அடுத்த ஒரு மாசத்துக்கு கடகம் செல்லும் புதனால் இந்த ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..

ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் சொதப்புவதோடு, மோசமாக கையாளுவார்கள்.

அடுத்த ஒரு மாசத்துக்கு கடகம் செல்லும் புதனால் இந்த ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..

இத்தகைய புதன் ஜூலை 25 காலை 11.31 மணிக்கு மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 09 அதிகாலை 1.23 மணிக்கு செல்லவிருக்கிறது. இப்போது கடக ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்தமாதிரியான பலன்களை பெற போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீடு சந்தோஷம், தாய் மற்றும் சொத்தைக் குறிக்கிறது. இதனால் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்களின் செயல்திறன் மேம்படும். தாயின் உடல்நலம் தொடர்பான கவலைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிதல்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். பணியிடத்தில் இடமாற்றங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு, இக்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் உண்டு. விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலகட்டம் செழிப்பாக இருக்கும். ஒட்டுமொத்தமாக இந்த காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீடு திறன்களையும், தகவல் தொடர்புகளையும் குறிக்கிறது. எனவே விற்பனையாளர், பத்திரிகையாளர், நிருபர், எழுத்தாளர், வழக்கறிஞர், அல்லது கல்வித்துறை போன்ற தகவல்தொடர்பு துறையில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பேச்சில் மிகவும் கண்ணியமாக இருப்பார்கள். இது மற்றவர்களை ஈர்க்கும். வெளிநாடுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் அறிமுகமானவர்களுடன் இந்த காலத்தில் ஒரு சிறு பயணத்தையும் நீங்கள் திட்டமிடலாம். இருப்பினும், இந்த நேரத்தில், ஏதோவொன்றின் காரணமாக நீங்கள் மனரீதியாக பதட்டமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, யோகா, தியானம் போன்றவற்றை செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். இக்காலம் வியாபாரிகளுக்கு மிகவும் செழிப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீடு செல்வத்தைக் குறிக்கிற.து. ஆனால் புதன் சந்திரனை எதிரியாக கருதுவதால், இக்காலத்தில் நிதி ரீதியாக உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. இந்த காலத்தில் உங்கள் இராஜதந்திர திறன்கள் மேம்படும். திருமணமானவர்கள், உங்கள் மனைவியின் குடும்பத்தினரிடமிருந்து உதவி மற்றும் ஆதரவைப் பெறலாம். உங்கள் தாயிடமிருந்து ஆதரவும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை தொழில் ரீதியாக வளருவார். வணிகர்கள் தங்கள் வேலையில் மேலும் புதுமையான யோசனைகளைக் கொண்டுவர முயற்சிப்பார்கள், இது அவர்களின் வணிகத்தை மேலும் வளர்க்க உதவும். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தை நோய்வாய்ப்படக்கூடும். எனவே அவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த காலம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் வலிமை அதிகரிக்கும். பணியிடத்தில் மிகச்சிறப்பாக செயல்படுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணத்திற்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகள் நோய்வாய்ப்படக்கூடும் என்பதால் நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். ங்கள் நிதி ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். கூட்டு வணிகம் புரிபவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீடு இழப்பு, மோசமான ஆரோக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இதன் காரணமாக, இந்த நேரத்தில், நீங்கள் மிகவும் பகட்டான வாழ்க்கை முறையை பின்பற்ற முயற்சிப்பீர்கள். மேலும் பொருள் சார்ந்த விஷயங்களுக்கு செலவிடுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் பொருளாதார ரீதியாக நிலையற்றவர்களாக மாறக்கூடும். ஒரு குடும்ப உறுப்பினரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் நீங்கள் செலவிட வேண்டியிருக்கும். செலவுகள் அதிகமாவதால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். இந்த காலம் உங்களுக்கு மிகவும் சவாலான காலமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் நோய்வாய்ப்படக்கூடும் என்பதால் உங்கள் உடல்நலத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இக்கால கட்டத்தில் நீங்கள் அதிக கவலைப்படக்கூடும். எனவே உங்கள் வாழ்க்கைமுறையில் யோகா மற்றும் தியானத்தை சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருங்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கையில் சில மோதல்கள் ஏற்படலாம். மொத்தத்தில் இந்த காலத்தில் தன்னம்பிக்கை வைத்திருப்பது வெற்றியை நோக்கி முன்னேற உதவும்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் ஆளுமையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். இது உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் ஈர்க்கும். உங்களின் சிந்தனை நன்றாக இருக்கும், இது உங்கள் பணியிடத்தில் உங்களுக்கு உதவும். பொருள் சார்ந்த விஷயங்களுக்கு ஆடம்பரமாக செலவழிக்கலாம், இது உங்களை நிதி ரீதியாக பாதிக்கலாம். பதினொன்றாவது வீடு லாபத்தின் வீடு. வேலையில் இருக்கும் உங்கள் உடன் பணிபுரிபவர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகளை நீங்கள் தோற்கடிப்பீர்கள். உங்கள் தகவல் தொடர்பு திறன் மூலம் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். உங்கள் குழந்தையிடமிருந்தும் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் சில சமூகப் பணிகளைச் செய்வதிலும் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். வெளிநாடுகளுடன் வியாபாரம் செய்யும் நபர்களும் தங்கள் வணிகம் செழிப்பதைக் காண்பார்கள். இந்த காலத்தில் வெளிநாட்டில் குடியேறவும் நீங்கள் திட்டமிடலாம். உங்கள் பணியிடத்தில் நீங்கள் சில அரசியலைக் காணலாம், அதிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். இக்கால கட்டத்தில் சொந்த வீடு போன்ற ஒரு சொத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிடலாம் அல்லது புதிய வாகனம் வாங்க திட்டமிட்டிருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் சிந்தனை மிகவும் நேர்மறையாக இருக்கும். நீங்கள் உங்கள் தந்தையின் வியாபாரத்தில் இருந்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மீக அல்லது மத வேலைகளிலும் ஈடுபடலாம். சமுதாயத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள், இது வெற்றியை நோக்கிச் செல்ல உதவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மூதாதையர் அல்லது பரம்பரை சொத்திலிருந்தும் பெறலாம். மேலும், நீங்கள் எழுதுதல்,பாடுவது அல்லது வணிகம் போன்ற தொழிலில் இருந்தால் பணத்தைப் பெறலாம். நீங்கள் செய்யும் எந்த வேலைக்கும், இந்த காலகட்டத்தில் நிறைய ஆராய்ச்சி செய்த பின்பே முடிவுகளை அடைவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பொதுவான அணுகுமுறை மகிழ்ச்சியான மற்றும் எளிதான ஒன்றாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்காக உங்கள் நேரத்தை வீணடிக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் சமூகத்தில் சில புகழை இழக்க நேரிடும் என்றாலும், இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்கார மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க திட்டமிடலாம் மற்றும் அதில் நீங்கள் வெற்றியைக் காணலாம்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இக்காலம் சாதகமானதாக இருக்காது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் பல சவால்களை எதிர்கொள்ளக்கூடும். மேலும் வணிகர்களும் சில இழப்புகளைக் காணலாம். செல்வத்தை குவிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். சிலர் மூதாதையர் சொத்திலிருந்து பயனடையலாம். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் பல சவால்களை எதிர்கொள்ளக்கூடும், மேலும் வணிக நபர்களும் சில இழப்புகளைக் காணலாம். இந்த காலத்தில் உங்கள் மனம் மிக விரைவாக இயங்கும், இதன் காரணமாக, உளவுத்துறையில் ஈடுபடுபவர்கள் வெற்றியைக் காண்பார்கள். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் சிக்கல்களைக் காணலாம். உங்கள் மனதில் உள்ள பிரச்சனைகளை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீடு சண்டைகள், நோய்கள் மற்றும் போட்டியைக் குறிக்கிறது. இக்காலத்தில் உங்கள் மனைவி நோய்வாய்ப்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் இருவருக்கும் இடையில் சண்டைகள் மற்றும் வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல் மற்றும் உங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள நீங்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும். கூட்டாண்மை வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம் என்றும், இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்பு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இக்காலத்தில் உணவு அலர்ஜி, தூக்க கோளாறுகள் மற்றும் காய்ச்சலாவ் அவதிப்பட நேரிடும். உங்கள் தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். இழப்புகள் மற்றும் பயனற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், எந்தவொரு முதலீடும் அல்லது கடன் கொடுப்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது தான் உங்கள் முயற்சிகளில் சில வெற்றிகளைப் பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த வீடு குழந்தைகள், படிப்புகள், காதல் விவகாரங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைக் குறிக்கிறது. புதனின் இந்நிலை இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். பணியிடத்தில் ஆக்ரோஷமாக நடக்காமல் சுமூகமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. காதலிப்பவர்களுக்கு இது சாதகமான காலம். உங்களில் சிலர் சொத்தில் முதலீடு செய்யவும் திட்டமிடலாம். நீங்கள் மத அல்லது ஆன்மீக வேலைகளிலும் ஈடுபடலாம். உங்களுக்கு கொஞ்சம் காயம் ஏற்படக்கூடும் என்பதால் இந்த காலத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் இக்காலத்தில் தங்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0