புதன் கன்னி ராசிக்கு செல்வதால் இந்த 5 ராசிக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு!
ஒருவரது ராசியில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்கள்.
புதன் ஆகஸ்ட் 26 நள்ளிரவு காலை 11:28 சிம்ம ராசியில் இருந்து, கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் புதன் செப்டம்பர் 22 காலை 08:41 மணி வரை இருப்பார்.
புதன் தனது சொந்த ராசிக்கு இடம் பெயர்வதால், நல்ல பலன்களையே அளிப்பார். கன்னி ராசிக்கு செல்லும் புதன் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எந்தமாதிரியான பலன்களைத் தரப் போகிறார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் - மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும். இக்காலகட்டத்தில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் இது தேவையான மன அழுத்தத்தை உங்களுக்கு வழங்கும். ஆறாம் வீட்டில் புதன் இருப்பதால், சேவைத் துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம் - ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு அற்புதமான காலம். இக்காலத்தில் உங்கள் நிதி மற்றும் சேமிப்பு நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள உங்கள் புத்திசாலித்தனம் உதவும். இந்த காலத்தில் உங்கள் படைப்பாற்றலும் கலைத் திறனும் முக்கியத்துவத்திற்கு வரும். மேலும் உங்கள் வருமானம் மற்றும் வருவாய் அதிகரிக்கும். நீங்கள் சந்திக்கும் எந்தவிதமான பிரச்சினையையும் தீர்க்க உங்கள் புத்திசாலித்தனமும் தர்க்கமும் உங்களுக்கு உதவும். உங்கள் சிறந்த பகுப்பாய்வு மற்றும் கவனிப்பு திறன்கள் உங்களுக்கு நல்ல முடிவுகளைப் பெற உதவும். இந்த காலகட்டத்தில் உங்களின் லாபத்தை அதிகரிக்க உங்கள் இராஜதந்திர அணுகுமுறை மற்றும் வெளிப்பாடு சக்தியைப் பயன்படுத்தவும்.
மிதுனம் - மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு நல்லதாக இருக்கும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காலமாகவும் இருக்கும். நீங்கள் வீட்டில் அமைதியான சூழலை அனுபவிப்பீர்கள். வீட்டில் உங்கள் உறவுகள் மேம்படும். இந்த காலத்தில் வெளிநாட்டு ஆதாரங்கள் மூலமாக ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளது. தொழிலைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல காலம். இந்த காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, வெகுமதி மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் கூர்மையான அறிவால் மக்கள் உங்களை விரும்புவார்கள்.
கடகம் - கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். நேர்மறையாக பார்த்தால், இக்காலத்தில் உங்கள் தொடர்பு மேம்படும். உங்களின் நெருங்கிய மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும். மேலும் இது உங்களுக்கு மனஅமைதியையும் அளிக்கும். இக்காலத்தில் உங்கள் முயற்சிகள் வெளிநாட்டு மூலங்களில் அங்கீகரிக்கப்படும். இருப்பினும், நீங்கள் வெளிநாட்டு ஆதாரங்களுடன் தொடர்பு கொள்ளாவிட்டால், உங்கள் முயற்சிகள் பலனளிக்காமல் போகலாம் மற்றும் வீணாகலாம்.
சிம்மம் - சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும். குறிப்பாக உங்களின் நிதி மற்றும் பண அடிப்படையில், உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் மற்றும் வருவாயில் நல்ல உயர்வு இருக்கும். இக்காலகட்டத்தில் பண வரவு நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் தலைமைத்துவ திறன்களுடன் உங்கள் சிறந்த பகுப்பாய்வு திறனை உங்கள் சக ஊழியர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் நன்கு தெரிவிக்கவும். ஒட்டுமொத்தமாக, இந்த காலம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் நன்றாக இருக்கிறது.
கன்னி - கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். தனது சொந்த வீட்டிற்கு புதன் செல்வதால், இந்த காலம் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் நல்ல யோகத்தை உருவாக்கும். உங்களுக்கு நல்ல செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை மேம்படுத்தப்பட்டு ஈர்க்கும் வகையில் மாறும். உங்கள் புத்தி கூர்மையாக மாறும், அது உங்களுக்கும் லாப நோக்குடையதாக மாறும். இது ஒரு நல்ல காலம். இக்காலத்தில் உங்கள் கணக்கீட்டு திறன் நன்றாக இருக்கும், மேலும் இந்த அற்புதமான காலகட்டத்தில் அதிகபட்ச நன்மைகளைப் பெற புதன் உங்களை ஒரு நல்ல பகுப்பாய்வாளராகவும் பார்வையாளராகவும் மாற்றும்.
துலாம் - துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் நீண்ட தூர பயணங்களை அல்லது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் திறன்களை பகுப்பாய்வு செய்வதிலும், கவனிப்பதிலும் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். இக்காலகட்டத்தில் உங்கள் ஜாதகத்தில் ஒரு நீச்ச பங்க ராஜ யோகம் உருவாகிறது. இது முதலில் உங்களின் நம்பிக்கையின்மையைக் குறிக்கும். இருப்பினும், பின்னர் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் நல்ல லாபங்களைப் பெறுவீர்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த இடமாற்றம் உங்களுக்கு நன்றாக இருக்கும் மற்றும் திடீரென்று உங்களின் வருமானம் மற்றும் வருவாயை அதிகரிக்கும். ஆராய்ச்சி, இறக்குமதி-ஏற்றுமதி, ஆடிட்டிங் , ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல ஆதாயங்களைப் பெறலாம். இந்த காலத்தில் முதலீடு செய்யும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இது திடீர் இழப்பையும் உருவாக்கக்கூடும். எனவே முதலில் பண முதலீடுகளைச் செய்வதற்கு முன் நிலைமையை முன்கூட்டியே பகுப்பாய்வு செய்யுங்கள். எவ்வாறாயினும், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் எந்தவொரு கூட்டாண்மையும் உங்களுக்கு நல்ல லாபத்தைக் கொண்டு வரலாம்.
தனுசு - தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் மற்றும் தொழில் சம்பந்தமாக ஒரு நல்ல முடிவை வழங்கும். இந்த காலத்தில் பதவி உயர்வு மற்றும் வெகுமதிகள் பெற வாய்ப்புள்ளது. உங்கள் நல்ல பகுப்பாய்வு திறன் மற்றும் வேலையில் கவனிக்கும் திறன்கள் போன்றவை வேலையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க உதவும். வெளியீடு, ஊடகம் அல்லது எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் இந்தக் காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த காலகட்டத்தில் எல்லா நேரத்திலும் நேர்மறையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மகரம் - மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும் மற்றும் உங்களின் அதிர்ஷ்டத்தை இக்காலத்தில் அனுபவிப்பீர்கள். உங்கள் தந்தை மற்றும் குருக்களுடனான உங்கள் உறவு மேம்படும். உயர்கல்வியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் விரும்பிய பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வணிக நோக்கத்திற்காக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். மத செயல்கள், ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தில் ஈடுபடுவோருக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
கும்பம் - கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களால் எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுவீர்கள். ஆகவே மாணவர்களுக்கு இக்காலம் கடினமான காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் பண வரவும் நன்றாக இருக்கும். எந்தவொரு மோசமான சூழ்நிலையையும் சமாளிக்க உங்கள் பொறுப்பான மற்றும் முதிர்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள். இந்த காலகட்டத்தில் திடீர் முதலீடுகளை செய்யாதீர்கள்.
மீனம் - மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் துணையுடனான உறவு மேம்படும். உங்கள் துணையின் ஆரோக்கியம் குறையக்கூடும், எனவே இந்த காலகட்டத்தில் கூடுதல் கவனம் தேவை. யாரையும் நம்பாதீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வெளிப்பாட்டு சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப விஷயங்களை இயக்க வேண்டும் மற்றும் இந்த காலகட்டத்தில் மிகவும் உறுதியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது உங்களுக்கு முன் சில குழப்பங்களை உருவாக்கலாம். அதனால் இறுதி முடிவுகள் மிகவும் தாமதமாகும். எனவே இக்காலத்தில் பொறுப்பான நபராக இருங்கள் மற்றும் உங்கள் திறமைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள்.