இன்று அதிர்ஷ்ட காற்று இந்த ராசிக்காரர்கள் பக்கம் வீசுகிறது!
2020 முடிந்து 2021 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு அனைவருக்கும் மிகவும் சிறந்த ஆண்டாக அமையப் போகிறது. அந்த வகையில், வருடத்தின் முதல் நாளாக இன்று 12 ராசிகளுக்குமான பலன்களைப் பற்றி பார்க்கலாம்.
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். 2021 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று, வெள்ளிக்கிழமைக்கான ராசி பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - இன்றைய தினம் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். அதிகரிக்கும் மன கவலை காரணமாக, அலுவலக பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். சிறு அலட்சியப்போக்கு கூட உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். கவலைகளை மறந்து, வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. வரவிற்கேற்ப செலவு செய்தால், சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். ஆரோக்கியம் இன்று அவ்வளவு நன்றாக இருக்காது. மனசோர்வு காரணமாக, உடல்நலம் பாதிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 முதல் 9 மணி வரை
ரிஷபம் - ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சனையாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், விவாதங்களை முடிந்த வரை தவிர்த்திடவும். நிலைமைகளை அமைதியாக கையாள முயற்சிக்கவும். வீட்டில் பணம் தொடர்பான தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் இன்றைய தினம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், படிப்பில் கவனம் செலுத்த முயற்சிக்கவும். இன்றைய தினம் பண பரிவர்த்தனைகள் செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில், நிதி இழப்பு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:50 மணி முதல் பிற்பகல் 2:05 மணி வரை
மிதுனம் - இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. வேலை முன்னணியில் இன்று மிகவும் முக்கியமான தினமாக இருக்கும். அலுவலகத்தில், உங்களது செயல்திறனை சோதிக்க கூடுதல் பணிகள் ஒதுக்கப்படலாம். முறையான திட்டமிட்டு வேலையை வெற்றிகரமாக முடித்தால், பெரிய நன்மையை நிச்சயம் அடைவீர்கள். பண வரவு திருப்தியளிக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் தேவைப்படும் நிதி உதவியை செய்யலாம். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில பரிசுகளை பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக உணருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஹெரான்
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் இரவு 8 மணி வரை
கடகம் - இன்று உங்கள் மனம் ஓரளவு மனச்சோர்வடையக்கூடும். அதனால் மிகவும் தனிமையாக உணருவீர்கள். தேவைப்படும் காலங்களில் அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்காமல் ஏமாற்றமடைவீர்கள். உங்கள் எந்தவொரு முடிவிற்கும் குடும்பம் உடன்படவில்லை என்றால், நீங்கள் உங்கள் கருத்தை மிகவும் புத்திசாலித்தனமாக முன்வைக்க வேண்டும். படிப்படியாக நிலைமை மேம்படும். இன்று, வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் எந்த முயற்சியும் தோல்வியடையக்கூடும். வேலையைப் பற்றி பேசினால், உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை பெற வேண்டுமெனில், ஆக்கபூர்வமான யோசனைகளை நாட வேண்டும். வர்த்தகர்கள் இன்று திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 முதல் 9 மணி வரை
சிம்மம் - ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணிச்சுமை காரணமாக உண்டாகக்கூடும் மன அழுத்தத்தால், ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். இதுபோன்ற தருணங்களில், கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் மந்த நிலையை போக்க வேண்டுமெனில், யோசித்து செயல்களை செய்ய வேண்டும். மேலும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்கவும் வேண்டும். மோசமடைந்து வரும் சில குடும்ப உறவுகளை மேம்படுத்த, உங்களால் முடிந்தவரை முயற்சிக்கவும். இதனால் நல்ல பலனைப் பெறுவீர்கள். இன்று செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை
கன்னி - இன்று பொருளாதார முன்னணியில் ஒரு சிறந்த நாளாக இருக்கும். இன்று பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அமைதியான மனதுடன் உங்கள் வேலையைச் செய்வீர்கள். கடந்த சில நாட்களாக, கடுமையான அணுகுமுறையை காட்டிய உயர் அதிகாரிகளின் நடத்தை மாறி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முன்னேற்றம் தொடர்பான விஷயங்களில் இன்று நீங்கள் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வர்த்தகர்கள் ஒரு புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் தீவிரமடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
துலாம் - இன்று, உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். நாளின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. காலையில், ஏதாவது காரணத்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், எதிர்வரும் சவால்களை நீங்களே கையாள முயற்சிப்பீர்கள். இன்று நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளின் அழுத்தம் உங்கள் மீது அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், இன்று வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், வீட்டில் ஒரு பெரிய சர்ச்சை உருவாகலாம். பணத்தைப் பற்றிப் பேசினால், திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் தந்தையின் உடல்நிலை ஓரளவு பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
விருச்சிகம் - வர்த்தகர்கள் இன்றைய தினம் நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் சிமென்ட் மற்றும் மணல் தொடர்பான வர்த்தகம் செய்தால், எதிர்பார்த்த பலனைப் பெறுவீர்கள். இன்று அலுவலக வேலைகளில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் இருங்கள். இல்லையெனில் சிக்கலில் சிக்கக்கூடும். நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், இன்று உடல்நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை
தனுசு - இன்று உங்கள ராசிக்கு சந்திராஷ்டமம். எனவே, கவனமும், நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு மனநிலை சரியில்லை என்றால், வழிபாட்டில் அதிக கவனம் செலுத்தவும். இது தவிர, நேர்மறையான விஷயங்களை சிந்தியுங்கள். இது உங்களுக்கு நிறைய அமைதியைத் தருவதோடு, நம்பிக்கையையும் அதிகரிக்கும். அலுவலகத்தில், உங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். கடினமான பணிகளை கூட மிக எளிதாக முடிக்க முடியும். இது பணியிடத்தில் உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். அதே நேரத்தில், இன்று வர்த்தகர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பாதியில் நின்றுபோன எந்தவொரு திட்டத்திலும் முன்னேற முடியும். இதன் பலனை நீங்கள் விரைவில் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், தேவையற்ற விவாதத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:20 மணி வரை
மகரம் - இன்று உங்கள் துறையில் நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். மேலும், உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவார். அதற்கான பலனையை நீங்கள் பெறுவீர்கள். மறுபுறம், சக ஊழியர்களுடனான உறவு நன்றாக இருக்கும். கோபம், ஈகோ போன்ற உணர்ச்சிகளிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது, இல்லையெனில் தேவையில்லாத குழப்பத்தில் சிக்கி உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிப்பீர்கள். வணிகர்களுக்கு நியாயமான லாபம் கிடைக்கும். பொருளாதார முன்னணியில், நாள் நன்றாக இல்லை. செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு சிறந்த பொருளாதார திட்டம் தேவை. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:45 மணி வரை
கும்பம் - இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். அலுவலகத்தில், சில பெரிய சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் ஒவ்வொரு பணியையும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பீர்கள். வர்த்தகர்கள் இன்று சில நற்செய்திகளையும் பெறலாம். பணத்தைப் பற்றிப் பேசும்போது, செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்திருப்பது நல்லது. வீட்டின் சூழ்நிலை ஆனந்தமாக இருக்கும். இன்று குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, நன்றாக உணர வைக்கும். மறுபுறம், வாழ்க்கைத் துணையுடன் சில விவாதங்கள் உருவாகலாம். உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துங்கள். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் இன்று மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை
மீனம் - பண விஷயத்தில், நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் பங்குச் சந்தை தொடர்பான வேலை செய்தால், இன்று முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். நீங்கள் கூட்டு தொழில் செய்தால், உங்கள் கூட்டாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். வேலை செய்வோருக்கும் இன்றைய தினம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில், உங்களால் முடிந்ததை சிறப்பாக வழங்க முடியும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனாலும், அன்பும் நல்லிணக்கமும் உறவில் அதிகரிக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 40
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை