இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பு இருக்காம்!
சவால்கள் நிறைந்த நவம்பர் முடிந்து, டிசம்பர் மாதம் தொடங்க போகிறது. வரும் வாரம் எப்படி இருக்க போகிறது? சிலருக்கு சவால்களை கொண்டு வரலாம், சிலருக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரலாம்.
உங்கள் பொருளாதார நிலை, வணிகம், வேலை, தனிப்பட்ட வாழ்க்கை போன்ற ஒவ்வொரு தகவலையும் இங்கே தெரிந்துக் கொள்ளலாம். நவம்பர் 29 முதல் டிசம்பர் 5ம் திகதி வரையிலான உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.
மேஷம் - நீண்ட காலமாக இருந்தவந்த மன அழுத்தம் இந்த வாரம் மறைய போகிறது. இந்த நேரத்தில் உங்கள் மீது கவனம் செலுத்த உங்களுக்கு நேரம் கிடைக்கும். இது தவிர, பணிச்சுமையும் குறைய போகிறது. வணிகர்கள் பெரிய வணிக முடிவுகளை எடுக்கும் போது மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தில் சில ஏற்ற தாழ்வுகள் காணப்படும். நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்தால், நல்ல பலனை பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாரோடு மிகுந்த மகிழ்ச்சியுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவதில் இந்த வாரம் கொஞ்சம் பணம் செலவிட நேரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
ரிஷபம் - செய்யும் வேலையில் இந்த வாரம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாரத்தின் ஆரம்ப நாட்களில் மன அழுத்தமாக உணர்வீர்கள். இந்த நேரத்தில், சிறு வேலையை கூட கவனமாக செய்ய வேண்டியிருக்கும். தவறினால் சிக்கலில் சிக்கக்கூடும். மூத்த அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் புகார், உங்களது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடலாம். வணிகர்கள் புதிதாக எந்த வேலையையும் தொடங்காமல் இருப்பது நல்லது. புதிய வணிகத்திற்காக வங்கியில் கடன் வாங்க நினைத்தால், இந்த வாரம் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். இந்த வாரம் குடும்பத்தாரோடு நேரம் செலவிட முடியாமல் போகலாம். எனவே, வேலை மற்றும் குடும்பத்திற்கு சம அளவில் கவனம் செலுத்த முயல்வது நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், சற்று கவனத்தோடு இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மிதுனம் - இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உடைகள், பொம்மைகள், புத்தகங்கள் போன்றவற்றை வர்த்தகம் செய்தால், நல்ல லாபத்தை காண்பீர்கள். இந்த ஏழு நாட்களுமே கடுமையாக உழைக்க வேண்டியது முக்கியமானதாக இருக்கும். இந்த நேரத்தில் அலுவலகத்தில் உங்களுக்கு சில புதிய பொறுப்புகள் ஒதுக்கப்படலாம். இந்த பொறுப்புகளை நீங்கள் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அதற்கான பலனையும் வெகு சீக்கிரம் பெறுவீர்கள். பொருளாதார நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் பயனடையலாம். மறுபுறம், இந்த வாரம் பணத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டியிருக்கும். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் மேலோங்கும். வாரத்தின் நடுப்பகுதியில், தந்தை சில உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையுடன் சேர்த்து உங்களது ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அலட்சியம் சிரமங்களை அதிகரிக்க செய்திடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
கடகம் - மன அமைதியை விரும்புபவர்கள், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அலுவலகத்தில் விரும்பிய முடிவுகள் எடுக்கப்படாவிட்டாலும், தைரியத்துடனும், பொறுமையுடன் பணியாற்ற மறவாதீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், பிரச்சனைகளில் இருந்து விரைவில் வெளிவரலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் எந்தவிதமான மோதலிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சற்று சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்பு சில சமயங்களில் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். அவசர அவசரமாக எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் வருத்தப்பட வைத்துவிடும். இந்த காலகட்டத்தில், வாழ்க்கை துணையுடன் சிறிய விஷயங்களில் கூட கருத்து வேறுபாடு உண்டாகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விட்டுகொடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
சிம்மம் - ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்காது. உங்களது அலட்சிய போக்கினால், உடல்நலம் வெகுவாகக் குறையக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்கள், இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்பை பெறலாம். வணிகர்கள் தங்கள் திட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வரலாம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்தால், நல்ல லாபம் ஈட்ட முடியும். வார இறுதியில் வாழ்க்கை துணையுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வரவை மீறிய செலவை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கன்னி - இந்த வாரம் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் நிறைந்தது என்றே சொல்லலாம். எடுத்த செயலை முடிப்பதில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். இதற்கெல்லாம் பயப்பட தேவையில்லை. தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ள வேண்டிய நேரம். இந்த வாரம் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில், பணி நிமித்தமான பிரயாணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதுதவிர, புதிய பொறுப்புகளும் உங்களிடம் ஒப்படைக்கப்படும். வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் கவனத்தோடு இருக்க வேண்டிய காலமிது. ஆன்லைன் வர்த்தகர்களுக்கு இந்த வாரம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த வாரம் புதிய வணிகத்தைத் தொடங்கினால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வீட்டின் உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை குறித்து பேசுகையில், இந்த வாரம் சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
துலாம் - வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வீட்டின் சூழல் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிடுவீர்கள். குழந்தைகள் மூலம் சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு மேலும் பலம் பெறும். இந்த நேரத்தில், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் உதவியுடன், நீங்கள் ஒரு பெரிய நன்மையை அடைவீர்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஒப்படைக்கப்படும் பெரிய பொறுப்புகளை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும். இதனால், பதவி உயர்வை விரைவில் பெறுவீர்கள். இந்த முழு வாரத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டால், அது உங்களுக்கு மிகவும் நல்லது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
விருச்சிகம் - இந்த வாரம் உங்கள் நடத்தை மற்றும் பேச்சில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்களது கட்டுப்பாடற்ற கோபமும், கடுமையான வார்த்தைகளும் உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விலக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. வீட்டின் பெரியவர்கள் ஏதாவது அறிவுரை கூறினால், அதனை புறக்கணிக்காதீர்கள். உடன்பிறப்புகளுடனான ஒற்றுமை மேம்படும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரத்தில் மாமியாருடன் வாக்குவாதம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிதானத்தை கையாள வேண்டும். உங்கள் வேலையைப் பொருத்தவரை, அலுவலகத்தில் சக ஊழியர்கள் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் சிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரம் நிதி நிலை நன்றாக இருக்கும். பெரியதாக செலவிட திட்டமிட்டால், நேரம் அதற்கு சாதகமாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
தனுசு - வாரத்தின் தொடக்கம் பணியிடத்தில் அவ்வளவு நல்ல சூழல் இருக்காது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர்களுடனான போட்டியும் கணிசமாக அதிகரிக்கும். இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கூட்டாளிகளுடன் நல்லுறவு ஏற்படும். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் இதற்கு சாதகமானது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்கு பண உதவி செய்யலாம். வாழ்க்கை துணையுடனான உறவு வலுபெறும். ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளில் உங்கள் காதலியின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலையைப் பொருத்தவரை, மாறிவரும் வானிலை காரணமாக ஏதேனும் சிக்கல் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
மகரம் - இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வைராக்கியம், உற்சாகம் மற்றும் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். இந்த வாரம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை மேலும் அதிகரிக்கும். வாரத்தின் ஆரம்ப நாட்கள் மிகவும் நன்றாகவும் அமைதியாகவும் இருக்கும். வேலை செய்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிலுவையில் உள்ள பணிகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முதலாளியின் கோபத்திற்கு ஆளாகலாம். அலுவலகத்தில் நீங்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறலாம். வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோருக்கு உடன்பிறப்புகளுடன் நல்ல உறவு இருக்கும். இந்த நேரம் வாழ்க்கை துணை மீதான காதல் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, நேரம் சரியில்லை என்று கூறினாலும், ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நாள்: ஊதா
கும்பம் - இந்த வாரம் சிறிது கலக்கமும், விரக்தியையும் உணரலாம். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள், அதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். இந்த நேரம் வணிகர்களுக்கு சாதாரணமாக தான் இருக்கும். பெரிய லாபம் எதுவும் கிடைக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் சில உறுப்பினர்களுடன் உறவு மோசமடைவதால், வீட்டில் பதற்றமான சூழல் நிலவும். வார இறுதியில், வாழ்க்கை துணைக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட நேரிடும். அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்த வாரம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மீனம் - இந்த வாரத்தில் நல்ல திட்டமிடல் அவசியம் என்பதால், அவசரத்தையும் பீதியையும் தவிர்த்தாக வேண்டும். வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். இந்த நாட்களில் உங்கள் வணிகத்தை விரைவுபடுத்துவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும். பேசும் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். விவாதத்திலிருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையெனில் அது உங்கள் உடல்நலத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்கள் பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். மறுபுறம், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் காதலியை புறக்கணிக்கும் தவறை மட்டும் செய்யாதீர்கள். காதல், கல்யாணத்தில் முடிவடைவதற்கான நேரம் வந்துவிட்டது. மற்றவர்களின் உத்தரவின் பேரில் நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரம் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சற்று மோசமானது தான்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நாள்: வியாழன்