இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவை விட செலவு அதிகமாக இருக்குமாம்…
இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 05 புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் - பணத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்காது. வருமானத்தை விட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். இதன் காரணமாக நீங்கள் நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடும். வரவிற்கு ஏற்ப செலவு செய்து சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் உறவு இணக்கமாக இருக்கும். அவரின் ஆதரவால் மன உறுதி அதிகரிக்கும். வேலை முன்னணியில், இன்று ஒரு இனிமையான முடிவைப் பெறலாம். உங்கள் கடின உழைப்பு வெற்றிகரமாக முடியும். இன்று, ஒவ்வொரு அடியையும் மிகவும் சிந்தனையுடன் எடுக்க வேண்டும். இல்லையெனில் சிக்கலில் சிக்கக்கூடும். குறிப்பாக எந்த சட்டவிரோத வேலையும் செய்ய வேண்டாம். இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6:20 மணி வரை
ரிஷபம் - இன்று, வாழ்க்கைத் துணையின் மனநிலை சரியாக இருக்காது. அவர்களின் இயல்பில் எரிச்சல் காணப்படும். உங்களிடையே சிறு தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொறுமையாக இருக்க வேண்டும். சண்டையிலிருந்து விலகி இருப்பது நல்லது. பணிச்சுமை குறைவாக இருப்பதால் உங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். இந்த நேரத்தில், வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். வணிகர்களுக்கு இன்று நல்ல நாள் அல்ல. புதிய வேலைகள் தொடங்குவதைத் தவிர்க்கவும். நிதி நிலைமை பற்றி பேசினால், இன்று கலங்க வாய்ப்புள்ளது. மாலையில் திடீரென்று ஒரு பழைய நண்பரை சந்திக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3:15 மணி வரை
மிதுனம் - இன்று நீங்கள் மன அமைதியை உணர்வீர்கள். குடும்ப பிரச்சனை முடிவுக்கு வருவதன் மூலம் வீட்டுச் சூழல் மேம்படும். பெற்றோருடனன் இன்று விவாதம் இருக்கலாம். பெரியவர்களின் அறிவுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலையைப் பற்றிப் பேசும்போது, உத்தியோகஸ்தர்கள் முன்னேறவும், தங்கள் திறனை நிரூபிக்கவும் சிறந்த வாய்ப்பைப் பெற்றிட முடியும். இந்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வணிகர்களின் நாள் இன்று சாதாரணமாக இருக்கும். இன்று பொருளாதார முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம் - வணிர்கள் இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் முடிக்கப்படாத வேலையை முடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகள் இன்று அதிக அழுத்தத்தைக் கொடுக்கலாம். பணத்தைப் பற்றிப் பேசினால், தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். நிதி நிலைமையை வலுப்படுத்த, உங்கள் செலவுகளின் பதிவை சரியாக வைத்திருங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் வித்தியாசமான முகத்தைப் பார்ப்பீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அதிக அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:40 மணி முதல் 10:05 மணி வரை
சிம்மம் - பொருளாதார நிலை பாதிக்கப்படக்கூடும். உங்கள் நிதி முயற்சியில் ஏற்படும் தோல்வி உங்களை ஏமாற்றக்கூடும். இதனால் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் உங்களைத் தாக்கும். வரவிருக்கும் எதிர்காலத்தை நினைத்து இன்றைய தினத்தை அழிக்க வேண்டாம். ஒரு அழகான எதிர்காலம் குறித்த உங்கள் கனவை நிறைவேற்றுவதற்காக, பொறுமையாகவும், கடினமாகவும் உழைக்கவும். இன்று வேலை முன்னணியில் சாதாரணமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டையும் ஆதரவையும் பெற விரும்பினால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் என்று வரும்போது, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். அப்போது தான் உங்கள் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12:45 மணி வரை
கன்னி - இன்று வர்த்தகர்களுக்கு மிகவும் பயனளிக்கும். சில பெரிய பொருளாதார லாபங்களைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் இருக்கும். உங்களது நேர்மறை எண்ணத்தால் எல்லோரும் ஈர்க்கப்படுவார்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய எந்தவொரு பழைய பிரச்சனையையும் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். அவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தின் நிலை திருப்திகரமாக இருக்கும். இன்று நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை
துலாம் - திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் பரஸ்பர இணைப்பும் அதிகரிக்கும். அவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நண்பருடனான மோசமான உறவு மேம்படும். பணம் தொடர்பான எந்த வேலையும் இடையூறு இல்லாமல் முடிக்கப்பட்டு, உங்கள்து நிதிப் பிரச்சனையும் தீர்க்கப்படும். அலுவலகத்தில் நீங்கள் செய்த வேலையில் நீங்கயே மிகவும் திருப்தி அடைவீர்கள். நீங்கள் அதே வேகத்தையும், கடின உழைப்பையும் தொடர்ந்து பணியாற்றினால், விரைவில் முன்னேறலாம். வணிகர்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்திருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6 மணி வரை
விருச்சிகம் - இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று, எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று மிகவும் அதிர்ஷ்டசாலி. பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இன்று பணத்தை சிந்தனையுடன் முதலீடு செய்யுங்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் நல்லிணக்கம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைக்காக பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதே நேரத்தில், வர்த்தகர்கள் நன்றாக பயனடையலாம். இன்று ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை
தனுசு - பொருளாதார நிலைமை மேம்படும், இன்று நீங்கள் ஆறுதலளிக்கும் விஷயங்களுக்கு கொஞ்சம் பணம் செலவிடலாம். உத்தியோகஸ்தர்களின், சில முடிக்கப்படாத வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், உங்கள் முதலாளி கடுமையான அணுகுமுறையைப் பின்பற்றலாம். வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். ஒரு சிறு வித்தியாசமும் சேதத்தை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். அன்பும் நம்பிக்கையும் உங்களுக்கு இடையே வளரும். ஆரோக்கிய விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் மதியம் 2 மணி வரை
மகரம் - இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த ஒரு நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் உங்கள் தவறான முடிவுகள் உங்கள் முழு குடும்பத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணை இன்று மிகவும் காதல் நிறைந்திருப்பார்கள். பொருளாதார முன்னணியில், இன்று நன்றாக இருக்கும். இன்று குறைந்த முயற்சியால் அதிக பணம் சம்பாதிக்கலாம். அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், இன்று உங்கள் பணி சரியான நேரத்தில் முடிக்கப்படும். வர்த்தகர்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம். மாலையில் வெளியே செல்ல வாய்ப்பைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7:00 மணி வரை
கும்பம் - இன்று உங்கள் ஆரோக்கியமே உங்களுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல் உங்களுக்கு போதுமான ஓய்வு தேவை. அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் திருப்தி அடைவார்கள். நீங்கள் ஒரு அரசு ஊழியர் என்றால், விரும்பும் இடமாற்றத்தைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று எதாவது சுப நிகழ்விலும் பங்கேற்கலாம். காதல் வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். உங்கள் துணைக்கு சில அழகான ஆச்சரியங்களை அளிக்க நல்ல நாள். பணத்தைப் பொறுத்தவரை, இன்று விலை உயர்ந்த நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை