுத்துரைக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவு பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை
மகரம் - உத்தியோகஸ்தர்களுக்கு, இன்று கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உயர் பதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு வணிகம் அதிகரிக்கும். இருப்பினும் கூட்டு வணிகம் தொடங்குவதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான பரஸ்பர புரிந்துணர்வு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும். நிதி நிலைமை பற்றி பேசினால், இன்று நல்ல நாளாக இருக்கும். வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உங்கள் கடுமையான அணுகுமுறை நெருங்கியவர்களை காயப்படுத்தும். எனவே, சொற்களைப் பார்த்து பயன்படுத்துவது நல்லது. உடல்நிலையைப் பற்றி பேசுகையில், அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
கும்பம் - இன்று வர்த்தகர்கள் நன்கு பயனடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் மன உறுதியை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தால், துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் நிலைமைகள் மன அழுத்தமாக மாற வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் ஏதேனும் வாக்குறுதிகள் அளிப்பதற்கு முன் சிந்தியுங்கள். பொருளாதார முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். பெரிய செலவு செய்வதைத் தவிர்க்கவும். மற்றவர்களின் பேச்சை கேட்டு, உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். சரிவடைந்த ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை