இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டும்...

இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 20 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிக கவனமாக இயக்க வேண்டும்...

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். டிசம்பர் 20 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் - இன்று நீங்கள் மிகவும் சோம்பலாக உணரலாம். உங்கள் பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் தினசரி வழக்கத்தில் தியானத்தை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் போட்டிகள் அதிகரிக்கக்கூடும். எனவே, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்களின் கடின உழைப்பின் பலன் விரைவில் உயர் பதவி ரூபத்தில் கிடைக்கும். இன்று வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புஉள்ளது. உங்கள் வணிகம் வேகமாக வளரும். போக்குவரத்து சம்பந்தமாக வேலை செய்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சொத்து சம்பந்தமான எந்த விஷயமும் தீர்க்கப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம் - இன்று வியாபாரிகள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் எதிரிகள் இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் உங்களின் முக்கியமான வேலையை அவர்கள் தடுக்கவும் முயற்சி செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று நிறைய ஓட வேண்டியிருக்கும். திடீரென்று ஒரு முக்கியமான சந்திப்புக்கான அழைப்பைப் பெறலாம். முழு நம்பிக்கையுடன் உங்கள் தரப்பை முன்வைக்க முயற்சிக்கவும். நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். இன்று உங்கள் துணையின் நடத்தை மாறும். ஒருவேளை அவர்கள் தங்கள் தவறை ஏற்றுக்கொண்டு உங்களிடம் மன்னிப்பு கேட்கலாம். உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க சமநிலையுடன் நடந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம் - இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி மிகவும் பாராட்டப்படும். இன்று உங்கள் நிறுவனத்திடமிருந்து பெரிய தொகையை போனஸாக பெறலாம். ஆடை வியாபாரிகளுக்கு பெரிய நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு பெரிய ஆர்டரை பெறலாம். இன்று உங்கள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்ய திட்டமிடலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். வீட்டில் உள்ள சிலருடன் ஏதாவது ஒரு விஷயத்திற்காக தகராறு ஏற்பட்டால், இன்று அவை அமைதியாகிவிடும். இன்று பண விஷயத்தில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் அன்றாட சலசலப்பில் இருந்து கொஞ்சம் நிம்மதி பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை

கடகம் - நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைத்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். நீங்கள் வேலையுடன் உங்கள் சொந்தமாக சிறு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், உங்கள் பாதையில் சில நிதித் தடைகள் இருக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலையில் பரபரப்பாக இருக்கலாம். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாது. இருப்பினும், வார இறுதியில் நீங்கள் அவர்களுக்காக சில நல்ல திட்டமிடல்களை செய்ய வேண்டும். வேலையுடன், உங்கள் குடும்பமும் உங்களுக்கு சம அளவு முக்கியம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு காது தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10 மணி வரை

சிம்மம் - வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். அவசரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு பெரும் இழப்பை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் செயல்களை மேலதிகாரியும் விசாரிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் எந்த விதத்திலும் அலட்சியம் காட்டாதீர்கள். இன்று அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று சாதாரணமாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்ய வேண்டாம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உணவில் எந்தவிதமான கவனக்குறைவும் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி - வியாபாரிகள் வங்கியில் கடன் வாங்க முயற்சித்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விரைவில் உங்கள் வியாபாரம் செழிக்கும். பொதுக்கடை, மளிகைக்கடை போன்ற வேலைகளைச் செய்பவர்களும் இன்று நல்ல லாபத்தைப் பெறலாம். இன்று அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். இன்று உங்கள் மேலதிகாரியுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தலாம். நீங்கள் புதிய யோசனைகளால் நிறைந்திருப்பீர்கள். விரைவில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் அன்பும், பற்றும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மிகவும் காதல் மனநிலையில் இருப்பார். இன்று நீங்கள் நல்ல நேரத்தை செலவிட எங்காவது வெளியே செல்லலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று நீங்கள் கொஞ்சம் நன்றாக உணரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம் - நீங்கள் ஒரு மதப் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தால், விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்களது இந்த பயணம் மிகவும் முக்கியமானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கும். பணியின் அடிப்படையில் நல்ல பலன்களைப் பெறலாம். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், இன்று உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் வருமானம் உயரும். வியாபாரிகளின் பொருளாதார நிலையும் வலுவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். இன்று உங்கள் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவதன் மூலம் நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம் - ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. குறிப்பாக உங்களுக்கு வயிறு தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், இன்று உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் ஒரு பெரிய வேலை உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இன்று நீங்கள் அவசரப்பட வேண்டாம். உங்கள் சிறிய தவறு பெரிய இழப்பை ஏற்படுத்தும். வியாபாரத்தில் மாற்றத்திற்கு இந்த நேரம் நல்லதல்ல. நீங்கள் சிந்திக்காமல் உங்கள் நிதி முடிவுகளை எடுத்தால், வரும் நாட்களில் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். கணவரின் நடத்தை உங்களிடம் நன்றாக இருக்காது. அவர்கள் உங்களை மிகவும் முரட்டுத்தனமாக நடத்தலாம். பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் மனதை கவர முயற்சிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு - இன்று நீங்கள் வாகனத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுடன் சிறு சிறு விஷயங்களுக்கு வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் வீட்டின் அமைதி கெடலாம். மேலும், உறவில் இடைவெளி ஏற்படலாம். அரசு ஊழியர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். வணிகர்கள் இன்று சில ஏமாற்றங்களைப் பெறலாம். இருப்பினும், வியாபாரத்தில் இது போன்ற ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நேர்மறையாக இருந்து, கடினமாக உழைக்கவும். நாளின் இரண்டாம் பாதியில், திடீரென்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

மகரம் - நீங்கள் அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று நீங்கள் தேவையற்ற கோபத்தைத் தவிர்க்க வேண்டும். இன்று வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். தடைப்பட்ட லாபம் கிடைக்காததால், உங்கள் கவலைகள் சற்று அதிகரிக்கலாம். இருப்பினும், தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். வீட்டின் எந்த ஒரு உறுப்பினரின் உடல்நிலையும் திடீரென மோசமடைந்து மிகவும் வருத்தப்படுவீர்கள். இன்று நீங்கள் பெரிய தொகையை மருத்துவக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், இன்று உங்களை நீங்களே அதிக கவனத்துடன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம் - வணிகர்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். இன்று உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம். இந்த நேரத்தில் நீங்கள் பதவி உயர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால் உயர் பதவி கிடைக்கும். இதெல்லாம் உங்களின் கடின உழைப்பின் பலன். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். குழந்தை மூலம் திடீர் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் குழந்தை சில பெரிய சாதனைகளை அடைய முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: காலை 5:10 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம் - இன்று கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மேலும், நீங்கள் வசதியிலும் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்காது. நீங்கள் வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், சிறிது நேரம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களின் அவரச முடிவு தொந்தரவு செய்யலாம். இன்று உங்களின் முக்கியமான வேலை எதுவும் முழுமையடையாமல் போகலாம். இத்தகைய எதிர்மறையான விஷயங்கள் உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வியாபாரிகள் விரைவான லாபம் ஈட்ட குறுக்கு வழியை பின்பற்ற வேண்டாம். இல்லையெனில் நீங்கள் சில பெரிய பிரச்சனைகளில் சிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0