இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லதாம்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். 2024ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லதாம்!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். 2024ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.30-10.30 மணி வரை. மாலை 4.30-5.30 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. மகம், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உங்கள் செயல் திறனால் நல்ல பலன்களைப் பெறலாம். நீண்ட காலமாக தடைப்பட்ட தொழிலதிபர்களின் ஒப்பந்தமும்இன்று இறுதி செய்யப்படலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யும் தவறை செய்யாதீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு விஷயங்களில் வாக்குவாதங்கள் வரலாம். இதனால் உங்கள் வீட்டின் அமைதி குலைந்து போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, அரசியல் தொடர்புடையவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். வேலை தேடிபவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் தாயுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று வணிகர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். இன்று நீங்கள் புதிய வேலைகள் தொடங்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக இன்று கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். பெற்றோரின் வார்த்தைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், தேவையற்ற கோபத்தையும் கவலையையும் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, வேலை அடிப்படையில் இன்று கலவையான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலன் கிடைப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஏதாவது சிறப்பாகச் செய்யலாம். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணத்தை திரும்பப் பெறலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு செல்லலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் காலை 11 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று பெரிய கவலைகள் தீரும். முக்கிய வணிக முடிவுகளை எடுக்க இன்று ஏற்ற நாள். அரசு ஊழியர்களுக்கு அலுவலகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பண விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், ஒற்றுமையும் நிலவும். உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் மனதளவில் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:20 மணி முதல் மாலை 4:20 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் இன்று முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சிறு முதலீடுகளை செய்யலாம். வியாபாரிகள் மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இன்று பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பாதகமான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். இன்று கவனக்குறைவை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், அதிகப்படியான டீ மற்றும் காபி உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9:15 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இதனால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். பண விஷயங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். விரைவில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இன்று தங்கள் எந்த வேலையையும் முடிக்காமல் விட வேண்டாம். இல்லையெனில் வரும் நாட்களில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள், இன்று ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். சில்லறை வியாபாரிகளுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் இணக்கம் ஏற்படும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். உடல் நலம் சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வணிகத் திட்டங்களில் நீங்கள் சமீபத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தால், நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பணி ஒதுக்கப்படலாம். உங்கள் வேலை திறனால் உயர் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மதியம் 2:20 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் பணிச்சுமை சற்று குறையலாம்.இன்று நீங்கள் உயர் அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான விவாதத்தை நடத்தலாம். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, அதிகரித்து வரும் செலவுகளை குறைக்கவும். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் பதற்றமான சூழ்நிலை தோன்றும். இன்று உங்கள் உடன்பிறப்புடன் தகராறு ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். நீங்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று எந்தவொரு கடினமான வேலையையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கிய வணிக முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் குழந்தை தொடர்பான முக்கியமான முடிவையும் எடுக்கலாம். உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:30 மணி முதல் காலை 9 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, நீங்கள் வேலைக்காக எடுத்து வந்த முயற்சிகளில் இன்று வெற்றி பெறலாம். வணிகர்கள் புதிய முதலீடு செய்ய இதுவே நல்ல நேரம். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறித்து நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்றால், இன்று நீங்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பெற்றோருடனான உறவு மேலும் வலுவடையும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், தேவையற்ற செலவுகளால் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0