இந்து மதத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்!
இந்த நவீன உலகிற்கு இந்து மதம் பல்வேறு நல்ல விஷயங்களை வழங்கியுள்ளது. அவற்றுள் யோகா, பிராணயாமம், தியானம், ஜோதிடம், தந்திரம் போன்றவை சிலவாகும்.
சிந்து என்ற நதியின் பெயரிலிருந்து உருவானது இந்து மதம் என்ற வார்த்தை. சிந்து என்பது ஒரு பெரிய நதியின் பெயராகும். பெர்சியர்கள் இதனை இந்து என்று உச்சரித்து வந்தனர். சிந்து நதியை ஒட்டிய இடங்களில் தான் இந்து மதம் தனது பாரம்பரியத்தை தொடங்கியது.
தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் சைவ சமயத்தை பின்பற்றி வந்த வேளையில், சிந்து நதியின் அருகில் வசித்தவர்கள் வைஷ்ணவத்தை பின்பற்றினர். இந்த இரண்டு சமயங்களும் இணைந்து இந்து மதம் என்று அறியப்பட்டது. 'ஓம்' என்ற வார்த்தை இந்து மதத்தின் சின்னமாக விளங்குகிறது.
வாழ்க்கைக்கான அர்த்தம்
இந்து மதத்தின் படி, வாழ்க்கைக்கான அர்த்தம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.
தர்மம் - நியாயம்
அர்த்தம் - அறிவு
காமம் - மாயை மீது கட்டுப்பாட்டுடன் இருப்பது
மோட்சம் - வலி மற்றும் துயரத்திலிருந்து விடுதலை அடைவது
இந்து மதம் வழங்கிய நல்ல விஷயங்கள்
இந்த நவீன உலகிற்கு இந்து மதம் பல்வேறு நல்ல விஷயங்களை வழங்கியுள்ளது. அவற்றுள் யோகா, பிராணயாமம், தியானம், ஜோதிடம், தந்திரம் போன்றவை சிலவாகும்.
மகாபாரதம்
மனித நுண்ணறிவின் தனித்துவமான மற்றும் விவரிக்க முடியாத புதையல் என்று அறியப்படுவது மகாபாரதம். பழங்கால கிரேக்க இதிகாசங்களான ‘ஒடிசி' மற்றும் ‘இலியட்' ஆகியவற்றை விட 10 மடங்கு பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரிய புத்தகமாக மகாபாரதம் அறியப்படுகிறது. இலியட் மற்றும் ஒடிசி ஆகிய இதிகாசங்கள், பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ட்ராய் நகர குடிமக்கள் ஆகியோர் இடையே நடந்த ட்ரோஜன் போருக்கு பிறகு நடந்த நிகழ்வுகளை விவரிக்கின்றன. இருப்பினும் வியாசர் எழுதிய இந்த மகாபாரதம் உலகத்தில் உள்ள இதிகாசங்கள் எல்லாவற்றையும் விட பெரியது. மகாபாரதம் மொத்தம் 2,00,000 வரிகளுக்கு மேல் கொண்ட ஒரு இதிகாசம். இது ஒரு பிரம்மாண்டமான இதிகாசமாகும்.
எண் 12-ன் முக்கியத்துவம்
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. மந்திரம், ஜெபம் போன்றவற்றை ஜெபிக்கிறவர்கள் 12ன் மடங்குகளில் அதனை ஜெபிக்கின்றனர். அனாகதம் என்ற இருதய சக்கரத்திற்கு 12 இதழ்கள் உள்ளன. ஜோதிடத்தின் படி ராசிகள் எண்ணிக்கை மொத்தம் 12. வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 12 ஆண்டு காலம் ஆகும்.
மும்மூர்த்திகள்
பிரபஞ்சம் என்பது கடவுளில் தொடங்கி மீண்டும் கடவுளைச் சென்று அடைவதாகும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றை அடிப்டையாகக் கொண்டது. படைக்கும் தொழிலை செய்பவர் பிரம்ம தேவர். காக்கும் தொழிலை செய்பவர் பகவான் விஷ்ணு. பல நேரங்களில் உலகில் நீதியை, தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு மனித அவதாரம் கொண்டு பூமியில் பிறந்திருக்கிறார். அழிக்கும் கடவுளாக அறியப்படுபவர் சிவபெருமான். அழிவு இல்லையேல் படைப்பு இல்லை. பெண் ஆற்றலை படைத்தவர் சிவபெருமானின் மனைவியான சக்தி தேவி. சக்தி இல்லையேல் சிவன் சக்தியற்றவனாகிறார்.