ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

ரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021

ரிஷபராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. உங்கள் ராசிக்கு ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய இடங்களை குருபகவான் பார்க்கிறார். குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்துவந்த சோர்வான மனநிலை மாறும். இதுவரை திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டீர்களே... இதோ இப்போது அந்தக் கவலை தீரும். உங்களின் பழைய மதிப்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும். கடன் சுமை கணிசமாகக் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த படி முடிப்பீர்கள். உடலில் இதுவரை இருந்துவந்த ஆரோக்கியக் குறைவுகள் நீங்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வீண் அச்சங்களில் இருந்து விடுபடுவீர்கள். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை பூர்வபுண்ணிய மற்றும் புத்திரஸ்தானத்துக்கு ஏற்படுவதால், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கவும், அவர்கள் மூலம் பணவரவு மற்றும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதை கிடைக்கும். எதிர்பார்த்த பணம், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் தீரும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களைகட்டும். கல்வியாளர், அறிஞர் களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்

15.11.2020 முதல் 5.1.2021 வரை

குருபகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் நற்பலன்கள் அதிகரிக்கும். வீடு, மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை

திருவோணம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், ஆடை ஆபரணங்கள் சேரும். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை

அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேற்று மொழியினர் உதவுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.

23.5.2021 முதல் 22.7.2021 வரை

குரு பகவான் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வீடுகட்டக் கடன் கிடைக்கும்.

6.4.2021 முதல் 14.9.2021 வரை

குருபகவான் அதிசாரமாகியும் வக்ரமாகியும் கும்ப ராசியில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால், அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். அனைத்திலும் கவனம் தேவை. முக்கியப் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

வியாபாரிகளுக்கு:

முதலீடுகள் லாபம் தரும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீர்ப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், உணவு, ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உங்களைப் பற்றிக் குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வசதி- வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை - திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் கொண்டைக் கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் தடைகள் நீங்கும்; வெற்றி கிடைக்கும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0