இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...

அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த தொடர்ந்து படியுங்கள். 

இந்த வாரம் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது...

இந்த வாரம், அதாவது செப்டம்பர் 26, 2021 முதல் அக்டோபர் 02, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

மேஷம் - இந்த வாரம் உங்களுக்கு பணத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு கூடுதல் பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் கடன் வாங்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வேலையைப் பற்றி பேசுகையில், வணிகர்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரம் பெருகும். நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரம் செய்தால், இந்த வாரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் சரியான நேரத்தில் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் இடமாற்றம் செய்யப்படலாம். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, உங்களையும் அன்புக்குரியவர்களையும் முழுமையாக கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

ரிஷபம்  - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு நன்றாக இருக்காது. இந்த காலகட்டத்தில், நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாது. இதன் காரணமாக உங்கள் இயல்பில் அதிகப்படியான கோபமும் எரிச்சலும் இருக்கும். நீங்கள் உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், தவறான நடத்தையால் அன்புக்குரியவர்கள் வருத்தமடையலாம். உங்கள் மனதை அமைதியாக வைத்து நேர்மறையாக இருப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் முன்னோர் வியாபாரத்துடன் தொடர்புடையவராக இருந்தால், குடும்ப பெரியவர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவ்வப்போது நீங்கள் அவர்களின் ஆலோசனையை பெற வேண்டும். சிந்திக்காமல் எந்த வேலையும் செய்யாதீர்கள். உத்தியோகஸ்தர்கள் எந்த மாற்றத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரமாக எந்த தவறான நடவடிக்கையும் எடுக்காதீர்கள். இல்லையெனில் பெரும் இழப்பை சந்திக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், இந்த நேரத்தில் எந்தவித கவனக்குறைவும் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம் - வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் முதலாளியின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பாக இருக்கும். மேலும் அவர் சிறிய தவறுகளுக்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். எனவே, உங்கள் வேலையை கவனமாக செய்வது நல்லது. அதே போல் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பும் வேலை கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. இந்த வாரம் சிறு வியாபாரிகளுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரம் பெருகும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மோதலைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் துணை மீது தேவையில்லாத கோபப்படுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கையின் அமைதி பாதிக்கப்படலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பணம் தொடர்பாக எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், நீங்கள் சிந்திக்காமல் செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம் - இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரலாம். குறிப்பாக பணத்தைப் பொறுத்தவரை, இந்தக் காலத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குறைந்த முயற்சியில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணத்தையும் பெறலாம். நீங்கள் ரியல் எஸ்டேட் தொடர்பான முதலீட்டை செய்ய திட்டமிட்டால், விரைவில் நல்ல வாய்ப்பைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை தொடர்பான பயணம் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலையைச் செய்தால், மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாரத்தின் தொடக்கத்தில் லாபம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஒரு ஆடை வியாபாரி என்றால், இந்த நேரத்தில் உங்கள் வியாபாரம் இரண்டு மடங்கு உயரும். குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால் சிறந்த பரஸ்பர புரிதலின் காரணமாக, எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் மேம்படும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், சரியான நேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், லேசான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம் - இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாகவும் லாபகரமானதாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவைப் பெறலாம். நீண்ட காலமாக நீங்கள் சில வேலைகளை முடிக்க கடினமாக உழைக்கிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் நிச்சயம் வெற்றியைப் பெறலாம். உங்கள் தடைப்பட்ட வேலையும் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. வார இறுதியில் நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நன்றாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்புள்ளது. உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்களை சிக்கலில் ஆழ்த்தும். நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் அதிகரிக்காமல் பார்த்து கொள்வது நல்லது. வேலையுடன், நீங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான நேரத்தை கொடுக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பெற்றோருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். மேலும் அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகளையும் பெறலாம். நிதி நிலை இயல்பை விட நன்றாக இருக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பிரச்சனை இருக்காது. உடல்நலத்தில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி  - இந்த வாரம் உங்களுக்கு வேலை விஷயத்தில் கலக்கப் போகிறது. சோம்பலை கைவிட்டு உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக முதலாளி உங்களுக்கு சில முக்கியமான பொறுப்புகளை வழங்கியிருந்தால், நீங்கள் அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். நீங்கள் முன்னேற நல்ல வாய்ப்புள்ளது. உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். சிறு வியாபாரிகள் அரசு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த காலகட்டத்தில், நீங்கள் கொஞ்சம் கவனக்குறைவைச் செய்தால், நீண்ட கால சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். இதனுடன், நீங்கள் வியாபாரத்தில் இழப்பையும் சந்திக்க நேரிடும். சமீபத்தில் நீங்கள் கூட்டாக சேர்ந்து ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கியிருந்தால், இந்த வாரம் உங்களுக்குக் கலவையானதாக இருக்கப் போகிறது. நீங்கள் அவசரப்பட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

துலாம் - வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் பண வரவைப் பெறலாம். பணப் பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலையை உங்களால் முடிக்க முடியும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்தும் செயல்முறையைத் தொடங்குங்கள். இது உங்கள் அழுத்தத்தைக் குறைக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு கலக்கமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அமைதியான மனதுடன் உங்கள் எல்லா வேலைகளையும் முடிக்க முயற்சித்தால் நல்லது. வேலை காரணமாக அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். வணிகர்கள் பெரிய ஒப்பந்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் உங்கள் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில், வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு இருக்கலாம். அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாக உணருவீர்கள். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்களுக்கு இதயம் தொடர்பான நோய் இருந்தால், நீங்கள் அதிக மன அழுத்தம் மற்றும் கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

விருச்சிகம்  - நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் படிப்பு மற்றும் தேர்வில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சிரமத்தை எதிர்கொண்டால் உங்கள் ஆசிரியர்களின் உதவியை நாடலாம். நிதி அடிப்படையில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் புதிய வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் சம்பந்தமாக வேலை செய்வோருக்கு இந்த நேரம் சவாலாக இருக்கும். உங்கள் வேலையில் திடீர் குறுக்கீடு காரணமாக நிதி இழப்பு சாத்தியமாகும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் எந்த சுப நிகழ்ச்சியையும் வீட்டில் நடத்தலாம். அன்புக்குரியவர்களுடன் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மன அமைதியை உணர்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதன் மூலம் உங்கள் பெரிய கவலை நீங்கும். இந்த சமயத்தில் வாழ்க்கைத்துணையுடனான நல்லிணக்கம் கெட வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் இயல்பில் கடுமையான தன்மை இருக்கும். சிறிய விஷயங்களுக்காக உங்களுக்கு இடையே பெரிய சண்டைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, கவனக்குறைவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நாள்: புதன்

தனுசு  - இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். மேலும், உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் கூட்டாக வியாபாரம் செய்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூட்டாளருடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். நீங்கள் சில முக்கிய முடிவுகளை ஒன்றாக எடுக்கலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும். நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க திட்டமிட்டால், இதற்காக நீங்கள் சிறிது காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கடினமான போராட்டத்திற்குப் பிறகு உத்தியோகஸ்தர்கள் நல்ல வெற்றியைப் பெற முடியும். நீங்கள் வேலைகளை மாற்ற விரும்பினால், ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து சலுகையைப் பெறலாம். நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், உங்களது கனவு விரைவில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். வார இறுதியில் வாழ்க்கைத்துணையிடமிருந்து நிதி ஆதாயங்கள் சாத்தியமாகும். இது உங்கள் துணையுடன் அற்புதமான நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், சிறிய பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மகரம் - இந்த வாரம் உங்களுக்கு கலவையான முடிவுகளை கொடுக்கும். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் நடக்கும் அரசியலுக்கு நீங்கள் பலியாகலாம். எனவே, உங்கள் வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதே போல் உங்களைச் சுற்றி நடக்கும் செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சக பணியாளர்களை அதிகமாக நம்புவதைத் தவிர்க்கவும். வணிகர்கள் பல சிறிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். வார இறுதியில் பணத்தைப் பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சில சச்சரவுகள் இருக்கும். இந்த நேரத்தில் உடன்பிறப்புகளுடனான உறவு மோசமடையக்கூடும். உங்கள் கடுமையான அணுகுமுறை உங்கள் உறவில் கசப்பை ஏற்படுத்தும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை கொடுக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கையில் உற்சாகத்தை பராமரிக்க விரும்பினால், உங்கள் துணையைப் புறக்கணிக்காதீர்கள். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்காது. வருமானத்தை விட அதிக செலவுகள் இருக்கலாம். ஆரோக்கியத்தில் சரிவு சாத்தியமாகும். எனவே, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

கும்பம் - வணிகர்கள் சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சட்டவிரோதமான வேலைகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் பெரும் இழப்புகள் ஏற்படலாம். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், இந்த காலகட்டத்தில் உங்கள் வேலை பாதிக்கப்படலாம். நீங்கள் பொறுமையுடன் வேலை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய ஓட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிக வேலைச்சுமை இருக்கும். நீங்கள் வங்கித் துறையுடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சவாலாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பழைய குடும்பக் கடனையும் திருப்பிச் செலுத்த முடியும். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் உடல்நலம் சிறிது காலமாக நன்றாக இல்லை என்றால், இந்த வாரம் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

மீனம் - நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் தூரம் அதிகரிக்கலாம். உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு, இந்த வாரம் திருமணம் முடிவு செய்யப்படலாம். பணத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு வழக்கத்தை விட நன்றாக இருக்கும். நீங்கள் எவ்வளவு சேமிப்பில் கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் மதிப்புமிக்க ஒன்றை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு இந்த நேரம் உகந்தது அல்ல. வாரத்தின் நடுப்பகுதியில், உங்கள் தந்தையின் உடல்நிலை மோசமடைவதால் நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் மருத்துவரை பலமுறை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையைப் பற்றி பேசினால், வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் இந்த வார இறுதியில் நல்ல லாபம் பெறலாம். உங்களுக்கு இரத்த அழுத்தம் பிரச்சனைகள் இருந்தால் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0