துலாம் ராசிக்கு செவ்வாய் செல்வதால் பணப்பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். அதோடு செவ்வாய் "கடவுளின் தளபதி" என்றும் அழைக்கப்படுகிறது.
கன்னி ராசியில் இருந்து செவ்வாய் வெளியேறி, துலாம் ராசிக்கு அக்டோபர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.13 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த துலாம் ராசியில் டிசம்பர் 5 ஆம் தேதி வரை இருந்து பின் விருச்சிக ராசிக்கு செல்லவிருக்கிறார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். அதோடு செவ்வாய் "கடவுளின் தளபதி" என்றும் அழைக்கப்படுகிறது.
செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷம் உருவாக்கும்.
இத்தகைய செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களே, நீங்கள் பணியிடத்தில் பல சவால்களை எதிர்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் சமநிலையுடன் இருக்க வேண்டும். நிதி ரீதியாக, செல்வத்தை சேர்ப்பதற்கு போராட வேண்டியிருக்கும். கடுமையாக உழைத்தால் வெற்றி அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்கள் மற்றும் பிரச்சனைகள் இருக்கும். சமூகத்தில் உங்கள் நிலை மேம்படும் மற்றும் பயணத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகள் புதிய யோசனைகள் மற்றும் உத்திகளைக் கொண்டு செயல்படுவார்கள்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களே, இக்காலத்தில் நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களின் எல்லா சூழ்நிலைகளையும் சாமர்த்தியமாக கையாள வேண்டும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்க மாட்டார்கள். பணத்தை சேமிக்க போராடுவீர்கள். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எம்.என்.சி-யில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களே, இக்காலத்தில் நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். உங்கள் எதிரிகளை எளிதில் தோற்கடிப்பீர்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே நன்கு சம்பாதிக்க முடியும். மன ஆரோக்கியத்தை கவனித்து வாழ்க்கை முறையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உறவில் இருப்பவர்களுக்கு, இக்காலம் அன்பு நிறைந்ததாகவும், சாதகமானதாகவும் இருக்கும். நிர்வாக நிலையில் வேலை செய்பவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் நீங்கள் உங்கள் ஆற்றலை நன்றாக மாற்ற வேண்டும்.
கடகம் - கடக ராசிக்காரர்களே, அனைத்து வேலைகளையும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் கையாளுங்கள். இதனால் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். சந்திக்கும் சவால்கள் அனைத்தையும் நன்கு சமாளிப்பீர்கள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்த முடியும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தைப் பெறுவீர்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் உகந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதற்காக வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் கடினமாக உழைத்து அந்தந்த துறைகளில் வெற்றி காண்பார்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்கள், உடன்பிறப்புகள் அல்லது சக ஊழியர்களுடன் ஒரு சிறு பயணத்தைத் திட்டமிடுவீர்கள். திருமணமானவர்கள், துணையுடன் மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் இருக்கும். இந்நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களின் நிதியைப் பற்றி பேசுவதானால், பணத்தை சேமிக்க போராடுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில், மோதல்கள் இருக்கும். உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவும் மோசமடையும். இது உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, உங்களை அமைதியற்றதாக ஆக்கும். இக்காலத்தில் நிறைய பேருடன் பழகுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்படுவீர்கள். எனவே ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மற்றவர்களின் பேச்சை அமைதியாக கேளுங்கள். கெட்ட பழக்கங்களை தவிர்த்திடுங்கள். கூட்டாண்மை வணிகம் செய்பவர்களுக்கு, இது சாதகமான காலமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசும் போது, உங்கள் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆனால் சிறு விஷயங்களுக்கு எரிச்சலடைவதைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கையுட்ன் இருக்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் வெற்றியில் பிரச்சனைகளை உருவாக்கும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இக்காலம் சாதகமாக இல்லை. மன ஆரோக்கியம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை எதிர்த்துப் போராட நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் தியானம் மற்றும் யோகாவை உங்கள் வழக்கமாக கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு வேலையை மாற்ற திட்டமிட்டால், அதற்கு இது சரியான நேரம். வணிகர்களுக்கு, இது சாதகமான நேரமாக இருக்கும், அவர்கள் நல்ல பரிவர்த்தனைகளைச் செய்வார்கள் மற்றும் லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் சில தவறான புரிதல்கள் இருக்கலாம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் எளிதில் வெற்றி கிடைக்காது. மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உங்கள் தொழில் வாழ்க்கைக்கு உதவும் புதிய தொடர்புகளை உருவாக்குவீர்கள். மிகவும் கவனமாக இருங்கள், ஏனென்றால் இக்காலத்தில் உடல் உபாதைகள் அல்லது விபத்துகள் ஏற்படலாம். நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். எனவே தியானம் செய்யுங்கள். சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்கவும். ஏனெனில் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும், ஆனால் செலவுகளும் அதிகமாக இருக்கும்.
மகரம் - மகர ராசிக்காரர்களே, இக்காலத்தில் அரசு தொடர்பான கொள்கைகள் உங்களுக்கு பயனளிக்கும். நீங்கள் உங்கள் சக ஊழியர்களுக்கு இடையே ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் தந்தையிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சமூகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். மேலும் நீங்கள் ஒரு நல்ல சமூக வட்டத்தையும் உருவாக்குவீர்கள். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் வணிகர்கள் செழிப்பார்கள். வேலையைப் பற்றி பேசுகையில், உங்களை அனைவரும் புகழ்வார்கள். அரசாங்கக் கொள்கைகளும் உங்களுக்கு பயனளிக்கும். எனவே நீண்ட கால நிதியில் கவனமாக முதலீடு செய்யுங்கள்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிக ஆற்றலும் உயிர்ப்பும் இருக்கும். நீங்கள் ஒரு வேலையில் இருந்தால், அதற்கேற்ப உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், உங்கள் வேலைக்கு வெகுமதி கிடைக்கும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு நன்றாக இருக்காது, எனவே, நீங்கள் நிறைய முயற்சி செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு உணர்ச்சி ரீதியாகவும், நிதி ரீதியாகவும் ஆதரவளிப்பார்கள்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் இக்காலத்தில் செல்வத்தை ஈட்ட கடினமாக உழைப்பார்கள். திடீரென இழப்பை சந்திக்க நேரிடும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் துணையுடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நீங்கள் அதை எளிதாக தீர்ப்பீர்கள். தெருக்களில் நடக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் உடலில் காயம் ஏற்படலாம். நிலம் அல்லது சொத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரம். இந்த நேரத்தில் உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.