வார ராசிபலன் (24 - 30.10.2021) -பேச்சில் கவனம் செலுத்தாவிட்டால் பிரச்சனை அதிகரிக்கும்...

இந்த வாரம், அதாவது அக்டோபர் 24, 2021 முதல் அக்டோபர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

வார ராசிபலன் (24 - 30.10.2021) -பேச்சில் கவனம் செலுத்தாவிட்டால் பிரச்சனை அதிகரிக்கும்...

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். 

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது அக்டோபர் 24, 2021 முதல் அக்டோபர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

மேஷம் - வேலை விஷயத்தில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குறிப்பாக வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். இக்காலத்தில் லாபம் ஈட்ட உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உங்களுக்குத் திறக்கப்படலாம். குறிப்பாக நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், உங்கள் இந்த கனவு விரைவில் நனவாகும். நிதி ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு விலையுயர்ந்ததாக இருக்கும். இந்த பண்டிகை காலத்தில் செலவுகளின் பட்டியல் அதிகரிக்கலாம். இருப்பினும், சிந்திக்காமல் செலவு செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் உங்கள் கவலைகள் நீங்கும். அன்புக்குரியவரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தால், இந்தக் காலகட்டத்தில் உங்கள் பிரச்சனை சற்று அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

ரிஷபம் - குடும்ப வாழ்க்கைப் பற்றி பேசினால், இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டின் பெரியவர்களுடனான உறவு மோசமடையக்கூடும். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் நீங்கள் வருந்த வேண்டிய எந்த வேலையையும் அதிகப்படியான ஆர்வத்துடன் செய்யாதீர்கள். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், இலக்கு சார்ந்த வேலைகளைச் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் எல்லா வேலைகளையும் எந்த தடையும் இல்லாமல் முடிக்க முடியும். நீங்கள் நீண்ட காலமாக வேலை தேடுகிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலக்ட்ரானிக் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், இனிப்புகள், பழங்கள் போன்றவற்றை வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தில் கலவையான நிலை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மிதுனம் - இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருங்கள். இல்லையெனில், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேணுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். சச்சரவுகள் அல்லது விவாதங்கள் வியாபாரத்தில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் சற்று பரபரப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் சிறந்ததை உங்களால் வழங்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கலாம். வேலையுடன், நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணை மீதும் கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, உங்கள் குழந்தைகள் தொடர்பான கவலையும் உங்களை வேட்டையாடலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, வானிலை மாற்றங்களால் உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

கடகம் - கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறலாம். குறிப்பாக தனிப்பட்ட வாழ்க்கையில், இந்த காலகட்டத்தில் ஒரு அழகான திருப்பம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடல் இந்த காலகட்டத்தில் முடிவடையும். விரைவில் உங்கள் திருமணம் கைக்கூடுத். திருமணமானவர்களுக்கு இந்த நேரம் மிகவும் இனிமையானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவு வலுவாக இருக்கும். நிதி விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் உத்தியோகஸ்தர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முன்னேற்றம் பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், மது மற்றும் சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: புதன்

சிம்மம் - உங்கள் வீட்டில் வயதான உறுப்பினர்கள் யாராவது இருந்தால், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல்நலம் கடுமையாகக் குறையலாம். உங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் செலவிடலாம். நீங்கள் பெரிய தொகையை மருத்துவமனைக்கு செலுத்த வேண்டியிருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் கூட உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். அன்புக்குரியவரின் அன்பும் ஆதரவும் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசினால், இந்த நேரத்தில் உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பைப் பெறலாம். உங்களால் சிறந்ததை வழங்க முடிந்தால், விரைவில் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். வங்கித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வேலை தொடர்பான ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். யோசிக்காமல் எந்த ஆவணத்திலும் அவசரமாக கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் இருதய நோயாளிகளுக்கு நல்லதாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 27

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி - விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களை தரும். உங்கள் தடைப்பட்ட வேலைகள் விரைவில் முடிவடையும். மேலும் உங்கள் கடின உழைப்புக்கு நீங்கள் நிறைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மரச்சாமான்கள் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல நிதி ஆதாயங்களை அடைய முடியும். சந்தையில் உங்கள் நிலையும் வலுவாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், அதன் விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி ரீதியாக, இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இடையே சில முக்கியமான விவாதம் நடைபெறலாம். இது தவிர, உங்கள் வீட்டின் அலங்காரத்தில் மாற்றங்கள் அல்லது பழுதுபார்ப்புகளுக்காகவும் நிறைய பணத்தை செலவிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். நீங்கள் எந்தவிதமான பொய்யை கூறுவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய தவறும் உங்கள் உறவில் ஆழமான பிளவை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இதயம் தொடர்பான நோய்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

துலாம் - இந்த வாரம் உங்களுக்கு வேலையில் மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இதனுடன், உங்கள் முதலாளி மற்றும் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலும் பெறப்படும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோரின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். உங்கள் கடின உழைப்பிலிருந்து சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்கள் வேலையில் சாதகமான மாற்றம் ஏற்படலாம். நீங்கள் பெரிய இழப்புகளை ஈடுசெய்ய உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் சிறு வியாபாரிகளுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் லாபம் சம்பாதிக்க பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர்க்கவும். உங்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள் உங்கள் குழந்தைகளிடமும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை விலையுயர்ந்ததாக இருக்கும். உங்கள் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையே ஒரு சமநிலையை வைத்திருங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

விருச்சிகம் - அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் உங்கள் படிப்பை முடித்துவிட்டு, வேலை வாய்ப்புக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தால், நேர்மறையாக இருப்பதன் மூலம் நீங்கள் முன்னேற அறிவுறுத்தப்படுகிறீர்கள். விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்காது. இந்த வாரம் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். உங்களின் முக்கியமான வேலைகளிலும் தடைகள் ஏற்படலாம். மனதளவில் அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் நீங்கி வீட்டின் சூழ்நிலை மேம்படும். பெரியோர்களின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான காதல் மேலும் ஆழமடையும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தில் கவனக்குறைவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

தனுசு - வியாபாரிகளுக்கு வாரத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நீங்கள் ஆடை வியாபாரம் செய்தால், இந்த நேரத்தில் இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம். இரும்பு வியாபாரிகளும் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் முன்னேறலாம். உயர்பதவி அடைவதால் வருமானம் உயரவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களின் நேர்மறை மற்றும் படைப்பாற்றலால் அனைவரும் ஈர்க்கப்படலாம். உங்கள் நிதி நிலையில் ஒரு பெரிய முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நல்ல புரிதலுடன் அதிக பணம் சம்பாதிக்க முடியும். உங்களது கடனில் இருந்து விரைவில் விடுபட விரும்பினால், உங்கள் நிதி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஏதேனும் முக்கியமான முடிவை எடுத்தால், அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நேரம் மடிக்கணினி அல்லது கணினியைப் பயன்படுத்தினால், உங்கள் கண்களை நன்றாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மகரம் - உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பெரிய மரியாதையைப் பெறலாம். உங்களால் சிறந்ததை வழங்க முடியும். உங்கள் சிறந்த செயல்திறன் மற்ற சக ஊழியர்களை விட உங்களை முன்னிலைப்படுத்தும். அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் மிகவும் சவாலாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் மீது பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். சில்லறை வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். உணவகம் தொடர்பான வேலை செய்பவர்கள் நன்கு பயனடையலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமாகவே இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களின் எந்த ஒரு வேலையும் திடீரென்று பாதியில் நிற்கும். இருப்பினும், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.​​உங்கள் வீட்டில் ஒரு மங்கல திட்டத்தை ஏற்பாடு செய்யலாம். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்களுக்கு புதிய வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு எலும்பு தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

கும்பம் - வேலையில், இந்த வாரம் உங்களுக்கு சில சவால்கள் இருக்கலாம். வியாபாரிகள் சட்டப்பூர்வமான விவகாரத்தில் ஈடுபடலாம். நீங்கள் நிறைய பணத்தை செலவழிக்கலாம். உங்கள் தவறுகளில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் விவாதத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் உயர் அதிகாரிகளுடன் உங்கள் நடத்தையை நன்றாக வைத்திருங்கள். வேலையுடன், உங்கள் பேச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். நிதி விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூர பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், சிறுநீர் தொடர்பான சில பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நாள்: புதன்

மீனம் - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும், நீங்கள் நேர்மறையாக உணருவீர்கள். உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு கலக்கமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்கும். தொழிலதிபர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு நல்ல லாபம் பெறலாம். நீங்கள் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களுடன் பழகும் போது உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒரு சிறிய தவறும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து நீங்கள் ஒரு சிறப்பு ஆச்சரியத்தைப் பெறலாம். உங்களுக்கிடையிலான உறவு வலுப்பெறும். மேலும் உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0