இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணுமாம்!

ஒவ்வொரு நாளையும் ராசி பலன் பார்த்துவிட்டு தொடங்குபவர்களும் உள்ளனர். ராசிபலனில் நமது தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலைவாய்ப்பு, திருமணம் ஆகிய அனைத்தையுமே தெரிந்து கொள்ள முடியும். 

இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணுமாம்!

ராசிபலன் பார்ப்பதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளையும் சுலபமாக கையாளுவதற்கான நம்பிக்கை கிடைக்கும். சரி இன்று உங்களது ராசிக்கு என்னென்ன பலன்கள், இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருப்ப போகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - தொழில் புரிவோர் இன்றைய தினம் பணம் தொடர்பாக எந்தவொரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, முதலீடு செய்வதற்கு ஏதேனும் திட்டமிட்டிருந்தால் மிகுந்த கவனம் தேவை. எண்ணெய் தொடர்பான வணிகம் மேற்கொள்பவர்களுக்கு இன்றைய தினம் சிறப்பானதாக அமையும். வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிட்டும். அதுதவிர, கூடுதலாக சில பொறுப்புகளும் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 9: 45 மணி வரை

ரிஷபம் - மாணவர்களுக்கு இது சிறப்பான நாளாக அமையப் போகிறது. படிப்பை தொடருவதில் இருந்து வந்த தடை அகலுவதற்கான நேரம் வந்துவிட்டது. அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். வணிகர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, உணவு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் மேற்கொள்பவர்கள் விவாதத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் பங்குதாரர் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் பொறுத்தவரை, சுவாச நோய் இருப்பவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 10:20 மணி வரை

மிதுனம் - வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் இருந்து இன்று நல்ல செய்தி வரும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றறை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் புதிதாக ஏதேனும் தொடங்க திட்டமிட்டிருந்தால் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உருவாகக்கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பெரிய பிரச்சனை உருவாகாமல் தடுத்திடலாம். உடல்நலன் பற்றி எவ்வித கவலையும் தேவையில்லை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் 9:25 மணி வரை

கடகம்  - இன்றைய தொடக்கமே உங்களை தேடி நல்ல செய்தி வரப்போகிறது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அன்புக்குரியவர்களுடன் நிம்மதியாக நேரம் செலவிடுவீர்கள். வேலை பார்ப்பவர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரகளின் முழு ஆதரவையும் பெறுவார்கள். சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான பணி புரிபவர்கள் மிகவும் எச்சரிக்கையும் இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவு கூட பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும். வீட்டு வசதிகளுக்காக சிறிது பணம் செலவாகலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிம்மம் - பெரியவர்களின் ஆலோசனையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். தந்தையுடன் சிறிது மனகசப்பு உருவாகலாம். பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. பெரிய செலவு செய்ய ஏதேனும் திட்டமிட்டிருந்தால் அதனை தவிர்த்திடுவது நல்லது. அலுவலகத்தில் நிலுவையிலுள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சியுங்கள். இல்லையெனில், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வர்த்தகர்களுக்கு இன்று சிறப்பான நாள். கல்லீரல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் இன்றைய தினம் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கன்னி - இன்றைய தினம் ஆணவத்தையும் கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கக்கூடும். வேலை செய்பவர்களுக்கு இன்றைய தினம் சற்று சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். அதனால் கூட பணி சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. செய்யும் வேலையில் அதிக கவனத்துடன் செயல்பட முயற்சியுங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் பற்றி பேசினால், பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை

துலாம்  - உடல்நலனில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிறு கவனக்குறைவு கூட பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இதயநோய் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். வரவிற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். இன்றைய தினத்தில் பணவர்த்தனைகளை தவிர்த்திடுவது நல்லது. அலுவலகத்தில், பணி சுமை காரணமாக கவலை அதிகரிக்கும். வியாபாரிகள், முதலீடு தொடர்பான விஷயங்களில் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால், எதிர்காலத்தில் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம் - இன்று அலுவலகத்தில், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக சக ஊழியர்களுடன் பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். கூட்டு வியாபாரம் மேற்கொள்பவர்கள் இன்றைய தினம் பயனடைவர். வணிகர்கள் வளர்ச்சி காண்பர். பொருளாதார நிலை மேம்படும். வீண் செலவுகள் வந்து சேரும். பெற்றோரின் ஆசீர்வாதம் பெறுவீர்கள். வாழ்க்கை துணையால் இன்று மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் உற்சாகம் காணப்படும். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 7: 15 மணி முதல் மதியம் 2: 05 மணி வரை

தனுசு - இன்றைய தினம் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரியின் பாராட்டை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சிறு வேலையை கூட மிக கவனமாக செய்ய முயற்சியுங்கள். வர்த்தகர்கள் இன்று மிகவும் பயனடையலாம். பொருளாதார பிரச்சனையில் ஓரளவு தளர்வு இருக்கும். வீட்டு செலவுகள் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை துணையுடன் ஏதேனும் சிக்கல் உருவாகலாம். நீங்கள் ஆவேசமாக பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோருடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான எந்தவொரு முக்கியமான ஆலோசனையையும் இன்று தந்தையிடமிருந்து பெறலாம். எதிர்காலத்தில் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்நிலையைப் பொருத்தவரை, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 4: 20 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

மகரம் - வர்த்தகர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய காலமிது. விரைவில் உங்களுக்கான லாபம் வந்துசேரும். உங்கள் பணி எழுதுபொருள், வன்பொருள், மின்னணுவியல் போன்றவற்றுடன் தொடர்புடையது என்றால், இன்று நன்கு பயனடையலாம். அலுவலகத்தில் பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் உருவாகக்கூடும். வீட்டில் பணம் பற்றிய விவாதம் உருவாகலாம். புத்திசாலித்தனமாக விஷயத்தை கையாளவில்லை என்றால், வீட்டில் பிரச்சனைகள் மேலோங்கும். ஆரோக்கிய குறைவால் அன்றாட திட்டங்கள் சீர்குலையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்  - எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். ஆனால், பண வர்த்தனைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், இன்றைய தினம் முன்னேற்றம் காணலாம். இன்று பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகலாம். பெற்றோரின் பேச்சை புறக்கணித்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைக்க, வாழ்க்கை துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். உடல்நலம் பற்றி பேசினால், மனகலக்கம் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

மீனம் - இன்றைய பணி சுமையால் உண்டாகும் சோர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சனைகள் இன்று தீர்க்கப்படலாம். வாழ்க்கை துணை இன்று உங்களை அன்போடு நடத்துவார்கள். பொருளாதார முன்னேற்றம் காணப்படும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க வழி பிறக்கும். இன்று அலுவலகத்தில் உள்ள ஒருவருடன் தகராறு ஏற்படலாம். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் கவனம் செலுத்த முயற்சிப்பது நல்லது. வழக்குகள் சாதகமாக முடிய வாய்ப்புள்ளது. இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் வருத்தப்படக்கூடிய பெரிய பிரச்சனை ஒன்றை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட மதிப்பெண்: 38

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0