இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது!

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது!

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 13 புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

மேஷம் - வேலை முன்னணியில், இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று சற்று சோம்பலாக உணருவீர்கள். வணிகர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். இறக்குமதி-ஏற்றுமதி தொடர்பான வேலை செய்வோர் இன்று பெரிய இழப்பை சந்திக்க நேரிடலாம். பொறுமையை கைபிடித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். வாழ்க்கைத் துணையின் கடுமையான அணுகுமுறையால் இன்று சில விவாதங்கள் ஏற்படலாம். பணநிலைமை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று வயிற்று வலி ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 முதல் 10:20 மணி வரை

ரிஷபம் - இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால், நிதானமாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். வியாபாரிகள் பெரிய நிதி இழப்பு ஏதேனும் சந்தித்திருந்தால் அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இழப்பை சரிசெய்திடும் வகையில் சிறப்பான வாய்ப்பு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் முன்னேற்றம் தொடர்பான செய்திகளைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை சிறப்பாக செலவிடுவீர்கள். பழைய நினைவுகளா மனம் மகிழ்வீர். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மிதுனம் - இன்றைய தினம் பதற்றம் நிறைந்த சூழலாக இருக்கும். அத்தகைய சூழலில் கவலைப்படுவதற்கு பதிலாக, புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வது நல்லது. நன்கு யோசித்து முடிவுகளை எடுங்கள். உத்தியோகஸ்தர்கள், வேலையில் முழு கவனம் செலுத்தவும். வணிகர்கள் இன்று தங்களது வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். பணத்தின் அடிப்படையில் இன்று கவலையான முடிவுகளை பெறலாம். பண வரவு திருப்தியளிக்கும். மாறிவரும் வானிலை காரணமாக, ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

கடகம் - இன்று வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்களது அனைத்து வேலைகளையும் கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகள் ஈர்க்கப்படுவர். வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மையைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சரியாக நடந்துக் கொள்ளுங்கள். பிறர் மனம் புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம் - இன்று நீங்கள் ஒருவரிடமிருந்து விலைமதிப்பற்ற பரிசு ஒன்றைப் பெறலாம். அதனால் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்கள், அலுவலக வேலையை செய்யும் போது, அவசரப்பட வேண்டாம். இல்லையெனில், உயர் அதிகாரிகளின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்கள் இன்று திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும். வருமானத்தை மனதில் கொண்டு செலவிடுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று உங்களுக்கு சோர்வு, தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி - இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும் போது, கோபப்பட வேண்டாம். வணிகத்தை மேம்படுத்த நினைக்கும் வியாபாரிகளிடன் திட்டத்தில் பெரிய தடையை சந்திக்கலாம். இன்று சில காரணங்களால், தந்தையின் கோபத்திற்கு ஆளாகலாம். அந்த கோபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பது நல்லது. இன்று பண நிலைமை நன்றாக இருக்கும். பெரிய செலவுகளை செய்ய இன்று உகந்த நாள் கிடையாது. உடல்நலம் பற்றி பேசினால், வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் 10:10 மணி வரை

துலாம்  - பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வேலையைப் பற்றி பேசினால், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறையான விஷயங்களை நினைத்து உங்களது பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். இது உங்கள் மன அமைதியையும் சீர்குலைக்கும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். இன்று குழந்தைகளுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட முடியும். அவர்களின் படிப்பு தொடர்பான சில முக்கியமான முடிவுகளையும் எடுக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். உடல்நலம் பற்றிப் பேசினால், இன்று நீங்கள் சளி, காய்ச்சல் போன்றவற்றால் கலங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

விருச்சிகம் - இன்று வணிகர்கள் தங்களது பொருளாதார முடிவுகளை மிக கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். கூட்டு வியாபாரம் செய்தால், உங்கள் கூட்டாளருடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சிக்கவும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். ஆனால் உங்களது அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். பண வரவு திருப்தியளிக்கும். ஆறுதல் அளிக்கும் விஷயங்களுக்கு கொஞ்சம் பணம் செலவிடலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோரிடமிருந்து ஆதரவும் ஆசீர்வாதமும் கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று கால்கள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

தனுசு  - தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகரித்து வரும் பிரச்சனைகளை சரிசெய்ய நீங்கள். புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். தெரியாமல் ஒருவரது மனதை காயப்படுத்தினாலும், தவறை உணர்ந்து மன்னிர் கேட்க முயற்சிக்கவும். இது வீட்டில் அமைதியைக் காக்கும். வாழ்க்கைத் துணையின் பாதித்ததால் ஏற்பட கவலை நீங்கப் போகிறது. இன்று செலவுகள் அதிகரிக்கப்போகிறது. உத்தியோகஸ்தர்கள் அல்லது வியாபாரிகள், இன்று தங்களது வேலையை கடின உழைப்பின் மூலமும், அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் இன்று நல்ல நிதி நன்மையை பெற்றிடலாம். இன்று ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம் - இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். அது உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். இன்று கோபத்தின் காரணமாக நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். வணிகர்கள் இன்று நல்ல வெற்றியைப் பெற முடியும். குறிப்பாக துணி வியாபாரிகள், தாகள் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், இன்று மிகச்சிறிய வேலையைக் கூட கவனித்து செய்யுங்கள். உங்கள் சிறு கவனக்குறைவும் உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மறக்கமுடியாத நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

கும்பம் - நீங்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவராக இருந்தால், இன்று உங்கள் படிப்பில் ஒரு பெரிய தடை இருக்கலாம். இருப்பினும், இந்த சிக்கல் தற்காலிகமானது என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆரிசியர்களின் உதவியுடன் பிரச்சனை முடிவுக்கு வரும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று அலுவலகத்தில் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாவிட்டால், உயர் அதிகாரிகள் மிகவும் கடுமையான அணுகுமுறையை பின்பற்றலாம். வணிகர்கள் இன்று சில பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மோதல் போக்கை விடுத்து, அன்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7 மணி வரை

மீனம் - வணிகர்கள் இன்று நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்பின் நல்ல முடிவுகளையும் பெறலாம். மேலும், ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் இன்று பெறலாம். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி கடினமாக உழைக்கவும். வரும் நாட்களில் நீங்கள் பெரும் முன்னேற்றத்தை காண முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கோபமாக போக்கை தவிர்த்தால் தான், அதிருப்தியை சரிசெய்திட முடியும். இன்றைய தினம் கடன் வாங்குவதையும், கொடுப்பதைகவும் தவிர்த்தே ஆக வேண்டும். இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0