ஹோலி பண்டிகை அன்று எவற்றை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் மாா்ச் 29 அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

வடஇந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை ஆகும். ஹோலி பண்டிகையானது சமூகத்தில் நிலவும் சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் அன்பு போன்ற நற்பண்புகளை உணா்த்துகிறது. மேலும் தீமையின் மீது நன்மை கொண்ட வெற்றியின் அடையாளமாகவும் ஹோலி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் மாா்ச் 29 அன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை மாா்ச் 28 அன்று தொடங்குகிறது. முதல் நாள் ஹோலிகா தான் என்றும் மறுநாள் ஹோலி அல்லது ரங்கபஞ்சமி என்றும் கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகையின் இரண்டு நாட்களும் மிக முக்கியமான நாட்களாக கருதப்படுகின்றன. அதாவது இரண்டு நாட்களும் மக்கள் தங்களைச் சுற்றி இருப்பவரோடு வைத்திருக்கும் சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை காண்பிக்கும் வகையில் பிறருக்கு தங்களால் முடிந்த தான தருமங்களை வழங்குவா்.
ஹோலி பண்டிகையின் போது மக்கள் பிறருக்கு தான தருமங்களை வழங்கினாலும், சில குறிப்பிட்ட பொருட்களை இந்த பண்டிகையின் போது தானமாக வழங்கக்கூடாது. அவை எவை என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.
புத்தகங்கள் மற்றும் ஏடுகள்
கல்வி சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் ஏடுகளை பிறருக்கு தானமாக வழங்குவது ஒரு சிறந்த பண்பு என்றாலும், ஹோலி பண்டிகையின் போது அவற்றை மற்றவருக்குத் தானமாக வழங்கக்கூடாது. ஏனெனில் ஹோலி பண்டிகையின் போது கல்வி சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் ஏடுகளை பிறருக்குத் தானமாக வழங்கினால், அது குடும்பத்திற்கு ஆகாது. அது ஒரு கெட்ட சகுனமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பாத்திரங்கள்
ஹோலி பண்டிகையின் போது பாத்திரங்களை மற்றவா்களுக்குத் தானமாக வழங்கினால், நமது குடும்பத்தில் இருக்கும் செல்வமும், வளமும் குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அதோடு குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சி மற்றும் அமைதி குறைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஹோலி பண்டிகையின் போது பாத்திரங்களை மற்றவருக்கு தானமாக வழங்கக்கூடாது.
பிளாஸ்டிக் பொருட்கள்
எந்த ஒரு சூழலிலும், ஹோலி பண்டிகையின் போது அடுத்தவருக்கு, பிளாஸ்டிக் பொருட்களைத் தானமாக வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அது நமது குடும்பத்திற்குள் துன்பங்களை, துரதிா்ஷ்டத்தை மற்றும் வலியைக் கொண்டு வரும். ஆகவே பிளாஸ்டிக் பொருள்கள் மட்டும் அல்ல, துடைப்பத்தையும் இந்த நாட்களில் தானமாக வழங்கக்கூடாது.
ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்
ஹோலி பண்டிகையின் போது, ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை பிறருக்கு தானமாக வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அது நமது தானத்தின் மதிப்பைக் குறைப்பதோடு, நமது குடும்பத்திற்கு ஏராளமான துன்பங்கள் மற்றும் துரதிா்ஷ்டத்தைக் கொண்டு வரும். அதோடு சனி பகவானுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.
பழைய ஆடைகள்
ஹோலி பண்டிகையின் போது பழைய ஆடைகளைத் தானம் செய்வதை தவிா்க்க வேண்டும். ஏனெனில் பழைய ஆடைகளைத் தானம் செய்தால், குடும்பத்தில் இருக்கும் செல்வம் திடீரென்று குறைந்துவிடும். எனவே ஆடைகளை தானம் செய்ய விரும்பினால், புதிய ஆடைகளை தானம் செய்வது நல்லது.






