சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் என்னென்ன நன்மை தெரியுமா?

நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம்.

சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் என்னென்ன நன்மை தெரியுமா?

சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார் தேரையர். உடல் கட்டு மற்றும் எலும்பிற்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. 

நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம். நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள். வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பதாகும். மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும். 

நல்லெண்ணெய் குளியல் 

சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியலைதான் குறிக்கிறது. அது ஏன் நல்லெண்ணை? அனைத்து எண்ணெய்களுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாகும். உடல் ஆரோக்கியம் உடல் கட்டு மற்றும் எலும்பிற்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. 

நல்லெண்ணெய் மசாஜ் 

வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகின்றது? சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். 

எண்ணெய் குளியல் யாருக்கு எப்போது 

சனீஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். நரம்பு நோய்கள் நீங்கும் எண்ணெய் தேய்த்து குளித்தால் சனி தோஷம் விலகும். சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும். சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும். சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும். 

ஓய்வு அவசியம் 

சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு மிளகு ரசம் சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்ல சுகம். நல்லெண்ணெய் குளியல் செய்யும் நாளில் அசைவம், தயிர்சாதம் சாப்பிட வேண்டாம். நாளைக்கு சனிக்கிழமை நல்லா நல்ல எண்ணெய் தேய்த்து குளிங்க அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கையில நடக்கப்போற மாற்றத்தை.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0